JoomlaLock.com All4Share.net

Background Video

சிங்கப்பூர்: உள்நாட்டில் அதிகரித்து வரும் தேவை காரணமாக, அடுத்த நான்கு வருடங்களில், இந்தியாவில் 56 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு எதிர்பார்ப்பதாக மின்னணு மற்றும் ஐடி அமைச்சகத்தின் அதிகாரி மார்வாகா கூறினார். மேலும் அவர், உள்நாட்டை தேவையை சமாளிக்க, 2020ம் ஆண்டிற்குள், மின்னணு உற்பத்தி 400 அமெரிக்க டாலர் அளவுக்கு இருக்கும் எனவும், 80 பில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும் எனவும் கூறினார்.

பெங்களூரு: தமிழ்நாட்டில் பன்னாட்டு வர்த்தகத்திற்கு நுழைவு வாயிலாக இருக்கும் சென்னை துறைமுகத்தை விரிவாக்கத்திற்கு 1,500 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது சென்னை போர்ட் டிரஸ்ட்.

மத்திய கப்பல் போக்குவரத்து கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சென்னை போர்ட் டிரஸ்ட், சென்னை துறைமுகத்தில் கூடுதலாகக் கப்பல் நிறுத்தம் உருவாக்கவும், தென் இந்தியாவில் இருக்கும் மற்ற துறைமுகத்துடன் போட்டி போட்டு அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறவும், மேம்பட்ட சேவைகளை அளிக்கவும் 1,500 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

அடுத்த 5 வருடத்தில் சென்னை துறைமுகத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக 1,500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யும் திட்டம் பிபிபி முறையில் செயல்படுத்த உள்ளதாகச் சென்னை போர்ட் டிரஸ்ட் அமைப்பின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

பிபிபி முறை- Public-Private-Partnership mode.

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ள விரிவாக்கப் பணிகளில் கடலோர முனையம், சரக்குக் கப்பல்களுக்கான சேவை மேம்பாடு, நிலக்கரி இறக்குமதிக்கான வசதிகள் ஆகியவற்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் EXIM கிடங்கு ஒன்றை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல்களுக்காகக் காத்துக்கிடக்கிறது.

சென்னை துறைமுகம் தற்போது 5 துறைமுகத்திடம் இருந்து கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது அதில் கிருஷ்னாபட்டனம் மற்றும் காட்டுப்பள்ளி முக்கியமானவை எனச் சென்னை போர்ட் டிரஸ்ட் அமைப்பின் தலைவர் சி.ஜார்ஜ் தெரிவித்தார்.

2015-16ஆம் நிதியாண்டில் சென்னை துறைமுகம் தனது வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவை அளித்த காரணத்தால் 8% வருவாய் உயர்வை அடைந்துள்ளது. இதன் மூலம் 698.75 கோடி ரூபாயாக இருந்த வருவாய் அளவு 2015-16ஆம் நிதியாண்டில் 758.71 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

சென்னை துறைமுகத்தை மையமாக வைத்தே பன்னாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சென்னையில் தங்களது உற்பத்தி ஆலைகளை அமைத்துள்ளது. மேலும் சென்னை துறைமுகம் தமிழ்நாட்டின் உற்பத்தித் துறைக்கு அடித்தளமாக விளங்குகிறது.

இத்துறைமுகம் தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்லாமல் ஆந்திர மாநிலத்திற்குச் சிறந்த வர்த்தக வாய்ப்பாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான வர்த்தகச் செய்திகளைத் தினமும் உங்கள் மின்னஞ்சலில் பெற இதைக் கிளிக் செய்யவும்.

மும்பை : நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்திருப்பதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் மட்டுமின்றி இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூன் 1ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.67.21-ஆக இருந்த நிலையில், காலை 10.30 மணியளவில் ரூ.67.12-ஆக அதிகரித்தது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ.67.26-ஆக இருந்தது.

