JoomlaLock.com All4Share.net

Background Video

சென்னை சூளைமேடு ஜக்கரியா காலனி இரண்டாவது தெருவில் வசிப்பவர் தண்டபாணி.

சென்னை கோடம்பாக்கத்தில் ராமநாதன் அன்ட் சன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். சினிமா படப்பிடிப்புக்குத் தேவையான போலீஸ் சீருடைகளை இந்த நிறுவனத்தில் தண்டபாணி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் போலீசார் துணையுடன் இங்கு சோதனை நடத்தினர். அப்போது ரூ.40 கோடிக்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. செல்லாத ரூ. 40 கோடியை பறிமுதல் செய்த காவல்துறை, தீவிர விசாரணை நடத்தி வருகிறது..

Published in தமிழகம்

ஆர்.கே.நகரில் கொத்து கொத்தாக தினகரன் கோஷ்டி பணப்பட்டுவாடா புகாரில் சிக்கினாலும் அசருவதாக இல்லை... ஒரு ஓட்டுக்கு ரூ4,000 கொடுத்து தினகரனின் தொப்பி சின்னத்துக்கு வாக்களிக்க சொல்லும் புதிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.நகரில் பணத்தை பட்டுவாடா செய்ய ஒவ்வொரு நாளும் புது புது யுக்திகளை கடைபிடிக்கிறது ஃபெரா தினகரன் கோஷ்டி. ஆன்லைன் ஷாப்பிங், மளிகை பில் கட்டுவது, ஓடும் பஸ்ஸில் பட்டுவாடா என புது புது ரகங்களை இறக்கிக் கொண்டிருக்கிறது தினகரன் கோஷ்டி

Published in அரசியல்

''ஜவுளித் துறைக்கு, மத்திய அரசு அறிவித்துள்ள, 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான சலுகை திட்டங்களால், நடப்பு 2016 -17ம் நிதியாண்டில், ஆடைகள் துறையில், 5,000 கோடி ரூபாய் அளவிற்கு புதிய முதலீடுகள் குவியும்; இதனால், 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்,'' என, ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு குழு தலைவர் அசோக் ஜி.ரஜனி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: ஜவுளித் துறையில், மூலதன முதலீடுகளுக்கான மானியம், இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, மூலப்பொருட்களின் இறக்குமதி வரியுடன், மாநில வரியும், ஏற்றுமதியாளர்களுக்கு திரும்ப வழங்கப்படுகிறது. இதனால், செலுத்திய வரியில் திரும்ப பெறப்படும் தொகை, 7.25 சதவீதத்தில் இருந்து, 12.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், ஜவுளித் துறை சார்ந்த தொழிலாளர் சட்டங்களும் தளர்த்தப்பட்டுள்ளன. இத்தகைய ஊக்குவிப்புகளால், அடுத்த மூன்று ஆண்டுகளில், ஜவுளி மற்றும் ஆடைகள் துறையில், உற்பத்தியும், ஏற்றுமதியும் உயரும். இத்துறையில், 1,100 கோடி டாலர் முதலீடுகளை ஈர்த்து, 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், ஏற்றுமதியை, 3,000 கோடி டாலராக உயர்த்தவும், மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, நிச்சயம் எட்டப்படும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. நடப்பு நிதியாண்டில், ஆடைகள் துறையில், 5,000 கோடி ரூபாய்க்கு புதிய முதலீடுகள் குவியும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. வங்கதேசம், வியட்நாம் ஆகிய நாடுகள், ஜவுளி ஏற்றுமதிக்கு, வரி விலக்கு அளிக்கின்றன. ஆனால், இந்தியாவில், 9.5 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்படுகிறது. இதை குறைத்தால், ஏற்றுமதி மேலும் உயரும். கடந்த சில ஆண்டுகளாக, செலவு குறைவு காரணமாக, ஆடை தயாரிக்கும், 'ஆர்டர்'கள், சீனா போன்ற நாடுகளுக்கு சென்று கொண்டிருந்தன. தற்போது, அந்நாடுகளில் தொழிலாளர் ஊதிய விகிதம் அதிகரித்துள்ளதால், உற்பத்தி செலவினம் உயர்ந்துள்ளது. இனி, சீனா, மலிவு விலையில், ஜவுளி மற்றும் ஆடைகளை தயாரித்து, ஏற்றுமதி செய்வது கடினம். இது, இந்தியா உட்பட, இதர நாடுகளுக்கு, 28 ஆயிரம் கோடி டாலர் அளவிலான சந்தை வாய்ப்புக்கு வழிவகுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.ஜவுளி மற்றும் ஆடைகள் துறை, வரும், 2025ல், மூன்று மடங்கு உயர்ந்து, 30 ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ளதாக உருவெடுக்கும்; ஆண்டுக்கு, 15 ஆயிரம் கோடி டாலர் அன்னியச் செலாவணி கிடைக்கும்.-பி.சி.ஜி., ஆய்வறிக்கை

Published in வணிகம்
வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு...

பெட்ரோல் லிட்டருக்கு 89 பைசாவும், டீசல் லிட்டருக்கு 49 பைசாவும் நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டு உள்ளது.பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தை விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.அதன்படி, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 89 பைசாவும், டீசல் விலையை லிட்டருக்கு 49 பைசாவும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. மேலும், இந்த விலை குறைவு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Published in வணிகம்

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்வுடன் முடிந்தன. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவால் பிரிட்டன், உள்ளிட்ட ஐரோப்பிய பங்குச்சந்தைகள் மட்டுமின்றி ஆசிய, அமெரிக்க உள்ளிட்ட உலக பங்குச்சந்தைகளும் ஆட்டம் கண்டன. ஆனால் அந்த சரிவு நிலை கொஞ்சம் கொஞ்மாக மீண்டுள்ளது. 7-வது ஊதிய குழு உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பது, ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வுடன் இருப்பது, ஜூன் மாதத்திற்கான பங்குஈவுத்தொகை, வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் முடிந்தன.வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 259.33 புள்ளிகள் உயர்ந்து 26,999.72-ஆகவும், நிப்டி 83.75 புள்ளிகள் உயர்ந்து 8,287.75-ஆகவும் முடிந்தன. சென்செஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 28 நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன.

Published in வணிகம்
பக்கம் 1 / 6
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…