JoomlaLock.com All4Share.net

Background Video

சில வாரங்களுக்கு முன்பு வரை ரூ.225 வரை விற்ற துவரம் பருப்பு முதல் அனைத்து பருப்பு வகைகளின் விலைகள் தற்போது இறங்கு முகத்தில் உள்ளன. கடந்த 8-ம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இந்தியாவில் புழங்கிய பணத்தில் 85 சதவிகித பணத்தை செல்லாது என அறிவித்ததால் பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன் பின்னர் இந்திய ரிசர்வ் வங்கி புதிய 2000 ரூபாய் தாளை வெளியிட்டாலும் மக்களிடையே பணத்தட்டுப்பாடும் தீர்ந்தபாடில்லாமல்தான் இருக்கிறது. Image result for indian dals images

பழைய ரூபாய்களை மாற்றி புதிய 2000 ரூபாய் பெற்றவர்களுக்கு சில்லறை கிடைக்காமல் மற்றொரு பெரும் சிக்கல் ஏற்பட்டது. கடந்த வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 500 ரூபாய் தாளும் இன்னும் சரிவர விநியோகிப்படவில்லை. பணத்தட்டுப்பாடு நிலவுவதால் கடைகளில் நடைபெறும் அன்றாட வியாபாரம் பெருமளவு சரிந்து விட்டன. Related image

 

இந்நிலையில் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி குறைந்து வருவது குறித்து சில்லறை வியாபரிகளிடம் கேட்டபோது  " வழக்கமாக இந்த மாதத்தில்தான் பருப்பு விலை ஏறும். ஆனால் எப்போதும் இல்லாத வகையில் இந்த மாதத்தில் விலை வீழ்ச்சியாகிக்கொண்டிருக்கிறது.

தென் மேற்கு பருவ மழை அதிகம் பெய்து பருப்பின் விளைச்சல் அதிகரித்துவிட்ட காரணத்தால் உள்நாட்டு உற்பத்தி பெருகி உள்ளது. கள்ளப்பண ஒழிப்பு நடவடிக்கை காரணமாக பதுக்கல் அதிகம் நடக்கும். எனவே பருப்பின் விலை அதிகரிக்கும் என்றும் சிறுவியாபாரிகள் அஞ்சிக்கொண்டிருக்கும்போது இப்படி குறைந்துள்ளது.

இதற்கு பிரதமர் மோடி போட்டுள்ள பருப்பு இறக்குமதி ஒப்பந்தமே முதல் காரணம். கடந்த காங்கிரஸ் அரசுக்கு முந்தைய பாரதிய ஜனதா அரசில் கூட பருப்பு விலையை கட்டுக்குள் வைக்க ஏற்றுமதி இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பிரதமர் செய்துள்ள ஒப்பந்தத்தினால் தான்சானியா, கென்யா, மாளாவியா,கனடா ஆகிய நாடுகளில் இருந்து துவரம்பருப்பு இறக்குமதியாக உள்ளது.

அவை வந்தால் இன்னும் விலை குறையும் என்கிற காரணத்தால் சிறிய அளவில் இருப்பு வைத்திருந்த மொத்த வியாபாரிகளும் தங்களின் இருப்பை சந்தையில் வந்த விலைக்கு விற்கத் தொடங்கிவிட்டனர்.

இவை ஒரு பக்கம் இருந்தாலும் ரூபாய் பிரச்னைதான் பெரிய சிக்கலாக இருக்கிறது. லாரி வாடகையை நூறு ரூபாய்களாக கேட்கின்றனர். 500 ரூபாய்தான் போதிய அளவில் புழக்கத்துக்கு கிடைக்கவில்லை என்றால் நூறு ரூபாய்க்கு பெரும் தட்டுப்படாக உள்ளது. 50 சதவிகிதம் வியாபாரம் சுத்தமாக படுத்துவிட்டது. அனைத்து வகை பருப்புகளின் விலையும் வீழ்ந்துவிட்டது.Image result for indian dals images

இந்நிலையில் பர்மாவிலிருந்து உளுந்தம்பருப்பும் வர இருக்கிறது. இந்தியாவில் இம்முறை உளுந்து விளைச்சல் அதிகமாக உள்ளது.இந்த சூழலில் இறக்குமதி செய்யப்படும்போது இன்னும் அதிகமாக விலை வீழ்ச்சியடையவே அதிக வாய்ப்புள்ளது. வரும் ஜனவரியில் 100 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை உளுந்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.

