JoomlaLock.com All4Share.net

Background Video

''ஜவுளித் துறைக்கு, மத்திய அரசு அறிவித்துள்ள, 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான சலுகை திட்டங்களால், நடப்பு 2016 -17ம் நிதியாண்டில், ஆடைகள் துறையில், 5,000 கோடி ரூபாய் அளவிற்கு புதிய முதலீடுகள் குவியும்; இதனால், 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்,'' என, ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு குழு தலைவர் அசோக் ஜி.ரஜனி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: ஜவுளித் துறையில், மூலதன முதலீடுகளுக்கான மானியம், இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, மூலப்பொருட்களின் இறக்குமதி வரியுடன், மாநில வரியும், ஏற்றுமதியாளர்களுக்கு திரும்ப வழங்கப்படுகிறது. இதனால், செலுத்திய வரியில் திரும்ப பெறப்படும் தொகை, 7.25 சதவீதத்தில் இருந்து, 12.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், ஜவுளித் துறை சார்ந்த தொழிலாளர் சட்டங்களும் தளர்த்தப்பட்டுள்ளன. இத்தகைய ஊக்குவிப்புகளால், அடுத்த மூன்று ஆண்டுகளில், ஜவுளி மற்றும் ஆடைகள் துறையில், உற்பத்தியும், ஏற்றுமதியும் உயரும். இத்துறையில், 1,100 கோடி டாலர் முதலீடுகளை ஈர்த்து, 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், ஏற்றுமதியை, 3,000 கோடி டாலராக உயர்த்தவும், மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, நிச்சயம் எட்டப்படும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. நடப்பு நிதியாண்டில், ஆடைகள் துறையில், 5,000 கோடி ரூபாய்க்கு புதிய முதலீடுகள் குவியும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. வங்கதேசம், வியட்நாம் ஆகிய நாடுகள், ஜவுளி ஏற்றுமதிக்கு, வரி விலக்கு அளிக்கின்றன. ஆனால், இந்தியாவில், 9.5 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்படுகிறது. இதை குறைத்தால், ஏற்றுமதி மேலும் உயரும். கடந்த சில ஆண்டுகளாக, செலவு குறைவு காரணமாக, ஆடை தயாரிக்கும், 'ஆர்டர்'கள், சீனா போன்ற நாடுகளுக்கு சென்று கொண்டிருந்தன. தற்போது, அந்நாடுகளில் தொழிலாளர் ஊதிய விகிதம் அதிகரித்துள்ளதால், உற்பத்தி செலவினம் உயர்ந்துள்ளது. இனி, சீனா, மலிவு விலையில், ஜவுளி மற்றும் ஆடைகளை தயாரித்து, ஏற்றுமதி செய்வது கடினம். இது, இந்தியா உட்பட, இதர நாடுகளுக்கு, 28 ஆயிரம் கோடி டாலர் அளவிலான சந்தை வாய்ப்புக்கு வழிவகுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.ஜவுளி மற்றும் ஆடைகள் துறை, வரும், 2025ல், மூன்று மடங்கு உயர்ந்து, 30 ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ளதாக உருவெடுக்கும்; ஆண்டுக்கு, 15 ஆயிரம் கோடி டாலர் அன்னியச் செலாவணி கிடைக்கும்.-பி.சி.ஜி., ஆய்வறிக்கை

Published in வணிகம்

அபிமான நிறுவனங்கள் தயாரிக்கும் நேர்த்தியான ஆடைகளை உடுத்துவது இன்றைய வாழ்க்கையில் மக்கள் மிக முக்கியமானதாகப் பார்க்கின்றனர். மக்கள் தங்களது ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் நிறைய நேரம் செலவிடுவதுடன், மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக உடை உடுத்த ஏராளமான பணத்தைச் செலவிடவும் தயங்குவதில்லை.

