JoomlaLock.com All4Share.net

Background Video

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2019 00:00

தங்கம் பவுன் ரூ.29 ஆயிரத்தைத் தாண்டியது Featured

Written by 
Rate this item
(0 votes)

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை ரூ.29 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.29,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 3 நாளில் ரூ.688 வரை விலை உயர்ந்துள்ளது. பவுன் விலை, வரும் நாள்களில் ரூ.30 ஆயிரத்தை தாண்டி விடும் என்று நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

பல்வேறு காரணங்களால் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.27 ஆயிரத்தைத் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை நாள்தோறும் உயர்ந்து வந்த நிலையில், கடந்த 7-ஆம் தேதி விலை ரூ.28 ஆயிரத்தைத் தாண்டியது.

அதன்பிறகும் தொடர்ந்து விலை உயர்ந்து கடந்த 13-ஆம் தேதி ரூ.29 ஆயிரத்தை தாண்டியது.
அன்று ஒரு பவுன் ரூ.29,016 ஆக இருந்தது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தது.
இந்தநிலையில், பவுன் சனிக்கிழமை ரூ.29 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.640 அதிகரித்து, ரூ.29,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.80 உயர்ந்து, ரூ.3,680-க்கு விற்பனையானது. ஆகஸ்ட் 22-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரையிலான மூன்று நாள்கள் மட்டும் ரூ.688 வரை உயர்ந்துள்ளது.

இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.49.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.49,200 ஆகவும் இருந்தது.

தங்கம் விலை உயர்வு குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கப் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறியது:-
சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சி, உலக அளவில் கட்டுமானத்
துறையில் ஏற்பட்ட சரிவு, வளர்ந்த நாடுகளின் பண மதிப்பு சரிவு, வேலைவாய்ப்பு குறியீடு சரிவு, மோசமான நிதிநிலை உள்பட பல்வேறு காரணங்களால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் மட்டுமே அதிக அளவு முதலீடு செய்து வருகின்றனர்.

இதனால், தங்கம் விலை வழக்கத்தை விட உயர்ந்து வருகிறது. வரும் நாள்களில் பவுன் ரூ.30 ஆயிரத்தைத் தாண்டும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

திருமணத் தேவைகளுக்காக தங்கம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் தங்கத்தின் அளவை குறைத்து வாங்குகின்றனர். அதாவது 10 பவுனுக்கு பதிலாக 9 பவுன் வாங்கும் நிலை உள்ளது என்றார் அவர்.

சனிக்கிழமை விலை ரூபாயில்
(ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம் ............... 3,680
1 பவுன் ....................... 29,440
1 கிராம் வெள்ளி............. 49.20
1 கிலோ வெள்ளி............. 49,200
வெள்ளிக்கிழமை
விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்................ 3,600
1 பவுன் தங்கம்.............. 28,800
1 கிராம் வெள்ளி............. 48.20
1 கிலோ வெள்ளி........... 48,200.

Read 47 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…