JoomlaLock.com All4Share.net

Background Video

மே தினத்தையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மே தின நாளில் தொழிலாளர்கள் மதிப்பை போற்ற நம்மை அர்ப்பணிப்போம் என்றார்.
சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 104 உயர்ந்து ரூ.22328க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ. 2791க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், ஆபத்தான நிலையில் கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பையில், 1993ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில், 257 பேர் கொல்லப்பட்டனர்; 1,000த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தாவூத்…
ஊழல் மிகுந்த மாநிலங்கள் பட்டிய லில், கர்நாடகா முதலிடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளதாக, 'நிடி ஆயோக்' ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு ஆலோசனை அளிக்கும் அமைப்பான, 'நிடி ஆயோக்'கின், ஊடக ஆய்வு களுக்கான மையம், சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் வினோத் கண்ணா மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வினோத் கண்ணா அர்ப்பணிப்புள்ள தலைவராகவும், நடிகராகவும் நிலைத்திருப்பர் என்று அவர் கூறியுள்ளார்.
தோல்விக்கு பொறுப்பேற்று சில எம்.எல்.ஏ. க்கள் பதவி விலக முன்வந்துள்ளனர். மேலும் பஞ்சாப் மாநில பொறுப்பாளராக இருந்த சஞ்சய் தனது பதவியை துறக்க முடிவு செய்துள்ளார். இதனையடுத்து கட்சிக்கு ஏற்பட்ட நிலை குறித்து விவாதிக்க எம்.எல்.ஏ. க்கள் கூட்டத்திற்கு கெஜ்ரிவால் அழைப்பு…
ஸ்ரீநகரில் உள்ள ராணுவ முகாமின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் சந்து கூறியதாவது: எங்களது கணிப்பின்படி ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவதற்காக 150க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் எல்லையில் காத்திருக்கின்றனர். எல்லையை ஒட்டியுள்ள பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதியிலும் பயங்கரவாதிகள் காத்திருப்பதாக தகவல் வந்துள்ளது.…
சென்னையில் இருந்து ஒடிசா வழியாக செல்லும் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒடிசா அப்துல்கலாம் தீவில் ஏவுகணை சோதனை நடைபெற உள்ளதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது டிடிவி தினகரனுடன் தொடர்புடைய கூட்டாளிகள் மற்றும் ஹவாலா கும்பலை பிடிக்க சென்னை வருகிறது. டெல்லி போலீஸ் டிடிவி தினகரனை 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்துள்ள டெல்லி போலீஸ் சசிகலா குடும்பத்தின் ஒட்டுமொத்த பட்டுவாடா விவரங்களை கறக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும்…
இந்தி திணிப்பை தடுக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பிற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு வந்தவுடன் மத்திய அரசு பதுங்கிறது என்றும் வீரமணி கூறியுள்ளார். இதனால் இந்தி பேசுவது பரிந்துரையே கட்டாயம் அல்ல…
யோகா குரு பாபா ராம்தேவ் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் யோகா பயிற்சி முகாம்களை நடத்திவருகிறார். இதனால் உலகம் முழுக்க பிரபலமானவர். ஆன்மீகம் மட்டுமின்றி பல்வேறு வகையான இயற்கையான மூலிகை தயாரிப்புகளை விற்பனை செய்யும் பதஞ்சலி நிறுவனத்தையும் பாபா ராம்தேவ் நடத்தி…
டில்லியில் மக்களின் நம்பிக்கையை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இழந்துவிட்டதாக சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். டில்லியில் நடந்த மாநகராட்சி தேர்தலில் பா.ஜ. அமோக வெற்றி பெற்றுள்ளது. டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு படுதோல்வியடைந்துள்ளது. டில்லியில் ஆம் ஆத்மி…
டெல்லி மாநகராட்சிதேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பாஜக முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக-157 வார்டுகளிலும், ஆம் ஆத்மி - 38 வார்டுகளிலும் காங்கிரஸ்-26 வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளது. டெல்லியில் உள்ள 272 வார்டுகளில் 270 வார்டுகளுக்கு மட்டும்…
நிலக்கரி சுரங்கம் ஒதுக்கியத்தில் நடந்த ஊழலை விசாரித்த முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய காங். ஆட்சியின் போது நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் ஊழல் நடந்ததை அப்போதைய சி.பி.ஐ. இயக்குனராக இருந்த ரஞ்சித் சின்கா…
போலி பாஸ்போர்ட் வழக்கில் நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு 7 வருட சிறை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா தப்பி செல்வதற்காக பெங்களூரு பாஸ்போர்ட் அலுவலகத்தில் போலி பாஸ்போர்ட் பெற்றதாக தாதா சோட்டா ராஜன் மீது போலீசார்…
வர்த்தக முடிவில் இந்திய பங்குச்சனையில் சென்செக்ஸ் 287 புள்ளிங்கள் உயர்ந்து 29,943 புள்ளிகளாக உள்ளது. நிப்டி 88 புள்ளிகள் உயர்ந்து 9,306 புள்ளிகளாக உள்ளது.
இரட்டை இலை பெற பேரம் பேசிய தரகர் சுகேஷ் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். சுகேஷிடம் 8 நாள் விசாரித்த பிறகு டெல்லி கோர்ட்டில் போலீஸ் ஆஜர்படுத்தியுள்ளது மேலும் 5 நாள் சுகேஷை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி போலீஸ் கோரிக்கை விடுத்துள்ளது.…
டெல்லியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியுடன் காங்கிரஸ் செய்தி தொடர்காளர் குஷ்பு சந்தித்துள்ளார். தமிழக அரசியல் சூழ்நிலையை குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ1.70 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கணக்கு தணிக்கை அதிகாரி குற்றம்சாட்டியிருந்தார். நாட்டையே உலுக்கிய இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதேபோல் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் 2011…
அலுவா பகுதியில் வசிக்கும் ஜோஸ் குடும்பத்தினர் ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தமது வீட்டில் மாட்டிறைச்சி உணவை தயாரித்து வைத்துள்ளனர். இதையறிந்த அப்பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் ஜோஸ் வீட்டுக்குள் கும்பலாக புகுந்து, பண்டிகைக்காக தயாரிக்கப்பட்டிருந்த உணவையும் சமைக்க தயாராக இருந்த இறைச்சியையும்…
சென்னையில் கள்ள நோட்டு மாற்ற முயன்ற வாலிபர் கைதுசென்னை: சென்னை சென்ட்ரலில் பயணச்சீட்டுக்கு கள்ள நோட்டு கொடுக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் ரூ.2000 ரூ.500 மதிப்புள்ள ரூ.7 ஆயிரம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம்…
பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் பசுவதைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்போது பசுக்களுக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்கப்படும் திட்டமானது வருகிறது. கடந்த வருடமும் பசுக்களுக்கு ஆதார் அடையாள அட்டை என்ற நகர்வானது கேளிக்கை மற்றும் விமர்சனத்திற்கு…
காஷ்மீரில், ராணுவத்தினர் மீது கல் வீச்சில் ஈடுபட வரும்படி அழைப்பு விடுத்து வந்த, 300 வாட்ஸ் ஆப் குழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. ராணுவத்தினர் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின், இதில், 90 சதவீத குழுக்கள் செயல்பாட்டை நிறுத்தி கொண்டுள்ளன.இது குறித்து ராணுவ அதிகாரி…
விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி, காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி. அய்யாக்கண்ணு தலைமையில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 14-ஆம் தேதி…
பக்கம் 9 / 51
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…