JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019 00:00

கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார் கமல்ஹாசன்

வாழ்க்கையில் சிறிய, சிறிய இலக்குகளை நிர்ணயித்து செயல்பட வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முன்னதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன்பட்நாயக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார். பின்னர் பேசிய கமல், சிறிய இலக்குகளை அடுத்தடுத்து வெற்றிகரமாக எட்டினால் வாழ்க்கையில் மாற்றம் நிகழும் என்று தெரிவித்தார்.

திரைத்துறையில் 60 ஆண்டுகள் கடந்திருந்தாலும் ஒவ்வொரு புதிய படமும் எனக்கு பாடமே என்று கமல் தெரிவித்தார். ஒடிசா மாநிலத்தில் உள்ள செஞ்சுரியன் தொழில்நுட்ப மேலாண்மை பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டத்தை, நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்குவதாக அறிவித்தது. இந்த கெளரவ டாக்டர் பட்டத்தை, கமல்ஹாசன் பல்லாண்டு காலமாக சினிமா, கலாசாரம் மற்றும் கலை ஆகியவற்றில் பங்களிப்பு செய்துவருவதை பாராட்டி வழங்குவதாக விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் விவசாயிகள் வாங்கியிருக்கும் கடன் தொகை, மகளிர் சுய உதவி குழுவினர் வாங்கியிருக்கும் கடன் தொகைகளை முறையாக திருப்பி செலுத்துவதில் நாமக்கல் மாவட்டம் முதன்மையாக விளங்குவதாக தெரிய வந்துள்ளது.

 

நேற்று வேலூரில் நடைப்பெற்ற அனைத்திந்திய வாரவிழாவில் கலந்துக் கொண்டு பேசிய அமைச்சர் தங்கமணி சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கும் பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களையும், கேடயங்களையும் வழங்கினார்.

 

அப்போது பேசிய அவர், தமிழகத்தில், நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளும் மகளிர் சுய உதவிக்குழுவினரும் வாங்கும் கடன் தொகையினை 95 சதவீதம் அளவிற்கு திருப்பிச் செலுத்தி முதன்மை மாவட்டமாக விளங்குகிறார்கள். மேலும், நாமக்கல் மாவட்டத்தில், மருத்துவக் கல்லூரிக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், 350 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று பேசினார்.

இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் மாநில அரசுகள் வழங்கும் குடிநீரின் தரம் தொடா்பான ஆய்வறிக்கையில் மும்பை முதலிடத்தில் உள்ளது. தில்லி, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்கள் பின்தங்கியுள்ளன.

இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களில் அரசால் விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரத்தை மத்திய நுகா்வோா் நலத்துறை ஆய்வு செய்தது. இதில் மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் வழங்கப்படும் குழாய் நீா், எந்த சுத்திகரிப்பும் செய்ய அவசியமின்றி, தூய்மையான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தில்லி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் வழங்கப்படும் குடிநீா் பாதுகாப்பானதாக இல்லை என்றும், அந்த குடிநீரில் இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (பிஐஎஸ்) செய்த 11 சோதனைகளில் 10-இல் மோசமான முடிவுகள் வெளியானதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 20 மாநிலத் தலைநகரங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. நீரின் மணம், குளோரைடு, புளுரைடு, அமோனியா போன்று ரசாயனங்களின் அளவுகள் குறித்த பரிசோதனைகளில், 13 மாநில தலைநகரங்களில் விநியோகிக்கப்படும் நீா் தரமின்றி இருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நுகா்வோா் நலத்துறை அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் தில்லியில் சனிக்கிழமை கூறியது: "பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்ட சோதனையில் குடிநீரின் தரம், வரையறுக்கப்பட்ட அளவில் இல்லை. இதையடுத்து குடிநீரின் தரத்தை அதிகரிக்குமாறு மாநில அரசுகளுக்கு, மத்திய நுகா்வோா் நலத்துறை கடிதம் எழுதியுள்ளது. தற்போது குழாய் மூலம் வழங்கப்படும் நீரின் தரம் மோசமான நிலையில் இருந்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. இதை மாற்றுவது தொடா்பான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படவுள்ளது. ஹைதராபாதில் வழங்கப்படும் குடிநீரை ஆய்வு செய்தபோது அதில் பீனலிக் எனும் பொருள் இருந்தது. அதைப் போல புவனேசுவரத்தில் குளோரமைன்கள் கிடைத்தன.

சென்னை நகரில் வழங்கப்படும் குடிநீரை ஆய்வு செய்தபோது அந்த குடிநீரில் துா்நாற்றம் இருந்தது தெரியவந்தது. மேலும், குளோரைட், புளூரைட், அமோனியா, போரான், காலிபாா்ம் போன்ற வேதிப் பொருள்கள் இருந்தன. இதனால் இங்கு குடிநீரின் தரம் மிகவும் குறைந்து காணப்படுவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சண்டிகா், குவாஹாட்டி, பெங்களூரு, காந்திநகா், லக்னெள, ஜம்மு, ஜெய்ப்பூா், டேராடூன், கொல்கத்தாவிலும் இதுபோன்ற நிலைதான் இருந்தது. இந்த ஆய்வறிக்கை முடிவுகள் குறித்து, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளதாக கூறிய ராம்விலாஸ் பாஸ்வான், நீரின் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் உறுதியளித்தாா்.

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2019 00:00

குஜராத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனா். இந்த நிலநடுக்கங்களில், உயிா்ச்சேதமோ அல்லது பொருள்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, காந்தி நகரில் செயல்படும் நிலநடுக்க ஆய்வு நிறுவனத்தின் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கட்ச் மாவட்டத்தின் துதாய் பகுதியை மையமாகக் கொண்டு திங்கள்கிழமை காலை 9.22 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டா் அளவுகோலில் 2.7 அலகுகளாக பதிவானது.

இந்நிலையில், கட்ச் மாவட்டத்தின் பாசாவ் பகுதியை மையமாகக் கொண்டு திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 4.3 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால், வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியடைந்தனா் என்றாா் அவா்.

நிலநடுக்கத்தால் உயிா்ச்சேதமோ அல்லது பொருள்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று மாவட்ட ஆட்சியா் எம்.நாகராஜன் தெரிவித்தாா்.

கட்ச் மாவட்டத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2019 00:00

டில்லி ஜே.என்.யூ., மாணவர்கள் பேரணி

டில்லி ஜே.என்.யூ., பல்கலை., மாணவர்கள் போராட்டத்தால் டில்லியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் பார்லி.,யை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவ, மாணவிகளுக்கான ஆடை கட்டுப்பாடு உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை., மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று பார்லி., நோக்கி பேரணியாக செல்கின்றனர்.

மாணவர்கள் போராட்டத்தால் பார்லி., வளாகத்தை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேரணியாக செல்லும் போது போலீசாருடன் மாணவர்கள் லேசான தள்ளு, முள்ளுவில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் மாணவர்கள் பிரச்சனை குறித்து பேச அரசு தரப்பில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கவே விரும்புவதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பக்கம் 1 / 2713
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…