JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. Image result for perth test second day images photos
  
இதற்கிடையே, இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி, பெர்த்தில் நேற்று தொடங்கியது.
 
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியின் மூன்று வீரர்கள் அரை சதமடித்தனர். இறுதியில், 108.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

 

இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளும், பும்ரா, உமேஷ் யாதவ், விகாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
 
இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. துவக்க வீரர் முரளி விஜய் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய லோகேஷ் ராகுல் 2 ரன்களில் வெளியேறினார். இதனால் 8 ரன்களை எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
 
அடுத்து புஜாராவுடன் கேப்டன் விராட் கோலி இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடினர். 74 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. 24 ரன்கள் எடுத்த புஜாரா அவுட்டானார்.
 
அவரை தொடர்ந்து அஜிங்கியா ரகானே களமிறங்கினார். இவரும் விராட் கோலியும் நிதானமாக ஆடினர். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பவுண்டரிகள் அடித்தனர். இருவரும் சிறப்பாக ஆடி அரை சதமடித்து அசத்தினர்.
 
இறுதியில், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.  விராட் கோலி 82 ரன்களும், ரகானே 51 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவை விட இந்தியா இன்னும் 154 ரன்கள் பின்தங்கியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2018 00:00

பூமிக்கு அருகே வரும் வால்நட்சத்திரம்

பூமிக்கு அருகே டிச.16ம் தேதி (இன்று) 46b/விர்டேனன் என்ற வால்நட்சத்திரம் கடந்து செல்லும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா அறிவித்துள்ளது. இதை பைனாகுலர் மூலமாகவோ அல்லது வெறும் கண்களால் பார்க்க முடியும் என தெரிவித்துள்ளது.

பூமியிலிருந்து 11.4 மில்லியன் கி.மீ., தொலைவில் இந்த நட்சத்திரம் டிச.16ல் (இன்று) வர உள்ளது. இது போன்ற நிகழ்வு பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். இந்த நட்சத்திரம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர் கார்ல் விர்டானன் என்பவரால் 1948 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறி சென்னைக்கு 800 கிலோ மீட்டர் தூரத்தில் புயல் சின்னம் நிலைக்கொண்டு இருக்கிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும். இந்த புயலானது ஆந்திராவின் ஓங்கோல்- காக்கிநாடா இடையே கரையை கடக்கும்.

இதனால் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணூர், பழவேற்காடு, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் அஸ்வின், ரோகித் சர்மா நீக்கப்பட்டு உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களான களம் இறங்கிய ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் விளையாடியது. மதிய உணவு இடைவேளை 26 ஓவரில் விக்கெட் 66 ரன்கள் சேர்த்தது. 

பின்னர் உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஆரோன் பிஞ்ச் 103 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் அரைசதத்துடன் வெளியேறினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்தது.

பின்னர் உஸ்மான் கவாஜா 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அரைசதம் அடித்த ஹாரிஸ் 70 ரன்னில் வெளியேறினார். ஹேண்ட்ஸ்காம்ப் 7 ரன்னில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலியா 148 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது.

ஐந்தாவது விக்கெட்டுக்கு ஷேன் மார்ஷ் உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. ஷேன் மார்ஷ் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 58 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

7-வது விக்கெட்டுக்கு கேப்டன் டிம் பெய்ன் உடன் பேட் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். ஆஸ்திரேலியா இன்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 90 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் சேர்த்துள்ளது. டிம் பெய்ன் 16 ரன்னுடனும், பேட் கம்மின்ஸ் 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018 00:00

ஆப்பிரிக்காவில் இருந்த காந்தி சிலை அகற்றம்

20 ஆம் நூற்றாண்டில் இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் போற்றப்பட்ட தலைவர்களில் காந்தியும் ஒருவர். இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்து அகிம்சை வழியில் போராடியதற்காக அவர் அறியப்படுகிறார்.

காந்தி தனது இளம் வயதில் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தபோது, அங்குள்ள மக்களுக்காக போராடினாலும் கூட, கறுப்பினத்தவர்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சைக்குள்ளானது. இது குறித்த போராட்டங்களும் நடைபெற்றது.
 
தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்கள் குறித்து காந்தி எழுதும்போது,  அவர்களை அவமதிக்கும் வகையில் இனவெறி மிக்க வார்த்தையை (கபீர்ஸ்) பயன்படுத்தினார். அதுமட்டுமின்றி, இந்தியர்கள் கறுப்பினத்தவர்களை விட மேலானவர்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்  என சர்சை எழுந்தது. 
 
2016-ல் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர் அக்ராவில் உள்ள கானா பல்கலைக்கழக  வளாகத்தில் காந்தி சிலை ஒன்றை  திறந்து வைத்து இருந்தார். அது திறந்தது  முதலே அதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வந்தது.
 
காந்தி இனவெறியுடன் நடந்து கொண்டவர் என்றும் ஆப்பிரிக்கத் தலைவர்களின் சிலைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அப்போது கூறப்பட்டது.
 
இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர் அக்ராவில் உள்ள கானா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மகாத்மா காந்தியின் சிலை, புதன்கிழமையன்று, நீக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.
 
அகற்றப்பட்டுள்ள காந்தியின் சிலை வேறு இடத்தில் நிறுவப்படும் என்று கானா அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
இந்த தகவலை உறுதிசெய்த பல்கலைக்கழக நிர்வாகம், சிலையை இடம் மாற்றிய சம்பவத்துக்கு வெளியுறவு மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு அமைச்சகமே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளது.
பக்கம் 1 / 2289
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…