சக மனிதர்களிடம் இருந்து வேறுபட்டு இருப்பதற்கான ஆசை மற்றும் உள்ளுணர்வு, அவர்களை அடிக்கடி மிகவும் விலையுயர்ந்த ஆடைகளைத் தேர்வு செய்யத் தூண்டுகின்றது.

உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற பேஷன் பிரியர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் மிகவும் விலை உயர்ந்த டாப் 10 ஆடை பிராண்டுகளே நாம் இப்போது பார்க்கப்போகிறோம். இந்தப்பட்டியலில் இருக்கும் பிராண்டில் உங்கள் அலமாரியில் ஆடைகள் உள்ளதா..?

இந்தப் பிராண்ட்டின் அழகிய மற்றும் நாகரீகமாக வடிவமைப்புகள், பெண்களைத் தன்பால் ஈர்க்கும் ஒரு சாமர்த்தியத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இவை தற்பொழுது உலகம் முழுவதும் உள்ள பேஷன் பிரியர்களுக்கான சொத்தாக மாறிவிட்டன. இதனுடைய அற்புதமான படைப்புகள், உலகின் தலைசிறந்த மற்றும் மிகவும் விலையுயர்ந்த பத்து ஆடைகள் பிராண்டுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.

இதனுடைய சிறப்பு வாய்ந்த மாலை நேர உடைகள், இதை ஒரு சிறந்த மற்றும் பிரபலமான பிராண்டாக மாற்றியுள்ளது. இதனுடைய அசரடிக்கும் வடிவமைப்பு, ஆடம்பரத்தை விரும்பும் பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்த, நவீன ஃபேஷனை விரும்பும் பெண்களைப் பெரிதும் ஈர்க்கின்றது.

இத்தாலிய ஃபேஷன் பிராண்டான வெர்சேஸ், ஆண்கள் மற்றும் பெண்களுக்குச் சமமாக நவீன வடிவமைப்புகளைத் தயாரிக்கிறது. இது சமீபத்திய பேஷன் விரும்பிகள், மற்றும் சிறந்த தரம் மிகுந்த பொருட்களுக்கு எவ்வளவு விலை கொடுக்கவும் தயாராக இருப்பவர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தப் பிராண்ட் தனனுடைய போட்டியாளர்களுக்கு எந்த ஒரு இடத்தையும் விட்டுக் கொடுக்காமல், பல்வேறு ஃபேஷன் உடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

பெரும்பாலான பேஷன் வடிவமைப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் வெர்சேஸ்ஸை, ஒரு பருவகால ஆடை பிராண்ட்டாகப் பரிந்துரைக்கின்றனர். இது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடை மற்றும் மற்ற பிற ஃபேஷன் பொருட்களை வழங்கும் ஒரு சிறந்த ஃபேஷன் பிராண்ட் ஆகும். இன்று, ஆடம்பர ஆடை வடிவமைப்பில் புகழின் உச்சத்தில் இருக்கும் இது, தற்பொழுது உபகரணங்கள், மேக்கப் பொருட்கள், மற்றும் புதிய தளபாடங்கள் (பர்னிச்சர்கள்) போன்றவற்றையும் தயாரித்து வருகின்றது.

கஸ் ஒரு அமெரிக்கப் பிராண்ட் ஆகும். இதனுடைய டெனிம் ஜீன்ஸ் மிகவும் பிரபலமாக உள்ளது. இது எப்போதும் வாடிக்கையாளர்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பிராண்ட்களின் ஒன்றாகவே இருந்து வருகின்றது.

இது பெரும்பாலும் அதன் பொருட்களைக் குறிப்பாக வயது வந்த ஆண்கள் மற்றும் பெண்களை இலக்காகக் கொண்டு தயாரித்து வருகின்றது. இதனுடைய ஜீன்ஸ், மற்றும் டி-ஷர்ட்கள் இளைஞர்கள் மற்றும் பேஷன் பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன.

