JoomlaLock.com All4Share.net

Background Video

யமஹா நிறுவனம், தங்களின் 2017 எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர் (2017 SCR950 Scrambler) மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளனர்.

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர்...

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் யமஹா நிறுவனம், தங்கள் வாகனங்களின் ரேஞ்ச்சில் நடுத்தர எடை கொண்ட (middleweight line-up) வாகனங்களின் போர்ட்ஃபோலியோவை, 2017 எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர் அறிமுகத்துடன் மேம்படுத்துயுள்ளனர்.

ஸ்டைல்;

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர், ரெட்ரோ-ரேசிங் சைட் நம்பர் பிளேட்கள் கொண்டுள்ளது.

மேலும், இது துனிச்சலான கலர் ஆக்சென்ட்கள், கொண்ட்டுள்ளது. இது 1970-களில் இருந்த யமஹா ஸ்க்ராம்ப்ளரில் காணப்பட்டது போன்ற ஸ்டைலிங் கொண்டுள்ளது.

தோற்றம்;

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர், கிளாசிக் ஸ்க்ராம்ப்ளர் ஸ்டைல் அம்சங்கள் கொண்டுள்ளது.

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர், ஸ்போக்குகளால் ஆன வீல்கள், ட்ரெயில் டயர்கள், யமஹாவின் எக்ஸ்டி 500 என்ட்யூரோ (XT 500 Enduro) அடிப்படையிலான பெயின்ட் ஸ்கீம் கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்;

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர், இதன் சப் ஃபிரேமில், புதிய மற்றும் கிளாசிக் தோற்றம் கொண்ட பெஞ்ச்-சீட் ரெஸ்டிங் அமைப்பு கொண்டுள்ளது.

இதன் வட்ட வடிவிலான டெயில்லைட் மற்றும் புல்லட்-வடிவிலான டர்ன் சிக்னல்கள், ஃபென்டர் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஹேண்டில் பார்;

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர் மோட்டார்சைக்கிளுக்கு, யமஹா நிறுவனம் உயர்ந்த ஹேண்டில் பார் வழங்கியுள்ளது.

இதன் மூலம், ஒய்யாரமாக உட்கார்ந்து ஜாலியான ரைடிங் மேற்கொள்ளலாம்.

பிற அம்சங்கள்;

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர், ரிடர்ன்ட் சஸ்பென்ஷன் மற்றும் பிளாக் பேட்டர்ன் டயர்கள் கொண்டுள்ளது.

இதனால், நல்ல கிரிப், ஹேண்ட்லிங் கிடைக்கிறது.

இஞ்ஜின்;

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர், 942 சிசி, ஏர்-கூல்ட், வி-ட்வின் இஞ்ஜின் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர் மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், 5-ஸ்பீட் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

மேலும், இந்த 2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர் மோட்டார்சைக்கிளுக்கு, யமஹா நிறுவனம், பெல்ட்-டிரைவ் மெக்கானிஸம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன் மூலமாக தான், பின் சக்கரங்களுக்கு பவர் கடத்தப்படுகிறது.

 

தங்கம் விலை இன்று(ஜூன் 10-ம் தேதி) சவரனுக்கு ரூ.128 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,817-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.22,544-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.170 உயர்ந்து ரூ.30,140-க்கும் விற்பனையாகிறது.வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து ரூ.44.40-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.475 உயர்ந்து ரூ.41,510-க்கும் விற்பனையாகிறது.

வியாழக்கிழமை, 09 ஜூன் 2016 00:00

தங்கம் விலை ரூ.136 உயர்வு

Written by

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.136 ம், பார்வெள்ளி விலை ரூ.1060ம் அதிகரித்துள்ளன.

சென்னையில் 22 காரட் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2806 ஆகவும், 24 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 18 அதிகரித்து ரூ.3,001க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு, ரூ.1.20 அதிகரித்து ரூ.44.20 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,060 உயர்ந்து ரூ.41,265 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

புதன்கிழமை, 08 ஜூன் 2016 00:00

அதி நவீன பிட்னெஸ் ட்ராக்கர்

Written by

இதுவரை காலமும் மணிக் கட்டில் அணியக்கூடிய பிட்னெஸ் ட்ராக்கரையே அனைத்து நிறுவனங்களும் அறிமுகம் செய்து வந்தன.