சிறு வியாபாரிகளின் சந்தையில் இந்த ஏற்ற இறக்கம் உடனுகுடன் நடை முறைக்கு வந்து விடுகிறது. ஆனால் பேரங்காடிகளில் "கேஷ் லெஸ்" என்கிற அட்டை வர்த்தகம் செய்யும் இடங்களில் விலை குறைந்தாலும் உடனடியாக குறைக்க மாட்டார்கள்.பொதுமக்கள் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டுள்ள விலையை மட்டுமே நம்பி கொடுக்கிறார்கள்.

மாத சாமான் வாங்கும் மத்திய வர்க்கத்தினர் நாளைந்து கடையில் விசாரித்து வாங்கினால் பயன் அடையலாம் " 

 மேலும்  பருப்பு வகைகள் " வடமாநிலங்களான மத்தியப்பிரதேசம், குஜராத் போன்றவற்றில் இந்த பணப்பிரச்னையில் விலை ஏறும் என எதிர்பார்த்து பழைய தாள்களைக் கொண்டு பருப்புகளை வாங்கி ஸ்டாக் வைத்தவர்கள் தற்போது விலை இறங்கும் என தெரியவந்ததும் பதுக்கல் பருப்புகளை சந்தைக்கு கொண்டு வந்ததும் கிடைத்த விலைக்கு விற்று காசாக்கியதும் விலை இறங்கியதற்கு முக்கிய காரணம்." என்று தெரிவித்தனர் 

செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2016 00:00

மறுபிறவி எடுக்கும் நோக்கியா

Written by

உலகப்புகழ் பெற்ற அலைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியா ஸ்மார்ட்போன் தயாரிப்பில் மீண்டும் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்விட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த உலகின் புகழ் பெற்ற அலைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியா இரண்டு வருடங்களுக்கு முன்பு முன்னணி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட்டுக்கு விற்கப்பட்டது.மேலும் பல்வேறு நாடுகளில் செய்யப்பட்டு வந்த அந்நிறுவனத்தின் அலைபேசி தயாரிப்பு தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.

இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் 'இரண்டு வருடங்களுக்கு போட்டியில்லை' என்ற நோக்கியாவின் ஒப்பந்தம் 2016-உடன் முடிவடைவதைத் தொடர்ந்து இந்நிறுவனம் மீண்டும் அலைபேசி தயாரிப்பில் இறங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெச் .எம்.டி குளோபல் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பில் நோக்கியா ஈடுபட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 2017-ஆம் ஆண்டில் ஸ்பெயினின் பார்சிலோனாவில் 'உலகலாவிய மொபைல் கூட்டமைப்பு' மாநாடு நடக்க உள்ளது.இந்த மாநாட்டில் நோக்கியா நிறுவன தலையை செயல் அதிகாரி ராஜிவ் சூரி உரையாற்ற உள்ளார். எனவே அந்த மாநாட்டில் நோக்கியா புதிய ஸ்மார்ட்போன்களை அறிவிப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மூன்று புதிய ஆண்டிராய்டு வகை ஸ்மார்ட் போன்களை நோக்கியா அறிமும் செய்யவுள்ளதாகவும்.அவற்றில் ஒரு போனுக்கு நோக்கியா D1C என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

ரூபாய் நோட்டு பிரச்னை காரணமாக ஈரோடு ஜவுளிச்சந்தை மற்றும் ஜவுளி கிடங்குகளில் ரூ.500 கோடிக்கு ஜவுளி தேக்கம் அடைந்துள்ளது.

