JoomlaLock.com All4Share.net

Background Video

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, ரிசர்வ் வங்கியின் துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார். செப்டம்பர் முதல் வாரத்தில் தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்கும் ரகுராம் ராஜனின் பதவிக் காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, உர்ஜித்…
மத்திய பிரதேசத்தில் கனமழையினால் கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் மத்தியப் பிரதேச சட்னா மாவட்டத்தில்…
இந்திய பொருளாதாரம் குறித்து மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பங்கேற்று பேசி வருகிறார். குறைந்த செலவில் உற்பத்தி கொள்கை, சீனாவின் வலுவான பொருளாதார வளர்ச்சியை வழிவகுத்தது என்று ஜெட்லி பேசியுள்ளார். உற்பத்தி தொழில் பெரிய தொழில் என்றும்…
காஷ்மீரில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருவதால் அங்கு பதற்றமான நிலை நீடித்து வருகிறது. இதனால் அங்கு 43வது நாளாக இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. ஜூலை 8 ம் தேதி அன்று ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் பயங்கரவாதி புர்கன் வானி, பாதுகாப்பு…
உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆடை என்ற புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது பிரதமர் மோடியின் சூட்.2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதி பிரதமர் மோடி பயன்படுத்திய சூட் ஏலம் விடப்பட்டது. இந்த சூட் ரூ.4 கோடிக்கு ஏலம்…
காஷ்மீரில் 40 நாட்களுக்கு மேலாக பதற்றம் நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 8ம் தேதி ஹிஷ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வாணி பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரில் கடந்த 40 நாட்களுக்கும்…
நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் 36,582 கோடி டாலராக (ரூ.24.14 லட்சம் கோடி) அதிகரித்திருந்தது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பு மதிப்பு டாலரில் மறு…
12 வயதில் இருந்து சிகரெட் சூடு... பலமுறை பலரால் பலாத்காரம் என சித்ரவதைக்கு ஆளான இளம்பெண் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளார். 10 ஆண்டுகளாக 400க்கும் மேற்பட்டவர்களால் பலாத்காரத்திற்கு ஆளான அந்த இளம்பெண்ணின் கதை கேட்பவர்களின் இதயங்களில் ரத்தத்தை வரவழைக்கிறது.…
சபரிமலை அய்யப்பன் கோவிலை ஆண்டுதோறும் திறந்துவைக்கலாம் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் கருத்துக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மதம் மற்றும் வழிபாட்டு பிரச்சனைகளில் தலையிட எந்த அரசாங்கத்திற்கும் உரிமையில்லை என கூறினார்.
விஜய் மல்லையாவின் ரூ.6000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்க அமலாக்கதுறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மல்லையாவின் வங்கி கடன் மோசடி வழக்கு விவரங்களை சிபிஐயிடம் அமலாக்கதுறை கேட்டுள்ளது. சிபிஐயிடம் இருந்து விவரங்களை அறிந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறுவை சிகிச்சையின் போது போடப்பட்ட தையல்களை பிரிப்பதற்காக சோனியா காந்தி நேற்று முன்தினம் கங்காராம் மருத்துவமனைக்கு சென்றார்.தையல்கள் பிரிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அங்கு அவர் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அடுத்த 2 நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என மருத்துவமனை…
கேரளாவில் கல்வி வளர்ச்சிக்காக 10ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கேரள நிதி அமைச்சர் தாமஸ்ஐசக் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெற்று இயங்கும் பள்ளிகளை நவீனப்படுத்த கேரள அரசு ரூபாய் பத்தாயிரம் கோடி ஒதுக்கீடு…
வெளிநாட்டு பயணிகள் அதிகம் வரும் விமான நிலையங்களில் சென்னை விமான நிலையத்திற்கு 3வது இடம் கிடைத்துள்ளது.இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்தியில், கடந்த ஆண்டு ஜூலையுடன் முடிவடைந்த காலகட்டத்தில், 26.22 சதவீத வெளிநாட்டு பயணிகள் வருகையுடன் டில்லி விமான நிலையம்…
தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க முடியாது என கர்நாடக அரசு மீண்டும் உறுதிப்பட தெரிவித்துள்ளது. பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா இதனை தெரிவித்துள்ளார். தங்களிடம் போதிய தண்ணீர் இல்லை என கூறிய அவர் தமிழகம் உச்சநீதிமன்றத்தை அணுகினால்…
ஒலிம்பிக்கில் ஆடவர் 74 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்க இந்திய வீரர் நர்சிங் யாதவ் தகுதி பெற்றிருந்தார். இந்நிலையில், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து இந்திய ஒலிம்பிக் சங்கம் நர்சிங் யாதவை இடைநீக்கம் செய்து…
ராஜஸ்தான் மாநில ஜெய்சால்மரில் பாகிஸ்தான் உளவாளி நந்தலால் மகாராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அவர் 35 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகளை இந்தியா கொண்டுவந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் ஒரு மாதத்துக்கும் மேலாக வன்முறை சம்பவங்கள் நீடித்து வருகிறது. எனவே காஷ்மீரில் அமைதி ஏற்படுத்த இந்தியா பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவு துறை செயலாளர் அய்ஜாஸ் அகமது சவுத்ரி, இந்திய வெளியுறவு துறை செயலாளர் ஜெய்சங்கருக்கு…
புல்வாமா மாவட்டத்தில் கிரிவ் பகுதியில் நேற்றிரவு பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கு இடையே மீண்டும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த சமீர் அகமது மூங்கா அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. காஷ்மீரின் பல்வேறு…
டெல்லியில் உள்ள சாரை காலே கான் பகுதியில் நடந்த சோதனையில் 9 வெளிநாட்டு துப்பாக்கிகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து டெல்லி மற்றும் சுற்றுப்புற மாநிலங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் சோனியா காந்தி கடந்த 2-ஆம் தேதி பிரசாரம் செய்தார். அப்போது அவருக்கு இடது தோள் பகுதியில்…
உறியடி விழாவுக்கு மும்பை ஐகோர்ட் விதித்த கட்டுப்பாட்டை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தது. மஹாராஷ்டிராவில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, உறியடி திருவிழா நடக்கும். ஒருவர் மீது ஒருவர் ஏறி, மனித, 'பிரமிட்' உருவாக்கி, உயரத்தில் தொங்கவிடப்படும் பானையை உடைக்க…
கோபால்கஞ்ச் மாவட்டத்தில் நேற்று மாலை சிலர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். வாந்தி, தலைசுற்றலால் பாதிக்கப்பட்ட அவர்களில் 13 பேர் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கள்ளசாராயமே இவர்களது உயிரிழப்பிற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. இதுபற்றி பேசிய ஐக்கிய…
எல்லையில் சீன படைகள் அவ்வப்போது அத்துமீறுவதை தடுப்பதற்காக லடாக் பகுதியில் கூடுதல் படைகளை குவிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. போர் வீரர்கள் மட்டுமின்றி உளவு விமானங்கள், ஆயுதங்கள் அடங்கிய டேங்கர்களையும் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் நிறுத்தி வருகிறது. இந்திய ராணுவமும், விமானப்படையும்…
அசாம், பஞ்சாப், மணிப்பூர் மாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்தமான் துணை நிலை கவர்னரும் நியமிக்கப்பட்டுள்ளர்.மத்திய அமைச்சரவையிலிருந்து சமீபத்தில் ராஜினாமா செய்த பா.ஜ., மூத்த தலைவர் நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் தேர்தல் நடைபெற உள்ள பஞ்சாப்…
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…