JoomlaLock.com All4Share.net

Background Video

வியாழக்கிழமை, 29 ஜூன் 2017 00:00

60 ஜிபி இலவச டேட்டா, பேடிஎம் கூப்பன்கள்: ஜியோனியின் அதிரடி சலுகை Featured

Written by 
Rate this item
(0 votes)

ஜியோனி நிறுவனத்தின் குறிப்பிட்ட ஒரு சில ஸ்மார்ட்ஃபோன்களுக்கு 60 ஜிபி வரை இலவச டேட்டா வழங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.

சீன நிறுவனமான ஜியோனி நிறுவனமும் - ரிலையன்ஸின் ஜியோவும் இணைந்து புதிய சலுகைகளை அறிவித்தள்ளது. அதன்படி, ஜூன் 16 ஆம் தேதிக்கு பின் வாங்கிய ஜியோனி pioneer P5L அல்லது ஜியோனி P7 ஃபோன்களுக்கு 2 ஜிபி 4ஜி கூடுதல் டேட்டா வழங்கப்படும்.

ஜியோனி எலைஃப் S6, ஜியோனி எலைஃப் s7, ஜியோனி மாரத்தான் M5, ஜியோனி Sபிளஸ், ஜியோனி s6எஸ், ஜியோனி F103 ப்ரோ, ஜியோனி மாரத்தான் M5 லைட் சிடிஎம்ஏ, ஜியோனி மாரத்தான் M4, மாரத்தான் M5 லைட், ஜியோனி P7 மேக்ஸ், ஜியோனி F103 வாங்குபவர்களுக்கு 5 ஜிபி அளவு இலவச கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

மேலும், ஜியோனி A1, ஜியோனி மாரத்தான் M5 பிளஸ், ஜியோனி S6 ப்ரோ, ஜியோனி எலைஃப் E8 ஸ்மார்ட்ஃபோன்களை வாங்குபவர்களுக்கு 10 ஜிபி அளவு கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட ஸ்மார்ட்ஃபோன் வாடிக்கையாளர்கள் வரும், 2018 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை 6 முறை 309 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து 60 ஜிபி வரை கூடுதல் இலவச டேட்டாவை பெறலாம்.

இதேபோல், ஜியோனி நிறுவனத்தின் குறிப்பிட்ட ஸ்மார்ட்ஃபோன்களை வாங்குபவர்களுக்கு 500 ரூபாய் வரை கேஷ்பேக் கூப்பன்கள் வழங்கப்படுகிறது.

Read 48 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…