JoomlaLock.com All4Share.net

Background Video

வெள்ளிக்கிழமை, 02 ஆகஸ்ட் 2019 00:00

புதிய உச்சம் தொட்டது தங்கம்: சவரன் ரூ.27 ஆயிரத்தை தாண்டியது Featured

Written by 
Rate this item
(0 votes)

தமிழகத்தில், எப்போதும் இல்லாத வகையில், முதல் முறையாக, சவரன் ஆபரண தங்கம் விலை, 27 ஆயிரம் ரூபாயை தாண்டி, புதிய சாதனை படைத்துள்ளது.சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப, சென்னையில், தங்கம் விலை, தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. புகழ்பெற்ற தங்க நகை நிறுவனங்களின், தலைமை கிளைகள், சென்னையில் உள்ளன. இதனால், சென்னையில் நிர்ணயிக்கப்படும், தங்கம் விலையே, தமிழகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது.

அமெரிக்கா, சீனா இடையேயான வர்த்தக போர்; அமெரிக்கா, ஈரான் இடையில் நிலவும் போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால், சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனால், சமீப காலமாக, உள்நாட்டிலும், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.அதன்படி, சென்னையில், ஜூலை, 19ல், 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 3,363 ரூபாய்க்கும்; சவரன், 26 ஆயிரத்து, 904 ரூபாய்க்கும் விற்பனையானது. இதுவே, தங்கம் விலையில், உச்சபட்ச அளவாக இருந்தது. பின், அதன் விலை குறைந்தது. நேற்று முன்தினம், கிராம் தங்கம், 3,310 ரூபாய்க்கும்; சவரன், 26 ஆயிரத்து, 480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி, 43.70 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில், நேற்று ஒரே நாளில், தங்கம் விலை கிராமுக்கு, 73 ரூபாய் உயர்ந்து, 3,383 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, அதிரடியாக, 584 ரூபாய் அதிகரித்து, 27 ஆயிரத்து, 64 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து, தங்கம் வரலாற்றில், முதல் முறையாக, சவரன், 27 ஆயிரம் ரூபாயை தாண்டி, புதிய சாதனை படைத்துள்ளது.வெள்ளி விலை கிராமுக்கு, 60 காசு உயர்ந்து, 44.30 ரூபாய்க்கு விற்பனையானது.இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர், ஜெயந்திலால் சலானி கூறியதாவது: அமெரிக்காவில் உள்ள, அனைத்து வங்கிகளின் கூட்டமைப்பான, 'பெடரல்' வங்கி, சில தினங்களுக்கு முன், வைப்பு நிதிக்கான வட்டியை, 0.25 சதவீதம் மட்டும், குறைக்க போவதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

சீனாவில் இருந்து, தங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்கா, கூடுதலாக, 10 சதவீதம் இறக்குமதி வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பால், உலக பொருளாதாரம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், அமெரிக்க டாலர் மதிப்பும், சற்று குறைந்து வருகிறது. இதனால், டாலரில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள், அதை மாற்றி, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.சர்வதேச சந்தையில், ஆக., 1ல், 1,402 அமெரிக்க டாலர், அதாவது, 98 ஆயிரத்து, 140 ரூபாய்க்கு விற்பனையான, 31 கிராம் எடை உடைய, ஒரு, 'அவுன்ஸ்' தங்கம், தற்போது, 1,437 டாலராக, அதாவது, 1 லட்சத்து, 590 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஒரு நாளில் மட்டும், 35 டாலர், அதாவது, 2,450 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில், தங்கம் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நீடிக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Read 123 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…