மும்பை : 2015-2016ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஜூன் 1ம் தேதி) உயர்வுடன் காணப்படுகின்றன. காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்ந்து 26,838ஆகவும், நிப்டி 48 புள்ளிகள் உயர்ந்து 8,208-ஆகவும் வர்த்தகமாகின.

 

சென்னை: இந்த இயந்திர வாழ்க்கை முறையில் புகை மற்றும் மதுப் பழக்கங்களைக் குற்றமாகப் பார்க்கப்படுவது அதிகளவில் குறைந்துள்ளது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இதில் என்ன ஆச்சரியம் என்றால் கள்ளுக்கடை போராட்டத்தில் மிகப்பெரிய பங்காற்றிய பெண்களே இன்று மதுப் பழக்கத்திற்கும், புகைப் பழக்கத்திற்கும் அடிமையாகி வருகின்றனர்.

பெண்கள் இன்று ஆண்களுக்கு இணையாகப் புகை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர் என்பது அதிர்ச்சி அளிக்கும் செய்தி.

இந்நிலையில் உலகெங்கிலும் நடமாடும் ரயில் எஞ்சின்களின் (புகைப்பழக்கம் உடையோர்) தேவைகளான சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடுகளைப் பற்றித் தான் நாம் பார்க்கப்போகிறோம்.

புகையிலைக்குப் பன்னெடுங்கால வரலாறு உண்டு. மாயான் இந்தியர்கள் இதனை உபயோகித்ததற்கான ஆதாரங்கள் ஓவியங்களாக மெக்சிகோவில் இன்றளவும் காணப்படுகின்றன. சரி உலகில் அதிகளவில் புகையிலை பொருட்களைத் தயாரிக்கும் நாட்களைப் பார்ப்போம் வாங்க.

1,15,334 டன்கள்

உலகிலேயே அதிகம் புகையிலையை உற்பத்தி செய்வது மட்டுமல்ல உபயோகிக்கவும் செய்யும் நாடு அர்ஜென்டினா. புகையிலை பொருட்களின் உற்பத்தியில் மிகப்பெரிய வர்த்தக்தை அர்ஜென்டினா பெற்றாலும் துரதிருஷ்டவசமாகப் புகையிலை உபயோகம் மூலம் இந்நாட்டின் உயிரிழப்புகளின் இரண்டாவது பெரிய காரணமாக உள்ளது.

இதை எதிர்கொள்ளச் சிகரெட்டுகளின் விலைகளை உயர்த்தியும் அதன் உபயோகத்தினால் வரும் ஆரோக்கியப் பிரச்சனைகளையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமாகவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் தென்படவில்லை.

1,32,849 டன்கள்

மலாவியில் புகையிலை உற்பத்தி ஏறக்குறைய சுமார் ஒரு நூற்றாண்டாக நடந்துவருகிறது. 1970களில் மிக அதிக அளவு வளர்ச்சி காணப்பட்டது. அன்று முதல் மலாவி அதன் மிகப்பெரும் புகையிலைத் தொழிற்துறைக்குப் பெயர் பெற்றுவிட்டது.

ஒரு பெரும் வருவாயை ஈட்டித் தருவதால் மலாவியின் தொழிற்துறைக்குப் புகையிலை பொருட்கள் உற்பத்தி முதுகெலும்பாக உள்ளது. மேற்கத்திய நாடுகளில் புகையிலைத் தொழில்கள் குறைந்த போது உலகின் மிகப் பிரபலமான கேமல் மற்றும் மால்போரோ போன்ற சிகரெட் பிராண்டுகள் ஆகியவை மலாவியில் விளையும் மற்றும் உற்பத்தியாகும் புகையிலையின் மீது கவனத்தைத் திருப்பின. மலாவி புகையிலை உயர் நிகோடின் அளவிற்குப் பெயர் பெற்றது.

1,50,000 டன்கள்

ஜிம்பாப்வே புகையிலை விளைச்சலுக்கு உகந்த தட்பவெப்ப நிலையைக் கொண்டுள்ள நாடு. அதனால் தான் இங்கு விளையும் புகையிலை தரம் உயர்ந்ததாகக் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை கருதப்பட்டு வந்தது.