டியோர், அதன் மிகவும் சிக்கலான, கவர்ச்சி, நளினம், நவீன மற்றும் கவுரவத்திற்கான ஆடை வடிவமைப்பிற்காக அறியப்படுகிறது. இதனுடைய தரமான மற்றும் சமீபத்திய ஃபேஷன் போக்குகளைப் பிரதிபலிக்கும் ஆடைகள் அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. மிகவும் விலையுயர்ந்த இந்தப் பிராண்ட் பொருட்கள் ஃபேஷன் துறையில் இருக்கும் பெண்களைப் பெரிதும் கவர்கிறது.

மிகவும் மதிப்பு வாய்ந்த இந்தப் பிராண்டின் புகழ், அது வாசனைத் திரவியங்கள், பைகள், சூரியன் கண்ணாடி, பெண்களுக்கான துணிவகைகள், மற்றும் பல்வேறு புதிய தயாரிப்புகளைச் சத்தைப்படுத்திய பின் மேலும் அதிகரித்துள்ளது. இது பல்வேறு பொருட்களைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த போதிலும், இதனுடைய பெண்களுக்கான துணி பர்ஸ், மற்றும் கைப்பைகள், இந்தப் பிராண்டிற்குப் பெரும் புகழை பெற்றுத் தந்துள்ளன.

பருவகால வேறுபாடுகள், ஆடம்பரமான வடிவமைப்புகள், மற்றும் பிரத்தியேக விற்பனை போன்றவை, இந்தப் பிராண்டின் சில முக்கிய அம்சங்களாக உள்ளன. நீண்ட காலமாக நாகரீகமான ஆடைகளுக்காக அறியப்படும் இந்தப் பிராண்ட், தற்பொழுது நகை, கைப்பைகள் மற்றும் காலணிகள் போன்றவற்றில் முக்கியமாகக் கவனம் செலுத்துகின்றது.

அதோடு இல்லாமல், இது பல்வேறு பருவங்களில் பயன்படுத்தக்கூடிய வெளிப்புற உடைகளை வழங்குகிறது. இந்தப் பிராண்டின் முக்கிய நன்மை என்பது இது ஆடை வடிவமைப்பில் பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாகும்.

ஆர்மணி, மிகவும் விலையுயர்ந்த ஆடைகள் பிராண்ட்டாக மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான பிராண்ட்டாக உள்ளது. இந்தப் பிராண்டில் உள்ளது போன்று பல்வகைப் பொருட்கள் வேறு எந்தப் பிராண்டிலும் இல்லை. ஆர்மணி வாசனைத் திரவியங்கள் தொடங்கி மற்றும் ஆடைகள் வரை இந்தப் பிராண்டில் உள்ளது. துணி உற்பத்தியில் குறிப்பாக ஜீன்ஸ், மற்றும் டி-ஷர்ட் உற்பத்தியாளர்கள் மத்தியில் இது மிகவும் பழமையான பிராண்டாக உள்ளது.

இந்தப் பிராண்டின் ஆடை வடிவமைப்புகள் உலகின் சிறந்த பேஷன் வடிவமைப்பாளர்கள் மற்றும் பூட்டிக் கடைகள் மூலம் பரிந்துரைக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் அதிகமாக விற்கும் பிராண்டாக இருக்கின்றது. பெரிய பருவகால மாறுபாடுகளில், ஆர்மணி ஆடைகளே அந்தந்த பருவங்களில் விரும்பப்படும் சிறந்த பிராண்டாக இருக்கின்றது. ஆர்மணி இப்போது ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான ஆடைகளை விற்பனை செய்வதை இலக்காகக் கொண்டு செயல்படுகின்றது.

