JoomlaLock.com All4Share.net

Background Video

செவ்வாய்க்கிழமை, 03 செப்டம்பர் 2019 00:00

பங்கு சந்தைகள் கடும் சரிவு Featured

Written by 
Rate this item
(0 votes)

மூன்று நாள் தொடர் விடுமுறைக்கு பின்னர் இன்று(செப்.,3) துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 403.87 புள்ளிகள் சரிந்து 36,928.92ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 124.85 புள்ளிகள் சரிந்து 10,898.40ஆகவும் வர்த்தகமாகின.

ஆட்டோமொபைல் உள்ளிட்ட நாட்டின் முக்கிய துறைகள் கடும் வீழ்ச்சி அடைந்து இருப்பதாலும், ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் சரிந்து இருப்பதாலும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தனர். மேலும் ரூபாயின் மதிப்பும் கடும் சரிவை சந்தித்ததாலும், அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போர் காரணமாகவும், இன்றைய வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தன. வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 769.88 புள்ளிகள் சரிந்து 36,562.91ஆகவும், நிப்டி 225.35 புள்ளிகள் சரிந்து 10,797.90ஆகவும் முடிந்தன.

பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் கடும் வீழ்ச்சி கண்டன. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 67 காசுகள் சரிந்து ரூ.72.09ஆக வர்த்தகமானது. தொடர்ந்து காலை 10.50மணியளவில் 83 காசுகள் சரிந்து ரூ.72.23ஆக வர்த்தகமானது. தொடர்ந்து வர்த்தக நேர முடிவில், கடந்த 9 மாதங்களி்ல் இல்லாத அளவுக்கு 97 காசுகள் சரிந்து ரூ. 72. 39 ஆக நிறைவு பெற்றது.

Read 53 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…