ஈரோடு ஜவுளிச்சந்தை வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு முதல் புதன்கிழமை இரவு வரை நடைபெற்று வருகிறது. அதுமட்டுமன்றி பிற நாள்களிலும் கனி மார்க்கெட் ஜவுளிச்சந்தைக்கு வியாபாரிகள் வந்து ஜவுளிகளை கொள்முதல் செய்வது வழக்கம்.Image result for erode textile bazaar images

தமிழகம் மட்டுமன்றி கேரளம், தெலுங்கானா, ஆந்திரம், கர்நாடகம், ஒடிசா மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் வாரந்தோரும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் இச்சந்தைக்கு வந்து செல்கின்றனர்.

இச்சந்தையில் சேலைகள், லுங்கிகள், துண்டுகள், போர்வைகள், சுடிதார்கள், குழந்தைகளுக்கான ஜட்டிகள், பனியன்கள், ரெடிமேடு ஆடைகள், மேஜை விரிப்புகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், மிதியடிகள் உள்ளிட்டவற்றில் சுமார் 1,000 ரக ஜவுளிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

மாநகராட்சி இடம் தவிர, தலைமை அஞ்சல் நிலையம் எதிரே உள்ள சென்ட்ரல் திரையரங்கு வளாகம், அசோகபுரம் ஆகிய இடங்களிலும் ஜவுளிசந்தை நடைபெறுகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான கனிமார்க்கெட் வாரத்தின் பிற நாள்களிலும் இயங்கும்.

இங்கு வார நாள்களில் 500 கடைகளும், ஜவுளிச்சந்தையின்போது 900 கடைகளும் இயங்கும். திருப்பூரில் உற்பத்தியாகும் 80 சதவீத பனியன், ஜட்டிகளும், ஈரோட்டில் உற்பத்தியாகும் லுங்கி, சட்டைகள், ரெடிமேடுகள், துண்டுகள் ஆகியவற்றில் 100 சதவீதமும், தமிழகத்தில் பிற பகுதிகளில் உற்பத்தியாகும் சுடிதார்களில் 70 சதவீதமும், போர்வைகளில் 70 சதவீதமும் ஈரோடு சந்தையின் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது.

ஈரோடு ஜவுளிச்சநதையில் கொள்முதல் செய்வதற்காக தமிழக்ததின் பிற மாவட்டங்களில் இருந்து மட்டுமன்றி கர்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுவை ஆகிய மாநிலங்களில் இருந்தும் வாரந்தோறும் வியாபாரிகள் வந்துசெல்கின்றனர்.

இந்நிலையில், ரூபாய் நோட்டு பிரச்னையால் ஈரோடு ஜவுளிச்சந்தை கடந்த ஒருவாரமாக முற்றிலும் முடங்கியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ என்ற 4ஜி இண்டர்நெட் சேவையை அறிமுகப்படுத்தி, புரட்சி செய்த ரிலையன்ஸ் நிறுவனம், அடுத்து மலிவான விலையில் 4ஜி ஸ்மார்ட்போனை வழங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டை பயன்படுத்த 4ஜி செல்போன் வேண்டும். 4ஜி செல்போன் விலை ரூ.3000 ரூபாயில் தொடங்குகிறது.

தற்போது அதிலிருந்தும் குறைந்த விலைக்கு, 4ஜி செல்போனை விற்பனை செய்யும் முடிவில் ரிலையன்ஸ் நிறுவனம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதாவது, புதிய ரிலையன்ஸ் ஜியோ செல்போனின் விலை ரூ.1000 அல்லது ரூ.1500/- வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த செல்போனில், ஸ்ப்ரெட்ரம் 9820 பிராசசர், அதிக திறன் கொண்ட கேமரா, பெரிய டிஸ்ப்ளே, வை-பை மற்றும் ப்ளூடூத் போன்ற அம்சங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

சனிக்கிழமை, 12 நவம்பர் 2016 00:00

சரியும் தங்கம் விலை !

Written by

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த அடுத்த நாள் தங்கம் விலை பவுனுக்கு ஆயிரத்துக்கு மேல் கூடியது. தற்போது தங்கம், வெள்ளி விலை சரிந்து வருகிறது.

22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.320 சரிந்து ரூ.23,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.2,920க்கு விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.3,059க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு ரூ.3.10 குறைந்து ரூ.44.90க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.2,825 குறைந்து ரூ.42,005க்கும் விற்பனை செய்யப்படுகிறது. :-மதன்குமார்.

