JoomlaLock.com All4Share.net

Background Video

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஊதிய உயர்வு கோரி கே.எஸ்.ஆர்.டி.சி பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலம் கடப்பா மாவட்டத்தில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். காலை முதல் அங்கு பலத்த மழை பெய்து வருவதால் கட்டிடம் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை சி.பி.ஐ. தனி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு திங்கள்கிழமை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டு உள்ள ஆ.ராசா மற்றும் கனிமொழி எம்.பி…
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். நவ்காம் பகுதியில் 4 பேரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
சமையல் எரிவாயுவை போல மண்ணெண்ணெய்க்கும் நேரடியான மானியம் வழங்க மத்திய அரசு திட்டமிடுவதாக பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி நேரத்தின் போது இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்தார். அப்போது சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு நேரடியான…
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தடையை மீறி பேரணியில் பங்கேற்க முயன்ற ஹுரியத் பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் சையது அலி ஷா கிலானி, மீர்வாய்ஸ் உமர் பாரூக் ஆகியோரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கியத்…
கடந்த 1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. அதன் 17வது ஆண்டு கார்கில் வெற்றி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. சென்னை தீவுத்திடலில் அமைந்துள்ள போர் நினைவு சின்னத்தில் ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். 1803 -…
3 சீன பத்திரிகையாளர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டதின் பிரதிபலனை இந்தியர்கள் அனுபவிப்பார்கள் என்று சீன ஊடகங்கள் மிரட்டல் விடுத்துள்ளன. வுகியாங், டாங்லு மற்றும் ஷி யோங்காங் ஆகிய மூன்று சீன நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர்கள் இந்தியாவில் உள்ள சீன நாட்டின் சின்குவா…
பீகார் மாநிலம் முசாபார்பூரில் ஆட்டோ- மீது பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தக்கோரி ஜேகேசஎன்பிபி கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது உச்சநீதிமன்றம். ஜம்முவில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு…
ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரச்சனையை மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி எழுப்பியதால் அமளி ஏற்பட்டது. இதனால் அவை 3 வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியாவில் உளவுபார்த்ததாக, சீனாவை சேர்ந்த மூன்று பத்திரிகையாளர்களை நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு சீன அரசின் பத்திரிகையான குளோபல் டைம்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அந்த பத்திரிகை தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளதாவது: இந்தியாவுக்கு எப்போதும் சந்தேக குணம் உண்டு.…
அனந்த்நாக் நோக்கி அணிவகுத்து செல்ல முயன்ற காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மிர்வைஜ் உமர் பரூக் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் காஷ்மீரில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதால் கைது செய்யப்பட்டார்.
வழக்கறிஞர் சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 125 வழக்கறிஞர்களை அகில இந்திய பார்கவுன்சில் இடைநீக்கம் செய்துள்ளது. அகில இந்திய பார்கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டு நடவடிக்கைக் குழு வழக்கறிஞர்களும், வேறு சில வழக்கறிஞர்கள் 125 பேர்…
இமாசலப் பிரதேசத்தில் இஸ்ரேல் நாட்டு பெண் மணாலியில் மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கிகளிடம் வாங்கிய கடனை செலுத்தாமல் விஜய் மல்லையா லண்டன் தப்பி சென்றுவிட்டார். இது தொடர்பாக வங்கிகள் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கும் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் வங்கிகள் தாக்கல் செய்த வழக்கு மீது விஜய் மல்லையாவிற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தலைநகர் டெல்லியில் தாக்குதல் நடத்த, தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர் பர்ஹான் வானியை, காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 9 ம் தேதி பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதால் அங்குத் தொடர்ந்து பதற்றம்…
உத்திரபிரதேச மாநிலம் பதோகியில் வேன் மீது ரயில் மோதியதில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேனில் இருந்த பள்ளிக் குழந்தைகள் 7 பேர் உயிரிழந்தனர்…
1998-ம் ஆண்டு செப்டம்பரில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகில் ஒரு கிராமத்தில் நடந்தது அப்போது மானை வேட்டையாடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த வழக்கில் இருந்து சல்மான் கானை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது
:இந்தியாவில் உள்ள 3 சீனப் பத்திரிகையாளர்களுக்கானவிசாபுதுப்பிக்க மறுத்த மத்திய அரசு, அவர்களை நாட்டைவிட்டு வரும் 31-ஆம் தேதிக்குள் வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. சீனாவின் ஜின்ஹுவா என்ற…
குஜராத்தில் உனாவில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஒரே நாளில் பல்வேறு இடங்களில் தலித்கள் 7 பேர் தற்கொலை செய்ய முயற்சி மேற்கொண்டனர். இதனால், குஜராத்தில் மீண்டும் போராட்டம் வலுத்து வருகிறது. குஜராத்தில் உனா தாலுகாவில் கடந்த வாரம் 11ம்…
காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில் நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து முதல்வர் மெகபூபாவிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசிக்கிறார்.காஷ்மீரில் கடந்த 8ம்…
சத்தீஷ்கர் மாநிலம் கோண்டா என்ற இடத்தில் இரண்டு நக்சல்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அந்த பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது
மும்பையில் ஐ.எஸ்.,சில் சேர முயன்ற கேரளாவை சேர்ந்த ஒருவர் பயங்கரவாத தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் இருந்து சமீபத்தில் 30க்கும் மேற்பட்டோர் ஐ.எஸ்.,சில் சேரும் எண்ணத்தில் கிளம்பியதாக சந்தேகிக்கப்படுகிறது. இதில் 10 பேர் சிரியாவில் ஐ.எஸ்., அமைப்பில் சேர்ந்து விட்டதாக…
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…