JoomlaLock.com All4Share.net

Background Video

மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி, அடுத்து நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை சந்திக்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் கூறியுள்ளது.சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. இது அக்கட்சிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து, 2019ம் ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலையும் பிரதமர் மோடி தலைமையில் சந்திக்க உள்ளது.இந்நிலையில், ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் பாரதி மேன்டா பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி: வளர்ச்சி மற்றும் தொலைநோக்கு சிந்தனையுள்ளவர் நிதிஷ்குமார் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

 

பீஹார் முதல்வராக சிறப்பாக பணியாற்றும் அவர் , பெண்களுக்கு அதிகாரம் அளித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, இலவச சைக்கிள், மதுவிலக்கு அமல் என பல நடவடிக்கைகள் எடுத்துள்ளார். இலவச மின்சாரம், அனைத்து வீடுகளுக்கும் இலவச குடிநீர், அரசு பணிகளில் பெண்களுக்கு 35 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவற்றை அமல்படுத்தியுள்ளார். எனவே அனைத்து மதசார்பற்ற மற்றும் சமூகத்தில் அக்கறையுள்ள சக்திகள் அனைத்தும் ஒன்று இணைய வேண்டும்.

வரும் தேர்தலில், நிதிஷ் குமாரை பிரதமராக முன்னிறுத்தி லோக்சபா தேர்தலை சந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Published in இந்தியா

ஜூன் 21-ந்தேதி 2-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை பிரம்மாண்டமான முறையில் கொண்டாட மத்திய அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது. இந்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் யோகா நிகழ்ச்சிகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக நிதிஷ்குமார் கூறுகையில், நான் சிறுவயது முதல் யோகா பயிற்சி செய்து வருகிறேன். ஆனால், நான் அதை பெருமையாக சொல்லிக் கொண்டது இல்லை. குஜராத்தில் மதுவுக்கான தடை நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே உள்ளது. இதில் பிரதமர் மோடிக்கு எந்த பங்கும் இல்லை. எனவே, அதற்கான பெருமை அவரை சேராது. யோகா என்பது இயற்கையான ஒரு பயிற்சிதான். ஆனால், நாடு முழுவதும் மதுவுக்கு தடையை கொண்டு வராமல் யோகாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில் எவ்வித பயனும் இல்லை. மதுவுக்கு அடிமையானவர்களால் யோகாப்பயிற்சியை செய்ய இயலாது. மதுவை விற்று அரசு வருமானத்தை ஈட்டுவதை விடுத்து மாற்று வழிகளில் வருமானத்தை தேட வேண்டும். சர்வதேச யோகா தின நிகழ்ச்சி பொது நிகழ்ச்சி அல்ல. அது பா.ஜ.க.வின் கட்சி சார்ந்த நிகழ்ச்சியாகவே நான் கருதுகிறேன் என நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…