 
செவ்வாய்க்கிழமை, 08 நவம்பர் 2016 00:00

இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து

Written by

இந்திய பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.66.69-ஆக இருந்தது. பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம், உலகளவில் டாலரின் மதிப்பு சரிந்து பிறநாட்டு கரன்சிகளின் மதிப்பு உயர்ந்திருப்பதால் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை, 08 நவம்பர் 2016 00:00

பங்குச்சந்தையில் ஏற்றம்

Written by

இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 142 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 184.84 புள்ளிகளாக அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 141.72 புள்ளிகள் உயர்ந்து 27,600.71 புள்ளிகளாக உள்ளது. சுகாதாரம், உலோகம் மற்றும் ரியலஎஸ்டேட் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 46.10 புள்ளிகள் அதிகரித்து 8,543.15 புள்ளிகளாக உள்ளது.

அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் செவ்ரோலட் போல்ட் என்ற புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தாண்டு இறுதி வாக்கில் அது விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள செவ்ரோலட் போல்ட் வகை கார்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 360 கி.மீ., வரை ஓடும் என அந்நிறுவனம் உறுதியளிக்கிறது. இதனால் டீசல் மற்றும் பெட்ரோலில் ஓடக் கூடிய கார்களை காட்டிலும் செலவு குறையும் என்று கூறுகிறது.

 கவர்ச்சியான சீட் அமைப்புகள், கால்களை வசதியாக வைத்துக் கொள்ள அதிக இடவசதி, அதிக தூரம் நிற்காமல் ஓடக் கூடிய திறன் போன்ற சிறப்பம்சங்களுடன் வௌிவர இருக்கும் இவ்வகை கார்களுக்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று ஜி.எம். நிறுவனம் நம்பிக்கை தெரிவிக்கிறது.

 இந்த புதிய வகை காரின் ஆரம்ப விலை 40,000 அமெரிக்க டாலர்கள் என அந்நிறுவனம் தெரிவிக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ 27 லட்சம்.

விண்டோஸ் 7 மற்றும் 8 இயங்குதளத்தின் விற்பனையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிரடியாக நிறுத்தியுள்ளது. இதன்மூலம் விண்டோஸ் 10 இயங்குதளத்தின் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

சர்வதேச அளவில் கணினி பயன்பாட்டுக்கான மென்பொருள் தயாரிப்பில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முன்னிலையில் உள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் விண்டோஸ் மென்பொருட்களே பெரும்பாலான கணினிகளில் பயன்படுத்தப்படுகிறது.

காலத்திற்கு ஏற்றவகையில், அவ்வப்போது விண்டோஸ் மென்பொருளில் அப்டேட் வடிவத்தை மைக்ரோசாஃப்ட் வெளியிடுவது வழக்கம். தற்போது விண்டோஸ் 11, 12 ஆகிய மென்பொருள் தயாரிப்பில் மைக்ரோசாஃப்ட் கவனம் செலுத்திவருகிறது.

விண்டோஸ் 10 இயங்குதளம் மட்டுமே விற்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விண்டோஸ் 7, 8 விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதே தவிர, விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கு 2020 ஆம் ஆண்டு வரையும், விண்டோஸ் 8.1 இயங்குதளத்திற்கு 2023 வரையும் சேவை வழங்கப்படும் என்று, மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 42 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. கடந்த நான்கு நாள் வர்த்தகத்தில் குறியீடு 511.23 புள்ளிகளாக சரிந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 42.53 புள்ளிகள் சரிந்து 27,387.75 புள்ளிகளாக உள்ளது. ஐடி, டெக், ஆட்டோ மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 0.43% வரை குறைந்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 14.80 புள்ளிகள் குறைந்து 8,470.15 புள்ளிகளாக உள்ளது.

சன் பார்மா, டாக்டர் ரெட்டிஸ், லூபின், எல் & டி, மாருதி சுசுகி, சிப்லா, ஹீரோ மோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பார்தி ஏர்டெல், விப்ரோ போன்ற முன்னணி நிறுவன பங்குகள் குறைந்து காணப்பட்டன.

 
பக்கம் 9 / 22
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…