JoomlaLock.com All4Share.net

Background Video

பெண்கள் தங்களை ஆபத்துக்காலத்தில் தற்காத்துக் கொள்ள , பெப்பர் ஸ்பரே வாங்கி உபயோகிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், ஆபத்துக் காலத்தில் எதிராளியை நிலைகுலையச் செய்ய அவனை சத்தம் போட்டுத் திட்ட நல்ல கெட்ட வார்த்தைகளையும் கற்றுக் கொள்ளுங்கள்,

ஸ்னாப் டீலில் 300 ரூபாயிலிருந்து பெப்பர் ஸ்ப்ரே கிடைக்கிறது,சாவிக் கொத்து தாங்கி வரும் பெப்பர் ஸ்பரேக்களும் உள்ளன, தயவு செய்து பயன் படுத்திக் கொள்ளுங்கள், கேஷ் ஆன் டெலிவரி உள்ளது, 3 ன் விலை=630 ரூபாய் தான், இது இருந்திருந்தால் நேற்று ஸ்வாதி மரணித்திருக்க மாட்டாள்.

Published in வணிகம்
வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00

பேஸ்புக்கில் புதிய மாற்றம்!

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் இன்று பில்லியனிற்கும் மேற்பட்ட பயனர்களை தன்கத்தே கொண்டுள்ளது.

இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரித்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டத்தை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இதன் வரிசையில் தற்போது News Feed வசதியில் அதிரடி மாற்றம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

அதாவது இவ் வசதியின் ஊடாக செய்திகளை ஷேர் செய்து நண்பர்கள், உறவினர்களுடன் பகிரக்கூடியதாக இருக்கும்.

இந்த வசதியினை பல்வேறு வியாபார நிறுவனங்களும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன.

ஆனால் தற்போது நண்பர்கள் ஊடாக பகிரப்படும் செய்திகளை அதிகப்படுத்திக் காட்டும் அதேவேளை நிறுவனங்களின் செய்திகளை குறைத்துக்காட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நண்பர்கள், உறவினர்களின் பிணைப்பே மேம்படுத்த முடிவதுடன் புதிய பயனர்களையும் உள்வாங்க முடியும் என பேஸ்புக் நிறுவனம் எண்ணியுள்ளது.

சுவிற்சர்லாந்து நாட்டில் குற்றம் புரிந்த வெளிநாட்டவர்களை நாடுகடத்துவதற்காக புதிய சட்டம் அமுலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அகதிகளுக்கு எதிரான கொள்கைகளை உடைய சுவிஸ் மக்கள் கட்சி, கடந்த 2010ஆம் ஆண்டு ‘குற்றம் புரிந்த வெளிநாட்டிடவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்’ என ஒரு புதிய சட்டத்தை முன் மொழிந்தது.

இந்த சட்டத்திற்கு பெரும்பாலான மக்களும் ஆதரவு அளித்தனர். தற்போது இந்த விவகாரம் சுவிஸ் நாடாளுமன்றத்தில் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

குறித்த புதிய சட்டத்தில் 11 திருத்தங்கள் செய்து சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மத்தியில் விவாதத்திற்கு வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, எதிர்வரும் அக்டோபர் 1ஆம் திகதி முதல் இந்த புதிய சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 2017ஆம் ஆண்டு முதல் சட்டமாக்கப்படும் என தெரியவந்துள்ளது.

இந்த புதிய சட்டம் மூலம், குறைந்தது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கொலையாளிகள், கற்பழிப்பு குற்றம் நிரூபிக்கப்பட்டவர், போதை பொருள் கடத்தல்காரர், கொடூரமான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர்கள் நாடுகடத்தப்படுவார்கள்.

இவ்வாறு நாடுகடத்துப்படுபவர்கள் 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை சுவிஸ் நாட்டிற்கு மீண்டும் திரும்ப முடியாது.

சுவிஸில் பிறந்திருந்தாலும், சுவிஸ் குடியுரிமை இல்லாத வெளிநாட்டினர்களும் இந்த புதிய சட்டத்திற்கு உட்படுத்தப்படுவார்கள்.

எனினும், வெளிநாடுகளில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள குற்றவாளிகளுக்கு இந்த புதிய சட்டத்தினை அளிக்க சுவிஸ் நீதிபதிகளுக்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published in உலகம்
வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00

ரிலீஸ் தேதி கவலை வேண்டாம்: ஜீவா

ஜீவா நடிப்பில் கடைசியாக ‘போக்கிரி ராஜா’ படம் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இவருடைய நடிப்பில் அடுத்ததாக ‘கவலை வேண்டாம்’ என்ற படம் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மேலும் பாபிசிம்ஹா, சுருதி ராமகிருஷ்ணன், சுனைனா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தை ‘யாமிருக்க பயமே’ டி.கே இயக்கி வருகிறார். எல்ரெட் குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பை முடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தை கிறிஸ்துமஸ் திருநாளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

நயன்தாராவுடன் ஜீவா நடித்துள்ள ‘திருநாள்’ படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published in சினிமா
வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00

மோகன்லால் கையில் கபாலி

ரஜினி நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் ‘கபாலி’. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது 22ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிப்போயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ‘கபாலி’-யில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இணைந்திருக்கிறார். படத்தில் அல்ல, ‘கபாலி’ படத்தின் வியாபாரத்தில் இணைந்திருக்கிறார். அதாவது ‘கபாலி’ படத்தை கேரளாவில் மோகன்லால் வெளியிட இருக்கிறார். மோகன்லாலின் மேக்ஸ் லேப் நிறுவனம், ரூ.8.5 கோடிக்கு படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது.

இந்த தகவலை மோகன்லாலின் மேலாளர் ஆண்டனி, தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவ்வளவு பெரிய தொகைக்கு கேரளாவில் இதுவரை வேறு எந்தவொரு நேரடி தமிழ் படமும் வியாபாரம் ஆனதில்லை என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘தெறி’ படத்தின் கேரள விநியோக உரிமை 5.6 கோடி ரூபாய்க்கு விலை போனதாக அப்போது செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Published in சினிமா
பக்கம் 9 / 103
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…