இவற்றில் உடல் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை மட்டுமே ஒப்பீடு செய்யக்கூடியதாக இருந்தது.

ஆனால் முதன் முறையாக இவற்றினையெல்லாம் தாண்டி அதி நவீன பிட்னெஸ் ட்ராக்கரை சம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

Gear IconX எனும் இந்த ட்ராக்கர் ஆனது வழமைக்கு மாறாக காதில் அணியக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிகவும் பாரம் குறைந்ததாக காணப்படும் இச் சாதனம் பாதுகாப்பானதாகவும், பயன்படுத்துவதற்கு வசதியாகவும் இருக்கின்றது.

இதில் தரப்பட்டுள்ள 4GB சேமிப்பு வசதியின் ஊடாக 1000 வரையான பாடல்களை சேமித்து வைத்து கேட்டு மகிழவும் முடியும்.

இவற்றுடன், இதயத்துடிப்பு வீதம், எரிக்கப்படும் கலோரியின் அளவு, வேகம், தூரம், கால அளவு என்பவற்றினையும் அறிந்துகொள்ள முடியும்.

மேலும் குரல் வழி கட்டுப்பாட்டினைக் கொண்டிருத்தல் விசேட அம்சமாகும்.

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 95.74 புள்ளிகள் உயர்ந்து 27,105.41-ஆகவும், நிப்டி 22.45 புள்ளிகள் உயர்ந்து 8,288.90-ஆகவும் இருந்தன. வங்கி வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யாதது, அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு, பருவமழை மீதான எதிர்பார்ப்பு, வரும் வெள்ளியன்று வெளியாக உள்ள ஏப்ரல் மாதல் தொழில்துறையின் வளர்ச்சி போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று மும்பையில் இன்று நடைபெற்ற நிதிக் கொள்கை ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரெப்போ எனப்படும் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவே தொடரும்.

மேலும், சி.ஆர்.ஆர். எனப்படும் வங்கிகளின் ரொக்க கையிருப்பபு விகிதமும் 4 சதவீதமாகத் நீடிக்கும்.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பில்லை.

இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

மும்பையில் இன்று நடைபெற்ற நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரகுராம் ராஜன், 7வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்தினால் ஏற்படும் பணவீக்க சூழலை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை கருதியும் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை, 07 ஜூன் 2016 00:00

ரூபாயின் மதிப்பு ரூ.66.90 உயர்வு..

Written by

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து நான்காவது நாளாக உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (ஜூன் 7-ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.66.90-ஆக இருந்தது. பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றத்தாலும், வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க டாலரை விற்பனை செய்து வருவதாலும் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 28 காசுகள் உயர்ந்து ரூ.66.97-ஆக இருந்தது.

திங்கட்கிழமை, 06 ஜூன் 2016 00:00

இந்திய ரூபாய் அதிரடி உயர்வு

Written by

சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க நாணயத்தை அதிகம் விற்பனை செய்ததை அடுத்து இந்திய ரூபாயின் மதிப்பு அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக 67 என்ற நிலையிலேயே இருந்து வந்த ரூபாய் மதிப்பு மீண்டும் 66 என்ற நிலையை எட்டி உள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 37 காசுகள் உயர்ந்து ரூ.66.88 ஆக உள்ளது. முன்னதாக கடந்த வார வர்த்தக நேர இறுதியில் ரூபாயின் மதிப்பு ரூ.67.25 ஆக இருந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் காணப்படும் தொடர் ஏற்றமான நிலையும் சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலையில் இன்று(ஜூன் 4ம் தேதி) உயர்வு காணப்படுகிறது, சவரனுக்கு ரூ.440 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,781-க்கும் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.22,248-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.580 உயர்ந்து ரூ.29,740-க்கும் விற்பனையாகிறது.வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து ரூ.42.50-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.39,755-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 00:00

தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைவு

Written by

தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்துள்ளது. தங்கம், வெள்ளி சந்தையில் இன்றும் விலை குறைந்து காணப்படுகிறது.  இன்றைய காலை நேர நிலரப்படி சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கம் ரூ.2722 க்கும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.29110 க்கும் விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.21,776 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.41.60 ஆகவும், பார்வெள்ளி விலை ரூ.38,865 ஆகவும் உள்ளன.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…