பொதுவாக டி & ஜி என அழைக்கப்படும், டோல்ஸ் மற்றும் கபானா பிராண்டுகளின் புகழ் மற்றும் வீச்சை பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை. இது இத்தாலிய கலாச்சாரத்தில் மிகவும் விரும்பப்படும் மற்றும் மிகவும் பிரபலமான ஆடை பிராண்ட் ஆகும். அதன் தயாரிப்புகள் ஆண்கள் மற்றும் பெண்களால் சமமாக விரும்பப்பட்டு, உலகம் முழுவதும் பெரும் எண்ணிக்கையில் விற்கப்படுகின்றன. இந்தப் பிராண்டின் ஆடை மற்றும் அச்சு அமைப்பு முறையின் தரம் உலகப் புகழ் பெற்றது. டி & ஜி 2013 ல் உலகின் மிக விலையுயர்ந்த ஆடை பிராண்ட் ஆக இருந்தது.

நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு மாற்றம் தர விரும்பினால் இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த இத்தாலிய பிராண்ட் நவநாகரீக ஆடைகள் இளம் பேஷன் காதலர்களைப் பெரிய அளவில் ஈர்க்கின்றது. இதற்கு உலகம் முழுவதும் விற்பனையகங்கள் உள்ளன.

எனவே இது பெரும்பாலும் மற்ற பிராண்டுகளை விட எளிதாகக் கிடைக்கின்றது. இதன் தயாரிப்புகள் உலகின் மிக விலையுயர்ந்த ஆடை தயாரிப்புகளாக உள்ளன. இது தன்னுடைய எளிய வடிவமைப்பு, தனித்தன்மை மற்றும் வசதிக்காகப் புகழ்பெற்று விளங்குகின்றது. இதனுடைய வாசனை திரவியங்களும் சந்தையில் புகழ்பெற்று விளங்குகின்றன.

சேனல் பிராண்டுகள், மிகப் பெரும் தேவை உள்ள பிராண்டுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது பெரும்பாலும் பிரபலங்கள் மற்றும் பணக்காரர்களால் விரும்பப்படுகின்றது. ஸ்டைலான மற்றும் சிறந்த வடிவமைப்புகளைச் சேனல் பிராண்டுகள் கொண்டிருப்பதால், நீங்கள் பல்வேறு வகைகளில் இருந்து உங்களுக்குப் பிடித்ததைத் தேர்வு செய்யலாம்.

இந்த வகைப் பிராண்ட்களின் ஆடைகள் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் இந்தப் பிராண்ட் ஆடைகள் மற்ற பிராண்ட் ஆடைகளின் வடிவங்களை நகல் எடுப்பது இல்லை. தோல் பராமரிப்புப் பொருட்கள் மற்றும் அழகு பொருட்கள் கூடச் சேனல் பெயரில் வெளியிடப்படுகின்றது. இந்தப் பிராண்ட் அநேகமாகப் புதிய ட்ரெண்டை விரும்புவார்கள், இளைஞர்கள், மற்றும் பேஷன் பிரியர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றது. ஏனெனில் இது உலகின் மிகவும் பிரபலமான பேஷன் பிராண்ட் ஆகும்.

இதனுடைய விலையும், ஒட்டு மொத்த தரமும், பிரசித்தி பெற்ற இத்தாலிய பிராண்டான குஸ்ஸியை, முதலிடத்தில் வைத்துள்ளது. இந்தப் பிராண்ட் ஆடைகளே உலகின் மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதப்படுகின்றது. குஸ்ஸி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகளை வடிவமைக்கின்றது.

இவர்கள், டை, கைப்பைகள், குட்டைப்பாவாடைகள், காலணிகள், மற்றும் பயணத்திற்குரிய பெட்டிகளைத் தயாரிக்கின்றார்கள். இந்தப் பிராண்டின் விலை அதிகமாக இருந்தாலும், இந்தப் பிராண்ட் பொருட்கள் எப்போதும் ஆடம்பரமாக, மற்றும் ஸ்டைலாக உள்ளன. இதற்குப் பல போட்டியாளர்கள் இருந்த போதிலும், யாராலும் இதை முதலிடத்தில் இருந்து இறக்க முடியவில்லை.

