JoomlaLock.com All4Share.net

Background Video

கர்நாடகா மாநிலம் சிக்மகளூரில் கள்ளப்பா என்ற டி.எஸ்.பி. வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ரவுடிகள் துணையுடன் குழந்தைகளை கடத்தி டி.எஸ்.பி. பணம் சம்பாதித்து வந்துள்ளார். குழந்தை கடத்தலில் ஈடுபட்டது 2 நாள் முன் வெளிச்சத்துக்கு வந்ததால் தற்கொலை என தகவல் தெரிவிக்கின்றன.

Published in இந்தியா
செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2016 00:00

124 கிலோ கஞ்சா மதுரையில் பறிமுதல்

124 கிலோ கஞ்சா மதுரையில் பறிமுதல் செய்யப்பட்டது. திருவாதவூரில் போதை தடுப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் செந்தில்பாண்டி, கண்ணன் ஆகிய இருவரும் 124 கலோ கஞ்சா வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இருவரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Published in தமிழகம்

டில்லியில் நடந்த யோகா நிகழ்ச்சியில் மத்திய நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கைய்யா நாயுடு கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:மோடி ஒரு நோக்கத்துடன் செயல்படுகிறார். மக்களும் இதனை புரிந்து கொள்ள தொடங்கி உள்ளனர். மோடி என்றால் வளர்ந்த இந்தியாவை உருவாக்குபவர் என்று அர்த்தம். அதாவது Modi - 'Making of Developed India. அதனால் தான் நாட்டு மக்கள் நரேந்திர மோடியை பின் தொடர்கிறார்கள். மோடி தனது மனதில் பட்டதை மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் பேசி வருகிறார். அதில் அவர் விடுக்கும் கோரிக்கைகளை மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.தூய்மை இந்தியா திட்டம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது பலரிடமும் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Published in இந்தியா

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் பிறந்தநாள் விழா கவர்னர் மாளிகையில் நேற்றிரவு கொண்டாடப்பட்டது. அப்ேபாது தியாகத்தின் அடையாளமான தாய்மை மற்றும் துப்புரவு ஊழியர்களுக்கு தனது பிறந்த நாளை அர்ப்பணிப்பதாக கிரண்பேடி தெரிவித்தார். செய்யும் தொழிலே தெய்வம் என்ற அடிப்படையில் நகராட்சி துப்புரவு ஊழியர்கள், கால்வாய் துப்புரவு செய்வோர், எலக்ட்ரிஷியன்கள், பிளம்பர்கள், தோட்டக்காரர்களை மாளிகைக்கு அழைத்து கவர்னர் பிறந்த நாளை கொண்டாடினார். இதில் தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, ஐஜி பிரவீர் ரஞ்சன், ஆளுநர் செயலர் தேவநீதிதாஸ் மற்றும் அரசு செயலர்களும் கலந்து கொண்டனர்.விழாவில் கவர்னர் கிரண்பேடி பேசும்போது, அரசு ஊழியர்கள் தான், அரசின் அடித்தளமாக உள்ளனர்.

ஊழியர்களின் செயல்பாடுகள்தான் அரசுக்கு நல்ல பெயரை ஈட்டித்தரும். அதிகாலை நாள்தோறும் 4.30 மணிக்கு எனது பணிகளை தொடங்குகிறேன். இரவு 11 மணிக்கு பணிகள் நிறைவடைகின்றன. ஒவ்வொரு அரசு ஊழியர்களும் நாட்டில் அன்றாடம் நடைபெறும் சம்பவங்களை அறிந்து கொள்ள வேண்டும். அரசின் நல்ல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பெற வேண்டும். இனிமேல் வார இறுதி நாட்களில் அதிகாலை 6 மணிக்கு துப்புரவு ஊழியர்களுடன் சேர்ந்து பணிபுரிவேன். சிறந்த ஊழியர்களுக்கு உரிய வெகுமதி தரப்படும் என்றார்.

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…