JoomlaLock.com All4Share.net

Background Video

புதுச்சேரியில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.மேலும் இந்த மருத்துவமனை ,100 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வைகோ மாநிலங்களவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று பேசி வருகிறார்..மாணவர்கள், விவசாயிகள் கடுமையாக இந்த திட்டத்தை எதிர்த்து போராடி வருவதாக கூறிய வைகோ, தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றும் எதிர்ப்பை…
இருபது ஆண்டுகளுக்கு முன், இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை, குறுக்கு வழியில் ஆக்கிரமித்த பாகிஸ்தானை, அடித்து விரட்டி வெற்றிக் கொடி நாட்டிய தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் இப்போரில், தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக…
முஸ்லிம் சமூகத்தில், மூன்று முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் முறையை குற்றமாக்கும், முத்தலாக் சட்ட மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வெளிநடப்பு செய்த நிலையில், ஓட்டெடுப்பில், இந்த மசோதா நிறைவேறியது. முஸ்லிம்களில், மூன்று முறை தலாக்…
மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஒரு மணி முதல் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் தொடர்ந்து 4 முறை நில அதிர்வு உண்டானது.சுமார் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. தொடர்ந்து நில அதிர்வுகள்…
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பான சர்ச்சை ஓய்வதற்குள், புதிதாக மோசடி சர்ச்சையில் சிக்கி உள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி. தோனியும் அவரது மனைவி சாக்ஷியும், தங்களின் நிறுவனங்களில் போலி ஒப்பந்தங்கள் மூலம் கோடிக்கணக்கான பணத்தை மோசடி…
நாட்டிலேயே முதன்முறையாக தனியார் துறையில் 75 சதவீத வேலைவாய்ப்பை உள்ளூர் மக்களுக்கு வழங்க வகைசெய்யும் மசோதாவை ஆந்திர மாநில அரசு நேற்று (ஜூலை 22) நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவின் படி, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பொருட்டு அரசு உதவி பெறும்…
கேரளாவில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெவ்வேறு இடங்களில் ஐந்து பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. 300 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார்…
இந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் ஒருகட்டமாக சந்திரனின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள 'சந்திரயான்-2’ விண்கலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி சரியாக இன்று பிற்பகல் 2.43 மணிக்கு சென்னை அருகேயுள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக தனது விண்வெளி பயணத்தை தொடங்கியது.…
கங்கை உள்ளிட்ட 34 ஆறுகளை சுத்தப்படுத்துவதற்கு ரூ.5,800 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பல்வேறு மாநிலங்களிடம் இருந்தும்…
காங்., மூத்த தலைவரும், மூன்று முறை டில்லி முதல்வராக பதவி வகித்தவருமான, ஷீலா தீட்ஷித், 81, மாரடைப்பு காரணமாக, டில்லியில் இன்று(ஜூலை 20) காலமானார். அவரது இறுதிச் சடங்குகள், டில்லியில் நாளை மாலை நடக்கின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர், ஷீலா…
அசாம், அருணாச்சல் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சில பகுதிகளில் மிதமான பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு காமேங் மாவட்டத்தை மையமாக வைத்து பிற்பகல் 2.52 மணியளவில் பூகம்பம் ஏற்பட்டது. அசாம்…
வரலாற்றில் முதல் முறையாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விபரங்கள் தமிழில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விபரங்கள் வெளியிடப்படும் மொழிகளின் பட்டியலில் தமிழ் இடம் பெறாமல் இருந்தது பெரும் சர்ச்சையாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று (ஜூலை 18) 113 முக்கிய…
மும்பை: ஷாக்கிநகா பகுதியில் உள்ள பெனின்சுலா கிராண்ட் ஓட்டலில், விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு நடத்திய சோதனையில் , ஸ்பா என்ற பெயரில் ஒரு விபசார விடுதி நடப்பதை கண்டறிந்தனர்.இதையடுத்து, அதன் உரிமையாளர் ரஜ்னீஷ் சிங்…
தெலங்கானா மாநிலம் கம்மம் மாநகராட்சியில் , பணி நேரத்தின் போது, கடமையை மறந்து, ஊழியர்கள் வேலை செய்யாமல் டிக் டாக் விடியோவில் வரும் பாடலுக்கு ஏற்ப நடனமாடியும், திரைப்பட வசனங்களுக்கு நடித்தும் தொடர்ந்து விடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளனர்।இதன் விளைவால் சர்ச்சையில்…
ஆந்திர மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் விஸ்வ பூஷண் ஹரிசந்தன், சத்தீஸ்கர் மாநில ஆளுநராக மாநிலங்களவை பாஜக உறுப்பினர் அனுசுயா உய்க்கே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவை, குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநில ஆளுநராக இருந்த…
கடந்த ஞாயிறன்று நடைபெற்ற தபால் துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது இந்தி ஆங்கிலத்தில் மட்டும் தபால்துறை தேர்வு கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற நிலையில் மாநில மொழிகளிலும் தபால் துறை தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தமிழகம்…
நேபாளத்தில் கனமழையால் 67 பேர் பலியான நிலையில் சர்வதேச அமைப்புகளின் உதவியை அந்நாட்டு அரசு கோரியுள்ளது. நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகள் மற்றும்…
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம், அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருந்தது. இதற்கான 20 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கியது. இந்நிலையில் அதிகாலை 2.51 மணிக்கு ஏவப்படவிருந்த சந்திரயான்…
இலாகா மாற்றப்பட்டதால் அதிருப்தியில் இருந்த பஞ்சாப் மாநில அமைச்சர் சித்து, தனது பதவியை ராஜினாமா செய்து, அந்த கடிதத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.பஞ்சாப்பில், மாநில முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் அமைச்சர் சித்து இடையே மோதல் நீடித்து வந்தது. லோக்சபா தேர்தலின் போது,…
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 42,991 கோடி டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: தங்கம் மற்றும் செலாவணி சொத்துக்களின் மதிப்பு கடுமையாக அதிகரித்ததையடுத்து ஜூலை 5-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்…
இந்தியாவின் கடல் மீன் உற்பத்தி கடந்தாண்டில் 9 சதவீதம் சரிவைக் கண்டது.இதுகுறித்து கொச்சியைச் சேர்ந்த மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (சிஎம்எஃப்ஆர்ஐ) வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: கடல் மீன் உற்பத்தி 2017-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2018-இல் 3.47 லட்சம் டன்…
இடைவிடாத மழை காரணமாக கங்கை நதியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. எனவே, உத்தரபிரதேசத்தின் பிரயாகராஜில் (பழைய பெயர் அலகாபாத்), வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. கங்கையின் சங்கம் காட் பகுதியில் கங்கை நதிக்கு அருகிலுள்ள வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது. ஆற்றின் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து…
இந்திய-அமெரிக்க வர்த்தகம், மற்றும் பொருளாதாரம் குறித்து இரு தரப்பு பிரதிநிதிகள் இன்று டில்லியில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.கடந்த சில மாதங்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், அமெரிக்க பொருட்களுக்கு, இந்தியா, அதிக வரி வசூலிக்கிறது. பரஸ்பரம் சம அளவில் இருக்கும் வகையிலான வரி…
பக்கம் 7 / 75
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…