இனி உங்கள் newtamiltimes.com தளத்தைப் பேஸ்புக்  மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

Published in வணிகம்
சனிக்கிழமை, 18 ஜூன் 2016 00:00

எட்டாக் விலையில் பீன்ஸ்!

சென்னையில் தக்காளி விலையை அடுத்து தற்போது பீன்ஸ் விலை சதமடித்துள்ளது. பாமர மக்களுக்கு எட்டாத காயாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகின்றது பீன்ஸ்.

சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.55 முதல் ரூ.60 வரையிலும், பீன்ஸ் ரூ.95 முதல் ரூ.100 வரையிலும் விற்கப்பட்டது. ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வழக்கத்தைக் காட்டிலும் 40 சதவீதம் வரை தக்காளி வரத்து குறைந்ததால், கடந்த வாரம் சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையானது. இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை ரூ.75 முதல் 80 வரை விற்பனையானது.

இந்த நிலையில், கோயம்பேடு சந்தைக்கு வெள்ளிக்கிழமை 70-க்கும் மேற்பட்ட லாரிகளில், ஏறத்தாழ 1,400 டன் தக்காளி கொண்டுவரப்பட்டது.

இதனால் கோயம்பேடு சந்தையில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில், ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கும், சென்னை நகர்ப்பகுதிகளில் உள்ள கடைகளில் தரத்துக்கு ஏற்றவாறு ரூ.55 முதல் ரூ.65 வரை விற்பனையானது.

ஒரு வழியாக தக்காளி விலை குறைந்ததே என்று பெருமூச்சு விட்டவுடன் திடீரென பீன்ஸ் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் வியாழக்கிழமை கிலோ ரூ.75-க்கு விற்பனையான பீன்ஸ், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.25 அதிகரித்து ரூ.100-க்கு விற்கப்பட்டது. வழக்கமாக 400 டன் வரை கொண்டுவரப்படும் பீன்ஸ், அன்றைய தினம் 150 டன்னாக குறைந்ததே விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Published in தமிழகம்
வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2016 00:00

தக்காளி விலை கணிசமாக குறைந்துள்ளது

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கணிசமாக குறைந்துள்ளது. 1 வாரத்திற்கு முன் கிலோ ரூ.110-க்கு விறக்கப்பட்ட தக்காளி விலை, படிப்படியாக குறைந்து உயர் ரக தக்காளி ரூ.50-ஆகவும், இரண்டாம் ரக தன்னாளி கிலோ ரூ.40-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேட்டை தவிர பிற இடங்களில் உயர் ரக தக்காளி கிலோ ஒன்று ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்படுகிறது. எனினும் பருப்பு விலையும் சற்று அதிகமாக இருப்பதால் இல்லத்தரசிகளின் புலம்பல் குறையவில்லை. கடந்த சில நாட்களாக விலை அதிகமாக இருந்ததால் தக்காளியை வாங்க யாரும் முன் வரவில்லை. இதனால் படிப்படியாக விலை குறைந்தது. கேரட் ஒரு கிலோ ரூ.60-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.90 - 120-க்கும் விற்கப்படுகிறது.

தக்காளி மற்றும் காய்களின் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. விலையை கட்டுக்குள் கொண்டு வந்து ஏழை மக்களும் பயன் பெறும் வகையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published in தமிழகம்
திங்கட்கிழமை, 13 ஜூன் 2016 00:00

ரூபாய் மதிப்பு சரிவு

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, வர்த்தக நேர துவக்கத்தின் போது இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை இந்திய ரூபாயின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் சரிந்துள்ளது. வர்த்தக நேர துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.66.94 ஆக உள்ளது. முன்னதாக கடந்த வார இறுதியில் ரூபாய் மதிப்பு ரூ.66.76 ஆக இருந்தது. இதே நிலை தொடர்ந்தால் ரூபாயின் மதிப்பு மீண்டும் 67 ஐ கடக்கும் என கூறப்படுகிறது.

Published in வணிகம்
பக்கம் 1 / 4
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…