ஜிம்பாப்வே தகவல்கள் படி புதிய விவசாயிகளின் அனுபவ குறைவால் எவ்வாறு இதனைச் சாகுபடி செய்வது என்று அறியாததால் அதன் தரம் குறைந்து விட்டதாகத் தெரிகிறது. அவர்கள் இதனைப் புரிந்து தரத்தை உயர்த்த முயற்சி மேற்கொண்டால் மிகப்பெரிய ஜிம்பாப்வேயின் புகையிலை வர்த்தகத்திற்கு உதவியாகவும் இருக்கும். இது நாட்டிற்குப் பெரும் வருவாயினையும் வேலை வாய்ப்பினையும் வழங்குகிறது.

2,60,200 டன்கள்

சில வருடங்களுக்கு முன்பு வரை இந்தோனேசியா புகையிலைத் தொழில்துறை அதன் சந்தைப்படுத்துதல், உற்பத்தி, விற்பனை மற்றும் உபயோகம் அவ்வளவாகக் கட்டுப்படுத்தப்படவில்லை. அதனால் குடாங் கரம், ஜாரும் மற்றும் சாம்போமா ஆகிய மூன்று நிறுவனங்கள் இந்தோனேசியா புகையிலைத் துறையையே ஆட்டுவித்தன.

புதிய புகையிலை கொள்கைகளும் விதிமுறைகளும் தற்போது வந்துவிட்டதால் இந்த நிறுவனங்கள் பெருமளவு மாற்றங்களைச் சந்திக்க வேண்டிவந்தது. புகையிலை உற்பத்தியைப் பாதித்த மற்றொரு காரணம் விவசாயிகள் பனை எண்ணை மரங்கள் சாகுபடிக்கு மாறியது. இது உற்பத்தி குறையக் காரணமானது. ஆனால் தற்போதைய தகவல்கள் படி புகையிலை சாகுபடி மறுபடியும் இவ்வருடம் புத்துயிர் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

3,45,837 டன்கள்

அதிகம் புகையிலையை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தைப் பெருமையுடன் பிடித்துள்ள நாடு அமெரிக்கா. தற்போதுள்ள புகையிலை, பயிர் அளவை விட 30 வருடங்களுக்கு முன் அதிகம் இருந்திருந்தாலும், தற்போதும் புகையிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் நான்காவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. வட கரோலினா, கென்சுகி மற்றும் வர்ஜீனியா ஆகிய மாகாணங்கள் புகையிலை உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன.

8,30,000 டன்கள்

இந்தியப் புகையிலை அதன் உயர்தர மணத்திற்குப் புகழ் பெற்றது. இந்த அளவிற்கு அதிக உற்பத்தி இருப்பதால் உலகெங்கும் சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் ஆச்சரியமில்லை.

ஆனால், கடந்த சில வருடங்களாகப் புகையிலை உற்பத்தி சரிவைச் சந்தித்துள்ளது. முக்கியமாக ஆரோக்கியக் காரணங்களுக்காக அரசு இதன் உற்பத்தியைக் குறைக்க எடுத்துள்ள முடிவு இதற்குக் காரணமாக உள்ளது. பெரு நிறுவனங்களின் மூடல், வறட்சி மற்றும் புகையிலைக்குக் கிடைக்கும் குறைந்த விலை ஆகியவை இந்தியாவில் பெருமளவு புகையிலை விவசாயிகளின் தற்கொலைகளுக்குக் காரணமாக உள்ளது.

8,50,673 டன்கள்

கடந்த சில வருடங்களாகப் பிரேசில் புகையிலை உற்பத்தியில் நல்ல வளர்ச்சியடைந்திருந்தாலும் கூடிய விரைவில் இந்த நிலை மாறலாம். இங்கும் இந்தியாவைப் போல் புதிய ஆரோக்கியக் கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் புகையிலை உற்பத்தியின் போக்கை மாற்றலாம். புகையிலை தொழில் பிரேசிலின் பொருளாதாரத்திற்கு முக்கிய ஒன்று என்றாலும் இந்த நிலையைத் தவிர்க்க இயலாது.

