JoomlaLock.com All4Share.net

Background Video

புதன்கிழமை, 08 ஜூன் 2016 00:00

அதி நவீன பிட்னெஸ் ட்ராக்கர்

Written by

இதுவரை காலமும் மணிக் கட்டில் அணியக்கூடிய பிட்னெஸ் ட்ராக்கரையே அனைத்து நிறுவனங்களும் அறிமுகம் செய்து வந்தன.

இவற்றில் உடல் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை மட்டுமே ஒப்பீடு செய்யக்கூடியதாக இருந்தது.

ஆனால் முதன் முறையாக இவற்றினையெல்லாம் தாண்டி அதி நவீன பிட்னெஸ் ட்ராக்கரை சம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

Gear IconX எனும் இந்த ட்ராக்கர் ஆனது வழமைக்கு மாறாக காதில் அணியக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிகவும் பாரம் குறைந்ததாக காணப்படும் இச் சாதனம் பாதுகாப்பானதாகவும், பயன்படுத்துவதற்கு வசதியாகவும் இருக்கின்றது.

இதில் தரப்பட்டுள்ள 4GB சேமிப்பு வசதியின் ஊடாக 1000 வரையான பாடல்களை சேமித்து வைத்து கேட்டு மகிழவும் முடியும்.

இவற்றுடன், இதயத்துடிப்பு வீதம், எரிக்கப்படும் கலோரியின் அளவு, வேகம், தூரம், கால அளவு என்பவற்றினையும் அறிந்துகொள்ள முடியும்.

மேலும் குரல் வழி கட்டுப்பாட்டினைக் கொண்டிருத்தல் விசேட அம்சமாகும்.

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 95.74 புள்ளிகள் உயர்ந்து 27,105.41-ஆகவும், நிப்டி 22.45 புள்ளிகள் உயர்ந்து 8,288.90-ஆகவும் இருந்தன. வங்கி வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யாதது, அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு, பருவமழை மீதான எதிர்பார்ப்பு, வரும் வெள்ளியன்று வெளியாக உள்ள ஏப்ரல் மாதல் தொழில்துறையின் வளர்ச்சி போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று மும்பையில் இன்று நடைபெற்ற நிதிக் கொள்கை ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரெப்போ எனப்படும் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவே தொடரும்.

மேலும், சி.ஆர்.ஆர். எனப்படும் வங்கிகளின் ரொக்க கையிருப்பபு விகிதமும் 4 சதவீதமாகத் நீடிக்கும்.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பில்லை.

இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

மும்பையில் இன்று நடைபெற்ற நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரகுராம் ராஜன், 7வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்தினால் ஏற்படும் பணவீக்க சூழலை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை கருதியும் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை, 07 ஜூன் 2016 00:00

ரூபாயின் மதிப்பு ரூ.66.90 உயர்வு..

Written by

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து நான்காவது நாளாக உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (ஜூன் 7-ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.66.90-ஆக இருந்தது. பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றத்தாலும், வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க டாலரை விற்பனை செய்து வருவதாலும் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 28 காசுகள் உயர்ந்து ரூ.66.97-ஆக இருந்தது.

திங்கட்கிழமை, 06 ஜூன் 2016 00:00

இந்திய ரூபாய் அதிரடி உயர்வு

Written by

சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க நாணயத்தை அதிகம் விற்பனை செய்ததை அடுத்து இந்திய ரூபாயின் மதிப்பு அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக 67 என்ற நிலையிலேயே இருந்து வந்த ரூபாய் மதிப்பு மீண்டும் 66 என்ற நிலையை எட்டி உள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 37 காசுகள் உயர்ந்து ரூ.66.88 ஆக உள்ளது. முன்னதாக கடந்த வார வர்த்தக நேர இறுதியில் ரூபாயின் மதிப்பு ரூ.67.25 ஆக இருந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் காணப்படும் தொடர் ஏற்றமான நிலையும் சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலையில் இன்று(ஜூன் 4ம் தேதி) உயர்வு காணப்படுகிறது, சவரனுக்கு ரூ.440 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,781-க்கும் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.22,248-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.580 உயர்ந்து ரூ.29,740-க்கும் விற்பனையாகிறது.வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து ரூ.42.50-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.39,755-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 00:00

தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைவு

Written by

தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்துள்ளது. தங்கம், வெள்ளி சந்தையில் இன்றும் விலை குறைந்து காணப்படுகிறது.  இன்றைய காலை நேர நிலரப்படி சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கம் ரூ.2722 க்கும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.29110 க்கும் விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.21,776 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.41.60 ஆகவும், பார்வெள்ளி விலை ரூ.38,865 ஆகவும் உள்ளன.

வங்கி கடன் பெற்று கனவு இல்லத்தை கட்டி முடித்து கிரக பிரவேசம் செய்து வீட்டுக்கு வந்தாகிவிட்டது. ஓரிரு மாத வீட்டு கடன் தவணைகள் செலுத்திய பின்பு வரக்கூடிய மாதங்களில் எதிர்பாராத குடும்ப செலவினங்களால் அந்த மாத ஈ.எம்.ஐ என்று சொல்லப்படும் மாத தவணை கட்டுவதில் தாமதம் ஏற்பட்டு விடுகிறது. தவணையை தள்ளிப்போட்டதால் வரும் மாதங்களில் கட்ட வேண்டிய தொகை அதிகமாகியிருக்கும். அந்த சமயத்தில் நண்பர் அல்லது உறவினர் வாங்கிய வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் நம்மை விடவும் குறைவாக உள்ளது என்ற தகவல் கிடைக்கும்போது மன அழுத்தம் அதிகரித்து விடும்.

