JoomlaLock.com All4Share.net

Background Video

வியாழக்கிழமை, 08 செப்டம்பர் 2016 00:00

சென்செக்ஸ் 72புள்ளிகள் சரிவு..!!

Written by

இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 72 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 51.66 புள்ளிகளாக குறைந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 71.80 புள்ளிகள் சரிந்து 28,854.56 புள்ளிகளாக உள்ளது. ஐடி, தொழில்நுட்ப, வங்கி பரிமாற்றம், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் மின்சாரம் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 3.06% வரை குறைந்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 21.05 புள்ளிகள் சரிந்து 8,896.90 புள்ளிகளாக உள்ளது. :-மதன்குமார்.

புதன்கிழமை, 07 செப்டம்பர் 2016 00:00

சந்தைக்கு வருகிறது ஐ ஃபோன் 7

Written by

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐ ஃபோன் 7-ல், வழக்கமாக மற்ற செல்பேசிகளில் உள்ளதைப் போன்று, ஹெட்ஃபோன் எனப்படும் காதுகளிலில் பொருத்திக் கேட்கும் சாதனத்தை இணைக்கும் வசதி இருக்காது.

ஹெட்ஃபோன் சாக்கெட் என்ற இணைப்பைப் பொருத்தும் இடத்தில், மற்ற பாகங்களைப் பொருத்த முடியும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. இந்த முடிவால், ஒயர் இணைப்பு இல்லாத, காதுகளில் பொருத்திக் கேட்கும் வசதிகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க இந்த தைரியமான முடிவு வழிவகுக்கும் என அந் நிறுவனம் கருதுகிறது.

ஒயர் இல்லாத, ஏர்பாட்ஸ் என்ற கூறப்படும் காதில் பொருத்திக் கேட்கும் புதிய சாதனத்தையும் ஆப்பிள் வெளியிட்டுள்ளது.

ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முடிவு குறித்து, நிபுணர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஒலித்திறன் சிறப்பாக இருக்க வேண்டுமானால், ஒயருடன் கூடிய ஹெட்ஃபோன்தான் சிறந்தது என்பது நிபுணர்களின் வாதம். ஆனால், 159 அமெரிக்க டாலர் அல்லது 119 பவுண்டு மதிப்புடைய தனது ஏர்பாட் கருவிகளை பயன்படுத்துவதில் பல சாதக அம்சங்கள் உள்ளதாக ஆப்பிள் வாதிடுகிறது.

வழக்கமான ப்ளூடூத் ஹெட்செட்களைவிட, ஒயர் இல்லாத சாதனங்களை விரைவில் இணைக்க முடியும் என அது கூறுகிறது. ஏர்பாட் சாதனத்தை காதுகளில் இருந்து எடுத்துவிட்டால், இசை தானாக நின்றுவிடும் என்றும் தெரிவிக்கிறது. ஏர்பாட் சார்ஜ் செய்தபிறகு, ஐந்து மணி நேரத்துக்கு நீடிக்கும் என்கிறது ஆப்பிள்.

சான்ஃபிரான்சிஸ்கோவில் அறிமுகம் அமெரிக்காவை மையமாகக் கொண்ட ஆப்பிள் நிறுவனம், சான் ஃபிரான்சிஸ்கோவில் புதிய ஐஃபோனை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.

புதிய ஐ ஃபோனில், ஹோம் பட்டனில் எந்த அளவுக்கு அழுத்தம் தரப்படுகிறது என்பதை உணர்ந்து, அதற்கு ஏற்றபடி அதிர்வு (வைப்ரேஷன்) அடிப்படையிலான பதில்களைத் தரும். புதிய ஃபோன், சுமார் 30 நிமிடங்கள் வரை, 3.2 அடி ஆழமுள்ள தண்ணீரில் போடலாம். எந்த பாதிப்பும் ஏற்படாது என அந் நிறுவனம் கூறுகிறது.

பெரிய ஐஃபோன் 7 பிளஸ், பின்புறம், ஒய்ட் ஏங்கிள் மற்றும் டெலிஃபோட்டோ ஆகிய இரண்டு லென்ஸ்களுடன் கூடிய கேமராவை வழங்குகிறது. இதன் மூலம், படத்தின் தரம் குறையாமல் குளோஸப் காட்சி எடுக்கவும், முன்பிருந்ததை விட 10 எக்ஸ் ஜூம் பொருத்தவும் வழியேற்படுத்துகிறது.

கேமரா செயலி மூலம் புகைப்படங்களை கிராப் செய்து கொள்ள முடியும். இதுபோன்ற வசதி, எல்.ஜியின் ஜி5 செல்பேசியில் ஏற்கெனவே உள்ளது. புதிய ஐஃபோனில் இரு பக்கமும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால், ஒலியளவு ஐஃபோன் 6-ஐ விட இருமடங்காக இருக்கும் என்கிறது ஆப்பிள்.

புதன்கிழமை, 07 செப்டம்பர் 2016 00:00

வர்த்தக முடிவு- சென்செக்ஸ் புள்ளி சரிவு..!!

Written by

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 51.66 புள்ளிகள் குறைந்து 28,926.36 புள்ளிகளாக வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 25.05 புள்ளிகள் உயர்ந்து 8,917.95 புள்ளிகளாக வர்த்தகமானது. :-மதன்குமார்.

புதன்கிழமை, 07 செப்டம்பர் 2016 00:00

ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு..!!