31,48,574 டன்கள் (அடேங்கப்பா...)

இறுதியாக உலகில் மிக அதிகமான அளவு புகையிலையை உற்பத்தி செய்வது சீனா. இந்தப் பட்டியலிலுள்ள அனைத்து நாடுகளின் உற்பத்தியைக் கூட்டினாலும் இதனை ஈடு செய்ய இயலாத அளவிற்கு இதன் உற்பத்தி மிக அதிக அளவாகும். எனவே இயற்கையாகவே இந்தப் பட்டியலிலுள்ள எந்த ஒரு நாடும் சீனாவின் இடத்தைப் பிடிக்க இயலாது என்பது உணர்ந்துகொள்ளக் கூடியதே.

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள உற்பத்தி அளவுகள் அனைத்தும் 2013ஆம் ஆண்டை மையமாக வைத்து நாடுகளை வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

வருவாயைப் பெருக்க அரசு மக்களை அப்பட்டமாகச் சிகரெட்டுகளை வாங்கவும் புகைக்கவும் கட்டாயப்படுத்துகிறது இந்த நாடு. 

ஊழல் வழக்கில் சிக்கிய சஹாரா குழுமத்திற்குச் சொந்தமாக இந்தியாவில் பல பகுதிகளில் உள்ள நிலத்தை விற்பனை செய்வதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு அளிக்க வேண்டிய 20,500 கோடி ரூபாயை எளிதாக வசூல் செய்யச் செபி மற்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன் படி சஹாரா குழுமத்திற்குச் சொந்தமான 4,700 ஏக்கர் நிலம் விற்பனை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

4,700 ஏக்கர் நிலம் விற்பனை செய்தால் எவ்வளவும் பணம் கிடைக்கும்..?

சஹாரா குழுமத்தின் ஊழல் வழக்கு விஸ்பரூபம் எடுத்த நாள் முதல் மத்திய அரசு மற்றும் செபி அமைப்பு இந்நிறுவனத்தின் அனைத்து விதமான சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளை முழுமையாக முடக்கியது.

எச்டிஎப்சி ரியாலிட்டி மற்றும் எஸ்பிஐ கேபிடல் மார்கெட் நிறுவனங்கள் முடக்கியுள்ள இந்த 4,700 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்வதன் மூலம் மத்திய அரசு சுமார் 6,500 கோடி ரூபாய் நிதியைத் திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிறுவனத்திற்குச் சொந்தமாக இந்தியாவில் சுமார் 33,633 ஏக்கர் நிலம் உள்ளது எனச் சஹாரா குழுமம் தெரிவித்துள்ளது.

சஹாரா குழுமத்தின் தலைவர் சப்ரதா ராய் மற்றும் இதன் நிர்வாகத் தலைவர் அசோக் ராய் சவுத்ரி ஆகியோரை உச்ச நீதிமன்றம் பரோல் மூலம் நான்கு வாரம் திகார் சிறையில் இருந்து விடுவித்துள்ளது. இவர்களின் விடுதலைக்குப் பின்னரே இந்நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.

இந்தியாவில் சஹாரா குழுமத்திற்குச் சொந்தமாக இருக்கும் 60 சதவீத சொத்துக்களை ஏலம் விடச் செபி அமைப்பு எச்டிஎப்சி ரியாலிட்டி மற்றும் எஸ்பிஐ கேபிடல் மார்கெட் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

சஹாரா நிறுவனத்திற்குச் சொந்தமான நிலங்கள் உஜ்ஜைன், இந்தூர், அஜ்மீர், அலிகார், Bahraich, பரேலி, முசாபர்நகர், லக்னோ, நொய்டா, குவஹாத்தி, தமிழ்நாட்டில் சேலம், போர்பந்தர் மற்றும் பரோடா ஆகிய பகுதிகளிலும் உள்ளது.