வீடு கட்டும் முடிவை எடுத்த பிறகு எளிமையான நடைமுறைகள் கொண்ட வங்கியைத்தான் பலரும் தேர்ந்தெடுக்கிறார்கள். பணம் கைக்கு வந்து சொந்த வீட்டை கட்டி ‘உஸ்..அப்பாடா..!’ என்று நிம்மதியாக அமர வேண்டும் என்ற மனநிலைதான் அதற்கு காரணம். வீட்டு கடன் வட்டி விகிதம் பற்றி கவனிக்கும் மனநிலை அப்போது பலருக்கும் இருப்பதில்லை. நடைமுறையில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால் தவணை தவறும்போதுதான் வட்டி விகிதம் பற்றிய
சிந்தனை மனதில் வருகிறது. வட்டி விகிதத்தை குறைத்து ஈ.எம்.ஐ கட்ட ஏதாவது வழி இருக்கிறதா..? என்ற கேள்விக்கு நிதி ஆலோசகர்கள் தரும் பதிலை இங்கே பார்ப்போம்.

* ‘பேலன்ஸ் டிரான்ஸ்பர்’ என்னும் நடைமுறையை அவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அதாவது மீதமுள்ள வீட்டு கடனை குறைவான வட்டி விகிதமுள்ள வங்கிக்கு மாற்றிக்கொண்டு அந்த விகிதத்தின்படி ஈ.எம்.ஐ செலுத்தி வரும் முறைதான் அது.

* வீட்டு கடன் பெறுவதற்கு தரப்பட்ட விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட எல்லாவிதமான ஆவணங்களும் இதற்கும் அவசியம். ஆவணங்கள் தக்க சோதனைகளுக்கு பின் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மீதமுள்ள கடன்தொகைக்கான மதிப்பை காசோலையாக பழைய வங்கிக்கு வழங்கப்படும்.

* முந்தைய வங்கியிலிருந்து ஒரிஜினல் ஆவணங்கள் அனைத்தையும் வாங்கி புதிய வங்கியில் ஒப்படைக்க வேண்டும். முந்தைய வங்கியின் எல்லாவித நடைமுறைகளும் புதிய வங்கியிலும் பின்பற்றப்படும்.

* சார் பதிவாளர் அலுவலகத்தில் கடன் கொடுத்த புதிய வங்கியின் பெயர், மற்றும் கடனுக்கான விபரங்கள் ஆவணமாக பதிவு செய்யப்படும்.

* எல்லா நேரங்களிலும், எல்லோருக்கும் இம்முறை பொருத்தமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. மீதியுள்ள கடன் தொகை, வங்கிகளில் வசூலிக்கப்படும் ‘போர்குளோசர் கட்டணம்’ என்ற அபராத கட்டணம், மற்றும் ‘பிராசஸிங் கட்டணம்’ போன்றவற்றையும், மாறக்கூடிய வட்டி விகித வேறுபாடுகளையும் கணக்கிட வேண்டும். அதன்பிறகு ‘பேலன்ஸ் டிரான்ஸ்பர்’ என்பது லாபகரமாக இருக்கும் என்பது தெரிய வந்தால் இம்முறையை கடை பிடிக்கலாம்.

* பொதுவாக நீண்ட கால கடன்களுக்கு இது பொருத்தமாக இருக்கும்.

வியாழக்கிழமை, 02 ஜூன் 2016 00:00

டீசல் விலை உயர்வு..

Written by

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.58 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.26 காசுகளும் உயர்ந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறியதாவது: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பொருட்களின் விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதை எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாக கொண்டுள்ளன. தமிழகத்தில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.64.70க்கும், டீசல் ரூ.55.73க்கும் விற்பனையாகிறது.

சில ஊர்களில் இந்த விலையில் சில மாற்றம் இருக்கலாம். லாரி தொழில் ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளால் நலிவடைந்துள்ளது. தொழிலை அழிக்கும் நடவடிக்கையில் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. டீசல் விலை உயர்வால் லாரி வாடகை உயரும். இதன் மூலம் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். எனவே 15 நாளைக்கு ஒரு முறை டீசல் விலையை உயர்த்துவதை கைவிட வேண்டும். இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். இந்த பிரச்னை குறித்து ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பேசி போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். தற்போதைய டீசல் விலை உயர்வால் லாரி வாடகை 10 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

சிங்கப்பூர்: உள்நாட்டில் அதிகரித்து வரும் தேவை காரணமாக, அடுத்த நான்கு வருடங்களில், இந்தியாவில் 56 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு எதிர்பார்ப்பதாக மின்னணு மற்றும் ஐடி அமைச்சகத்தின் அதிகாரி மார்வாகா கூறினார். மேலும் அவர், உள்நாட்டை தேவையை சமாளிக்க, 2020ம் ஆண்டிற்குள், மின்னணு உற்பத்தி 400 அமெரிக்க டாலர் அளவுக்கு இருக்கும் எனவும், 80 பில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும் எனவும் கூறினார்.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…