Written by

இந்திய பங்குச்சந்தைகள் தள்ளாட்டத்துடன் இருந்தபோதும் ரூபாயின் மதிப்பு உயர்வுடனேயே அதுவும் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வுடனேயே இருக்கிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 காசுகள் உயர்ந்து ரூ.66.33-ஆக இருந்தது. பங்குச்சந்தைகள் தள்ளாட்டத்துடன் இருந்தபோதிலும், அந்நிய முதலீடு அதிகரிப்பாலும், வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அதிகளவில் அமெரிக்க டாலரை விற்பனை செய்வதாலும் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 30 காசுகள் உயர்ந்து ரூ.66.52-ஆக இருந்தது. :-மதன்குமார்.

 
செவ்வாய்க்கிழமை, 06 செப்டம்பர் 2016 00:00

தங்கம் விலை உயர்வு..!!

Written by

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.2,947-க்கும், ஒரு சவரன் ரூ.23,576-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50.00-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.46,770-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.:-சரவணக்குமார்.

 
செவ்வாய்க்கிழமை, 06 செப்டம்பர் 2016 00:00

ஆப்பிள் நிறுவனத்துக்கு 95,000 கோடி ரூபாய் அபராதம்

Written by

உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.96,500 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள சீனா வந்துள்ள ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜான் கிளோட் ஜங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அயர்லாந்தில் செயல்பட்டு வரும் ஆப்பிள் நிறுவனம், சட்ட விரோதமாக பல வரிச் சலுகைகளை அந்த நாட்டு அரசிடம் பெற்றுள்ளது என்று ஐரோப்பிய யூனியனின் விசாரணைக் குழு குற்றம் சாட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அயர்லாந்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு ஏராளமான வரிச் சலுகையை அறிவித்துள்ளது. ஆனால் இது ஐரோப்பிய யூனியன் சில விதிமுறைகளுக்கு எதிரானதாகும். கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு அயர்லாந்து அளித்த சலுகை முறைகேடானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் மட்டுமே வரியாக ரூ. 96,500 கோடியை அபராதமாக அயர்லாந்துக்கு செலுத்த வேண்டும் என்று ஐரோப்பிய யூனியனின் விசாரணைக் குழு உத்தரவிட்டது.

மேலும் இது அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கை இல்லை என்றும் இந்த நடவடிக்கையால் அமெரிக்க நிறுவனங்களைவிட ஐரோப்பிய நிறுவனங்கள்தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஜான் கிளோட் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை, 06 செப்டம்பர் 2016 00:00

இந்திய ரூபாயின் மதிப்பு அதிரடி உயர்வு..!!

Written by

இந்திய பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் அதிரடியாக உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 31 காசுகள் உயர்ந்து ரூ.66.51-ஆக இருந்தது.உலகளவில் டாலரின் மதிப்பு சரிந்து பிறநாட்டு கரன்சிகளின் மதிப்பு உயர்ந்ததாலும், பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம், வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அதிகளவில் அமெரிக்க டாலரை விற்பனை செய்து வருவதாலும் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ.66.82-ஆக இருந்தது.:-சரவணக்குமார்.

 
சனிக்கிழமை, 03 செப்டம்பர் 2016 00:00

பேடிஎம்மின் அதிரடி கடன் மழை

Written by

சீன நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் மிகப்பெரிய முதலீட்டில் இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகத்தைப் பெற்றுள்ளது பேடிஎம் நிறுவனம்.

பேடிஎம் நிறுவனம் அடுத்தச் சில மாதங்களில் தனது வாடிக்கையாளர்களுக்குத் தனிநபர் கடன் வழங்கப்போவதாக தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடத்தில் 5,000 முதல் 10,000 ரூபாய் வரையிலான கடனை அளிக்கவும், 2 நாட்களுக்குள் 2 லட்சம் ரூபாய் வரையிலான கடனை அளிக்க உள்ளதாகவும் பேடிஎம் நிறுவனத்தின் துணைத்தலைவர் கிருஷ்ணா தெரிவித்தார்.

தற்போது பேடிஎம் நிறுவனம் தனியாகப் பேமெண்ட் வங்கியை உருவாக்கி வரும் நிலையில், இக்கடன் திட்டத்தை 10 வங்கிகளுடன் இணைந்து தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட உயர்தர ஸ்மார்ட் செல்பேசிகள் சிலவற்றில் இருக்கும் பேட்டரிகள் வெடிப்பதாக வந்த புகார்களை அடுத்து, சாம்சங் நிறுவனம், புதிய மாடல் ஸ்மார்ட் செல்பேசி விற்பனையை இடைநிறுத்தியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனையை தொடங்கிய பிறகு, 2 மில்லியனுக்கும் மேலான கேலக்ஸி நோட் 7-எஸ் செல்பேசிகளை தென் கொரிய நிறுவனமான சாம்சங் விற்பனை செய்திருக்கிறது.

இந்த செல்பேசியை ஏற்கனவே வாங்கியிருப்போருக்கு புதிய செல்பேசி வழங்கப்படும்.

இந்த நிறுவனத்தின் முக்கிய போட்டி நிறுவனமான ஆப்பிள், புதிய ஐஃபோனை வெளியிட இருப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, இவ்வாறு செல்பேசிகளை திரும்ப பெறுவதாக தெரிவித்திருப்பது, சாம்சங்கிற்கு கெட்ட பெயரை உருவாக்கும்.

வெள்ளிக்கிழமை, 02 செப்டம்பர் 2016 00:00

இந்திய ரூபாய் மதிப்பு இன்று உயர்வு-ரூ66.85

Written by

சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ.66.85 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாயின் மதிப்பு 66.95 ஆக இருந்தது. :-மதன்குமார்.

 
பக்கம் 10 / 20
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…