JoomlaLock.com All4Share.net

Background Video

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் என்ற இடத்தில் மோட்டார் குண்டு வெடித்து 5 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published in இந்தியா

பெரம்பலூர் மாவட்டம் வெண்பாவூரைச் சேர்ந்த மோகன் என்பவர் நேற்று முன் தினம் வனப்பகுதியில் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மர்மமான முறையில் இறந்து கிடந்த மோகனின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரியாவிற்கும் மோகனிற்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு தீபிகா விஜயா என்று இரு மகள்கள் உள்ளனர். பிரியாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரைவிட 7 வயது குறைந்த ஆட்டோ டிரைவர் பிரபுவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால் இதனை மோகன் கண்டித்துள்ளார். 

இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் ஜாலியாக இருப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொல்ல சதித் திட்டம் போட்டுள்ளார் பிரியா.

இருவரும் வேப்பந்தட்டை - வெண்பாவூர் இடையே உள்ள வனப்பகுதி அருகே சென்ற போது அங்கு மறைந்திரந்த பிரபு மோகனை வழிமறித்து தாக்கியுள்ளார். அப்போது உடனிருந்த மனைவி பிரியாவும் சேர்ந்து அரிவாளால் கழுத்து மற்றும் முகத்தில் மோகனை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

மோகன் உயிரிந்துவிட்டதை உறுதிசெய்த பிரியாவும் கள்ளக்காதலன் பிரபுவும் அந்த இடத்தை விட்டு தப்பியோடியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தக் கொலை குறித்து பிரபு மற்றும் பிரியாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published in தமிழகம்

அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பர் எனக்கூறப்பட்ட ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் நாமக்கல் மாவட்டம் மோகனுார் அடுத்த செவிட்டுரங்கன்பட்டியில்..

உள்ள தன் பண்ணை வீட்டில் கடந்த மே 8 ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மரணத்திற்கு முன்னர் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.அந்த கடிதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் தனக்கும் அமைச்சர்

தொடர்பில்லை. விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைக்கும் தனக்கும் தொடர்பில்லை. தற்கொலைக்கு மற்றொரு ஒப்பந்ததாரர் பி.எஸ்.கே. தென்னரசு தான் காரணம். தனது வீட்டில் வருமான வரி சோதனை

நடைபெறுவதற்கு அவர் தான் காரணம். தன்னுடைய தொழிலுக்கு தென்னரசு தொந்தரவு கொடுத்தார். தொழில் போட்டி காரணமாக தனக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் தொடர்பு உள்ளதாக வதந்தி பரப்பினார். இவ்வாறு கடிதத்தில் சுப்ரமணியன் கூறியுள்ளார்

Published in தமிழகம்
செவ்வாய்க்கிழமை, 09 மே 2017 00:00

குப்பை லாரி மோதிய ஒருவர் உயிரிழப்பு!

சென்னை மயிலாப்பூரில் குப்பை ஏற்றிவந்த லாரி மோதியதில் கோவிந்தராஜ் என்பவர் உயிரிழந்துள்ளார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Published in தமிழகம்

பெரம்பலூர் மாவட்டம் அருமடலில் போராட்டம் நடத்தியும் அகற்றப்படாத டாஸ்மாக் கடையை பொதுமக்கள் பூட்டுபோட்டு பூட்டியுள்ளனர்.

மூன்றுமுறை சாலை மறியல் போராட்டம் நடத்தியும் கடையை அகற்றாததால் டாஸ்மாக் கடையை பூட்டியதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

Published in தமிழகம்
பக்கம் 1 / 31
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…