JoomlaLock.com All4Share.net

Background Video

சுவாதி கொலைக்கும் தனக்கும் தொடர்பில்லை எனக்கூறி, ஜாமின் கேட்டு சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் , ராம்குமார் மனுதாக்கல் செய்துள்ளான்.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவன் கைது செய்யப்பட்டான். அவன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்ச்சித்த போது அவனை காப்பாற்றிய போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவன் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்நிலையில், ராம்குமார் இன்று புழல் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது, ராம்குமார் ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்துள்ளான். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராம்குமார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அந்த மனுவில் கூறியுள்ளதாவது:

சுவாதி கொலைக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. உண்மையான கற்றவாளியை காப்பாற்றவே என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொலை சம்பவத்திற்கு 2 நாளுக்கு முன் சுவாதியை யாரோ தாக்கியதாக கூறப்படுகிறது எனக்கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு குறித்து விசாரணை நடைபெற உள்ளது.

மேலும் இது பற்றி ராம்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை. போலீசாருடன் வந்த நபர்கள் தான். ராம்குமார் கழுத்தை அறுத்தது என்று எங்களுக்கு வந்த தகவலின்

படி ராம்குமாருக்கு ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் தொடர்பில்லை. கொலைக்கு முன்னர் சுவாதியை யாரோ தாக்கியுள்ளனர். இது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Published in தமிழகம்

கர்நாடகா மாநிலம் சிக்மகளூரில் கள்ளப்பா என்ற டி.எஸ்.பி. வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ரவுடிகள் துணையுடன் குழந்தைகளை கடத்தி டி.எஸ்.பி. பணம் சம்பாதித்து வந்துள்ளார். குழந்தை கடத்தலில் ஈடுபட்டது 2 நாள் முன் வெளிச்சத்துக்கு வந்ததால் தற்கொலை என தகவல் தெரிவிக்கின்றன.

Published in இந்தியா
செவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00

கரும்புலிகள் நாள் யூலை 5ம்

கரும்புலிகள் நாள் யூலை 5ம் திகதி 1987 – தமிழீழ விடுதலைப் போரின் தடைநீக்கிகளாக, உயிராயுதமாகி வெடித்து விடுதலைக்கு வலுச்சேர்த்த தற்கொடையாளர்களை நினைவுகொள்ளும் நினைவு வணக்க நிகழ்வு இந்த “தற்கொடையாளர் நாள்”.

முதலாவது தற்கொடையாளியாய்
தமிழீழத்திலிருந்து 05.07.1987’ல்
கரும்புலி கப்டன் மில்லரும் !!!
” தமிழ்நாட்டிலிருந்து 11.11.1993’ல்
கரும்புலி லெப் செங்கண்ணனும்
உதிராத உயிராயுத உயிர்பூவாய்…!!!

அன்றும் இன்றும் என்றும்
தமிழர் தரப்பின் சக்தி மிக்க ஆயுதமாகப் பார்க்கப்படுவது ~ இந்த உயிராயுதம் தான் [♥]

” போடா தமிழா போடா
கரும்புலி மில்லர் காட்டிய வழி நீ
போடா தமிழா போடா

மோதி ஏதிர்த்து மலையாய் இருபினும்
…மூச்சால் உடைக்கலாம்
உயர் நீதி உயிர்வாழ உயிரை நீ விடு
வெற்றி படைக்கலாம்

நெல்லியடியிலே மில்லர் தன்சாவை
வண்டியில் ஏற்றி பறந்தானே
பொல்லா வெறியர்கள் சாக தன்உயிரை
போக்கி மின்னலாய்மறந்தானே

வளரும்காலத்தில் மலரும்காலத்தில்
வசந்தகாலத்தில் விழுந்தமரம்
இளைய மாவீரன்மில்லர் தியாகம்தான்
இன்பதமிழீழம் கொண்டுவரும்.

Published in இலங்கை
செவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00

சிவகார்த்திகேயன் மகளின் கலாட்டா கேள்வி

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் சமீபத்தில் ஒரு தெலுங்கு சேனலில் பேட்டியளித்த இவர் ‘என் மகளுக்கு ரெமோ டீசர் மிகவும் பிடித்தது.

தினமும் என்னிடம் கேட்பாள், அந்த அம்பு உங்கள் மீது பட்டவுடன் ரெமோ ஆண்டியாக மாறிடுவீங்களாப்பா என்று, எனக்கு பதில் என்ன சொல்வதென்றே தெரியாது’ என சிவகார்த்திகேயன் கலகலப்பாக பேசியுள்ளார்.

Published in சினிமா
செவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00

சிம்புவுக்கு அம்மாவாகிறார் ஸ்ரேயா!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இந்த படத்தில் ஒரு கெட்டப்பில் நார்மலாகவும், இன்னொரு வேடத்தில் தாடி கெட்டப்பிலும், மற்றொரு வேடத்தில் 90 கிலோ வெயிட் போட்டும் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார் சிம்பு. மேலும், இதில் ஒரு வேடத்தில் சிம்பு திருமணமானவராகவும், அவருக்கு பிறக்கும் ஒரு குழந்தை இன்னொரு சிம்பு போலவும் காட்சி உள்ளதாம். அதனால் அந்த சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க முதலில் திரிஷாவை அழைத்தனர். ஆனால் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஓகேதான். ஆனால் இன்னொரு சிம்பு வுக்கு அம்மாவாக நடிப்பதுதான் பிடிக்கவில்லை. அப்படி நடித்தால் என்னை அடுத்தடுத்து அம்மா வேடங்களுக்கு நடிக்க அழைத்து விடுவார்கள் என்று மறுத்து விட்டார்.ஆனால் அந்த வேடத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடித்தால்தான் பொருத்த மாக இருக்கும் என்று பல முன்னணி நடிகைகளிடம் பேசி வந்தனர். இப்போது அந்த வேடத்துக்கு ஸ்ரேயா ஓகே சொல்லிவிட்டாராம். தற்போதைய நிலவரப்படி தமிழில் படவாய்ப்பு இல்லாத ஸ்ரேயா இது ஒரு என்ட்ரியாக இருக்கும் என்று நிக்கிறாராம். அதோடு, அவர் திரிஷ்யம் இந்தி ரீமேக்கிலும் தமிழில் கெளதமி நடித்த ரோலில் நடித்தவர். அந்த படத்தில் 16 வயது பெண்ணுக்கே அம்மாவாக நடித்த எனக்கு, இதில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை எனறு கூறினாராம்.

Published in சினிமா
பக்கம் 2 / 103
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…