மும்பை Versova என்னும் இடத்தில் இருக்கும் 106 ஏக்கர் நிலம் தான் இந்நிறுவனத்தின் மிகப்பெரிய சொத்து, 3 வருடத்திற்கு முன் இதன் மதிப்பு 19,300 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மும்பை: பலசரக்கு விற்பனையில் இறங்கியுள்ள பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கப் பியூச்சர் குரூப் நிறுவனத்தின் தலைவர் கிஷோர் பியானி, இனி மாதத்தில் முதல் 8 நாட்களுக்கு அனைத்து பிக் பஜார் கிளைகளிலும் அதிரடி சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

பொதுவாக மளிகைக் கடைகளில் கிடைக்கும் பொருட்களை விடப் பிக் பஜார் மற்றும் டீமார்ட் போன்ற கடைகளில் தரத்தில் உயர்வாகவும், விலை மலிவானதாகவும் இருக்கும் என்ற காரணத்திற்காகவே இக்கடைகளில் மக்கள் அதிகளவில் குவிகின்றனர்.

இந்நிலையில் தற்போது கூடுதல் சலுகை என்றால் மக்கள் கூட்டம் இனி பிக் பஜார் கடைகளில் அலைமோதும்.

ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள், எலக்ட்ரானிக் முதல் காண்டம் வரை அனைத்தையும் விற்பனை செய்தது போதாது என்று, தற்போது பலசரக்கு அதாவது மளிகை பொருட்களை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது.

மளிகை பொருட்களைத் தனது கிடங்குகளில் வைக்க முடியாத காரணத்தால், பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் மளிகைக் கடைகளை நம்பி தனது வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது.

படம்:திஇந்து

ஏற்கனவே இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களையும் ஆட்கொண்டு உள்ளது. இந்நிலையில் பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் ஆன்லைன் மளிகை பொருட்களின் விற்பனை பிக் பஜார் மற்றும் டீமார்ட் போன்ற நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.

இந்தியாவில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களின் ஆதிக்கத்தை உணர்ந்த பியூச்சர் குரூப் நிறுவனத்தின் தலைவர் கிஷோர் பியானி, வாடிக்கையாளர்களை இழக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் புதிய 8 நாள் சலுகை மற்றும் தள்ளுபடி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.

அது என்னபா 8 நாள் திட்டம்..?

ஜூன் மாதத்தின் முதல் வாடிக்கையாளர் 2500 ரூபாய்க்குப் பொருட்களை வாங்கினால் அவர்களுக்கு 2,000 ரூபாய் மதிப்லான கேஷ் போனஸ் மற்றும் வவுச்சர்களை அளிக்கிறது பிக் பஜார். இத்திட்டம் மாதத்தின் முதல் 8 நாட்களில் மட்டுமே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வவுச்சர்களை அதேமாதத்தில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் மூலம், ஒரு மாதத்தில் 2 முறை வாடிக்கையாளர்களை எளிமையாக ஈர்க்க முடியும் எனப் பிக் பஜார் திட்டமிட்டுள்ளது.

இப்புதிய சலுகை திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்லை வர்த்தகத்திற்கு இடம் பெயர்வதை அதிகளவில் தடுக்க முடியும் என்பதை நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஊழியர்களுடன் ஆலோசிக்கும் போது கூறினார்.

இதன் மூலம் விடுமுறை அல்லது சம்பளம் வாங்கிய முதல் வாரத்தில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வழக்கம் மாற்றி மாத முழுவதும் இத்திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும் எனக் கிஷோர் பியானி தெரிவித்துள்ளார்.

மளிகை பொருட்களின் விற்பனையில் ஏற்கனவே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் ஆன்லைன் விற்பனை மூலம் அமேசான் மற்றும் பிளிகார்ட் நிறுவனங்கள் இத்துறைக்குள் நுழைகிறது.

