JoomlaLock.com All4Share.net

Background Video

உத்தர்காண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலானோர், பிதோகார்க் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையினர் ஆகியோர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Published in இந்தியா

சவுதி அரேபியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலை அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் ஜெத்தா பகுதியில் அமைந்துள்ளது அமெரிக்க தூதரகம். இங்கு தாக்குதல் நடத்தும் பொருட்டு வெடிகுண்டுடன் வந்த தற்கொலை தீவிரவாதியை அங்கு பாதுகாப்பில் இருந்த அதிகாரிகள் இனம் கண்டு முறியடித்துள்ளனர்.

தீவிரவாதியை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதும் எடுத்து வந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் அந்த தீவிரவாதி உடல் சிதறி கொல்லப்பட்டுள்ளார். தாக்குதலை தடுக்க முயன்ற பாதுகாப்பு அதிகாரிகள் இருவருக்கு பலத்த காயம் ஏற்படுள்ளத்காக கூறப்படுகிறது.

அமெரிக்க நாடு தனது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் இந்த வேளையில் அந்த நாட்டின் தூதரகம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
Published in உலகம்

சென்னையில் சொகுசு காரைஒட்டி விபத்து ஏற்படுத்திய தொழிலதிபர் மகள் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபரின் மகள் ஐஸ்வர்யாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேத்துப்பட்டுவை சேர்ந்த ஐஸ்வர்யா தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர் ஆவார். தரமணியில் அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதி முனுசாமி என்பவர் இறந்தார்.

Published in தமிழகம்

இலங்கையில் போர் முடிவடைந்து 7 வருடங்களாகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் படை முகாம்கள் விலக்கிக் கொள்ளப்பட்ட சில இடங்களில் இன்னமும் வெடிப் பொருட்கள் அகற்றப்படாத நிலை காணப்படுகின்றது.

அந்த இடங்களில் மிதிவெடி அபாய எச்சரிக்கை அறிவிப்புகள் காணப்படுவதால் இராணுவம் விலக்கிக் கொண்ட தங்கள் காணிக்குள் செல்ல முடியாதிருப்பதாக காணி உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தங்கள் காணிகளில் காணப்படும் மிதிவெடிகள், கண்னி வெடிகளை அகற்றி விரைவாக தங்களிடம் அதனை கையளிக்க வேண்டும் என அவர்கள் கோருகிறார்கள்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொம்மாதுறை, மாவடிவேம்பு மற்றும் ஈரளக்குளம் உட்பட சில இடங்களில் இதே நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது.

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான சாலையில் மாவடிவேம்பு இராணுவ முகாம் விலக்கிக் கொள்ளப்பட்டு மூன்று வருடங்களாகின்றன என காணி உரிமையாளரொருவர் கூறுகின்றார்.

இருபது வருடங்களாக தனது காணியில் நிலைகொண்டிருந்த இராணுவம் விலக்கிக் கொள்ளப்பட்டாலும் மிதிவெடிகள் அகற்றப்படும் வரை நுழைய வேண்டாம் என இராணுவம் அறிவித்துள்ளதால் தான் இன்னமும் காணிக்குள் நுழையவில்லை என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

சில நாட்களுக்கு முன்பு காணிக்குள் பரவிய தீ மற்றும் வெப்பம் காரணமாக வெடிப் பொருட்கள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியில் மக்கள் பீதியடைந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரு நிலப்பரப்பில் கண்னி வெடிகளை அகற்றும் பணிகள் ஒரளவு பூர்த்தியடைந்திருந்தாலும் இராணுவம் மற்றும் பொலிஸ் நிலை கொண்டிருந்த இடங்களில் காணப்படுவது பற்றி ஏற்கனவே தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் பி. எம். எஸ் சார்ளஸ் கூறுகின்றார்.

பொலிஸ் மற்றும் இராணுவம் அதிகாரபூர்வமாக அந்த காணியை கையளித்த பின்னர் அதனை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

இரு வாரங்களுக்கு முன்னதாக இவ்வாறு அகற்றப்பட்ட இரு இடங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டதாகவும் இது போன்று ஏனைய இடங்களும் கையளிக்கப்படும் என்றும் அரசாங்க அதிபர் பி. எம். எஸ் சார்ள்ஸ் குறிப்பிடுகின்றார்.

Published in இலங்கை

ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி சட்டசபையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், கடந்த 2015 ஜனவரி 15ம் தேதியிலிருந்து இதுவரை பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் போன்ற சம்பவங்களால் 47 பாதுகாப்பு படையினர், 108 பயங்கரவாதிகள் என 190க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். வன்முறை தொடர்பாக 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் தொடர்பாக 4 மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனக்கூறியுள்ளார்.

Published in இந்தியா
பக்கம் 1 / 3
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…