JoomlaLock.com All4Share.net

Background Video

வியாழக்கிழமை, 25 ஜூலை 2019 00:00

வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை குறைந்தது Featured

Written by 
Rate this item
(0 votes)

உடுமலை சந்தையில் நாட்டு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கி செல்கின்றனர்.

உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நாட்டு தக்காளி பயிரிட்டுள்ளனர். தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், உடுமலை சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது.கடந்த மாதம் தலா 14 கிலோ கொண்ட 2 ஆயிரம் பெட்டிகள் வரத்து இருந்தது. தற்போது தினசரி 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பெட்டிகள் வரை வருகின்றன.

கடந்த மாதம் ஒரு பெட்டி தக்காளி ரூ.550-க்கும், சில்லரை விற்பனையில் கிலோ ₹40 முதல் ₹45க்கும் விற்றது. தற்போது வரத்து அதிகரிப்பால், ஒரு பெட்டி ₹250-க்கும், சில்லரை விலையில் கிலோ ₹12 முதல் ரூ.15 வரையும் விற்பனையாகிறது.இருப்பினும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் தற்போது உடுமலை தக்காளி மார்க்கெட் களை கட்டி உள்ளது.

Read 140 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…