இதனைச் சமாளிக்கவே பல வருடங்களாகத் தனது வர்த்தகத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை மாற்றாமல் வைத்திருந்த பிக் பஜார் தற்போது புதிய கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளது.

22,000 கோடி ரூபாயாக இருக்கும் இந்நிறுவனத்தின் வர்த்தகம் 2021ஆம் ஆண்டு 75,000 கோடி ரூபாய் முதல் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்தை எட்ட வேண்டும் என்பதைக் கருத்தில் வைத்துக்கொண்டே இத்திட்டங்களை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிக் பஜார் வர்த்தகத்தை மேம்படுத்தும் விதமாக இந்நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக 6 மொபைல் ஆப்-களை வைத்துள்ளது. மேலும் இத்தொடர் வர்த்தகக் கிளைகளின் வர்த்தகத்தைக் கவனிக்கச் சுமார் 40,000க்கும் அதிகமான ஊழியர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.

இந்தியாவில் உணவு மற்றும் பலசரக்கு பொருட்களின் வர்த்தகம் நாட்டின் மொத்த சில்லறை விற்பனையில் 50 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இதில் வெறும் 1 சதவீத்தை மட்டும் தான் ஆன்லைன் வர்த்தகம் கொண்டுள்ளது.

மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் கணிப்பின் படி 2020ஆம் ஆண்டுக்குள் இதன் அளவு 4 சதவீதத்தை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த 4 சதவீதத்தின் மொத்த மதிப்பு 19 பில்லியன் டாலர்.

தற்போதைய நிலையில், அமேசான் நிறுவனம் பலசரக்கு விற்பனைக்காகக் கிரானா நவ் என்ற தளத்தை அறிமுகம் செய்துள்ளது, அதேபோல் பிளிப்கார்ட் நிறுவனம் தனது ஈகார்ட் நிறுவனத்துடன் இணைத்து இச்சேவையைச் செய்து வருகிறது.

அதுமட்டும் அல்லாமல் பேடிஎம் நிறுவனம் ZIP சேவை அறிமுகம் செய்துள்ளது. ஸ்னாப்டீல் காட்ரிஜ் நேச்சர்ஸ் பேஸ்கட் நிறுவனத்துடன் இணைந்து பலசரக்கு விற்பனையை இணையம் மூலம் செய்து வருகிறது.

திங்கட்கிழமை, 30 மே 2016 00:00

தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 சரிவு

Written by

சென்னை : தங்கம் விலை இன்று(மே 30ம் தேதி) சவரனுக்கு ரூ.112 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,712-க்கும், சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.21,696-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ரூ.29,000-க்கும் விற்பனையாகிறது.வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 60 காசுகள் சரிந்து ரூ.41.50-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.570 குறைந்து ரூ.38,795-க்கும் விற்பனையாகிறது.

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 117 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த நான்கு நாள் வர்த்தகத்தில் குறியீடு 1,423.24 புள்ளிகளாக அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 116.82 புள்ளிகள் உயர்ந்து 26,770.42 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 38.20 புள்ளிகள் உயர்ந்து 8,194.85 புள்ளிகளாக உள்ளது. கோல் இந்தியா, எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, டாடா ஸ்டீல், அதானி துறைமுகங்கள், டாக்டர் ரெட்டிஸ், ஐடிசி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப், டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் ஓஎன்ஜிசி போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 3.80% வரை அதிகரித்திருந்தது.

ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.19%, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.86% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.89% உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.25% அதிகரித்து முடிந்தது.

மும்பை : வாரத்தின் துவக்கநாளில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(மே 30ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் சரிந்து ரூ.67.28-ஆக இருந்தது. உலகளவில் டாலரின் மதிப்பு உயர்ந்து பிறநாட்டு கரன்சிகளின் மதிப்பு சரிந்ததாலும், வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்ததாலும் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ.67.03-ஆக இருந்தது.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…