JoomlaLock.com All4Share.net

Background Video

செவ்வாய்க்கிழமை, 03 செப்டம்பர் 2019 00:00

ரூபாய்.30 ஆயிரத்தை நெருங்குகிறது ஒரு பவுன் தங்கம் Featured

Written by 
Rate this item
(0 votes)

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் தேதியில் இருந்து தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த மாதத்தில் ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்தை தொட்ட நிலையில், தற்போது ரூ.29 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு மாத இடைவெளியில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்து இருக்கிறது. இடையில் அவ்வப்போது சற்று விலை குறைந்து இருந்தாலும், மறுநாளிலேயே ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விடுகிறது. நேற்றும் விலை அதிகரித்து தான் இருந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 702-க்கும், ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 616-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி கிராமுக்கு ரூ.27-ம், பவுனுக்கு ரூ.216-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 729-க்கும், ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 832-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருக்கிறது.

கடந்த 4 நாட்களாக தங்கம் விலை ஏற்றத்துடனே இருந்து வரும் நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை நெருங்கிவிடும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தங்கம் விலை அதிகரித்தது போலவே வெள்ளியும் உயர்ந்து இருந்தது. நேற்று கிராமுக்கு 60 காசும், கிலோவுக்கு ரூ.600-ம் உயர்ந்து, ஒரு கிராம் 52 ரூபாய் 60 காசுக்கும், ஒரு கிலோ ரூ.52 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Read 42 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…