JoomlaLock.com All4Share.net

Background Video

செவ்வாய்க்கிழமை, 06 பிப்ரவரி 2018 00:00

சரிவிலிருந்து சற்றே மீண்டது அமெரிக்க பங்குசந்தை

Written by

அமெரிக்காவில் திங்கள் கிழமையன்று பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் செவ்வாய் கிழமையும் 2% வீழ்ச்சியில் சந்தை துவங்கியது. எனினும் அதில் இருந்து மீண்டு நேர்மறை புள்ளிகளோடு சந்தை இயங்கிவருகிறது.

திங்களன்று அமெரிக்காவில் சந்தை வீழ்ச்சியை சந்தித்தது ஆசியா மற்றும் ஐரோப்பா பங்கு வர்த்தகத்திலும் எதிரொலித்தது.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற செய்தி பரவியதன் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வீழ்ச்சியைஅமெரிக்க பங்குச்சந்தைகள் சந்தித்துள்ளன.

அமெரிக்க தொழிற்துறை குறியீடான டவ் ஜோன்ஸின் மதிப்பு திங்கள் கிழமையன்று 1,175 புள்ளிகள் அல்லது 4.6 சதவீத வீழ்ச்சியை கண்டு 24,345.75 புள்ளிகளில் முடிந்துள்ளது.

"மிகவும் வலுவான நிலையிலுள்ள நீண்டகால பொருளாதார அடிப்படைகளில்" கவனம் செலுத்துவதாக முதலீட்டாளர்களுக்கு வெள்ளைமாளிகை உறுதியளித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க தொழிலாளர் துறை, அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் தொழிலாளர்களின் ஊதியத்தில் எதிர்பார்த்ததை விட வலுவான முன்னேற்றம் காணப்பட்டது.

இதன் காரணமாக, குறைந்த வட்டி விகிதங்களின் காலம் முடிவடையப்போவதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தங்களது கணிப்புகளை வெளியிட தொடங்கினர். எனவே, அதிர்ச்சியுற்ற முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை விற்று அதை பத்திரங்கள் உள்ளிட்ட அதிக வட்டியளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்யத்தொடங்கினர்.

அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சி லண்டன், ஜப்பான் மற்றும் சிங்கப்பூரை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸின் மதிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 561 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து அதாவது 1.61 சதவீதத்தை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி இன்று மட்டும் 168.20 புள்ளிகள் அதாவது -1.58 % சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

சென்ற வாரம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையானது இந்திய பங்குச்சந்தைகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் தற்போது அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியும் இங்கு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

 

வெள்ளிக்கிழமை, 02 பிப்ரவரி 2018 00:00

பட்ஜெட் எதிரொலி : சரிந்தது பங்குசந்தை

Written by

மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் மும்பை மற்றும் தேசிய பங்குசந்தையில் குறியீட்டெண் கடும் சரிவை சந்தித்தது. 

இந்நிலையில், தற்போது மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 477.81 புள்ளிகள் குறைந்து, தற்போது 35,428.85 புள்ளிகளில் உள்ளது.

கடந்த வாரம், சென்செக்ஸ் 178 புள்ளியில் இருந்து 0.52 சதவீதம் உயர்ந்து 34,331.85 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை நிப்டி 10,600 புள்ளிகளை வாரத்தின் முதல் நாளே நல்ல எட்டி சாதனை படைத்தது. 

அதை தொடர்ந்து, தற்போது சென்செக்ஸ் 77.81 புள்ளிகள் குறைந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

கடந்த மாதம், 2018 ஆம் ஆண்டின் முதல் வாரத்தில், முதலீட்டாளர்கள் புளூலிஷ் பூகோள குறிப்புகளுடன் புதிய வாங்குதல்களைக் குவித்து வருவதால், வரவுசெலவுத் திட்டங்களின் முதல் வாரத்திலேயே முடிவுக்கு கொண்டுவந்தது.

பி.எஸ்.இ சென்செக்ஸ் 184 புள்ளிகளில் இருந்து 34,153.85 புள்ளிகளாக உயர்ந்தபோது, ​​நிஃப்டி 10,558.85 புள்ளிகளோடு முடிந்தது. பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்தும் நோக்கில் 80,000 கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்களை வழங்குவதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளது.

ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு 63.26 ரூபாயாக உயர்ந்துள்ளது குறிபிடத்தக்கது.

 
 
சனிக்கிழமை, 27 ஜனவரி 2018 00:00

தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை

Written by

இந்தியப் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து எட்டாவது வாரமாக பரவச நிலை காணப்பட்டது. ஒவ்வொரு வாரமும் புதிய உச்சங்களுடன் முடிவடைந்து பங்குச் சந்தை முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

அந்த வகையில், கடந்த வார வர்த்தகமும் புதிய சாதனை ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. ஜனவரி மாதத்துக்கான பங்கு முன்பேர வணிக கணக்கு முடிப்பு தினத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் மட்டும் சுணக்கத்துடன் காணப்பட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் பங்குச் சந்தையில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், சர்வதேச நிதியம் அதன் உலக பொருளாதார ஆய்வறிக்கையில், "மிக வேகமாக பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் நாடு என்ற அந்தஸ்தை இந்தியா தக்க வைத்துக் கொள்ளும், அதன் பொருளாதாரம் வரும் 2018-19 நிதி ஆண்டில் 7.4 சதவீதமாக வளர்ச்சி காணும்' என்று தெரிவித்திருந்தது. இது முதலீட்டாளர்களுக்கு மிகவும் உற்சாகம் அளிக்கக்கூடிய செய்தியாக அமைந்தது. 

நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது, அந்நிய முதலீட்டு வரத்து அதிகரிப்பு, பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு ஆகியவை பங்குச் சந்தையின் ஏற்றத்துக்கு மேலும் வலு சேர்க்கும் அம்சங்களாக அமைந்தன.
தகவல் தொழில்நுட்பத் துறை குறியீட்டெண் 3.63 சதவீதமும், உலோகம் 2.74 சதவீதமும், எண்ணெய்-எரிவாயு 2.25 சதவீதமும், பொறியியல் சாதனங்கள் 2.16 சதவீதமும் அதிகரித்தன. இவை தவிர, வங்கி 2 சதவீதமும், தொழில்நுட்பம் 1.65 சதவீதமும், பொதுத் துறை 1.23 சதவீதமும், மருந்து 1.08 சதவீதமும், ரியல் எஸ்டேட் 1.03 சதவீதமும் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் தொழில்துறை குறியீட்டெண் 0.68 சதவீதமும் உயர்ந்தன.

இருப்பினும், முதலீட்டாளர்களின் வரவேற்பின்றி, நுகர்வோர் சாதனங்கள் தொழில்துறை குறியீட்டெண் 2.60 சதவீதமும், ஐபிஓ 1.51 சதவீதமும், மோட்டார் வாகனம் 1.32 சதவீதமும், மின்சாரம் 0.65 சதவீதமும் சரிந்தன. சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள 31 நிறுவனங்களில், 21 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 10 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.
ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் 51.11 சதவீத பங்குகளை கையகப்படுத்துவதற்கு ஒப்புதல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து ஓஎன்ஜிசி பங்கின் விலை 7.57 சதவீதம் ஏற்றம் கண்டது.

இதையடுத்து, டிசிஎஸ் பங்கின் விலை 5.52 சதவீதமும், கோல் இந்தியா 5.34 சதவீதமும், யெஸ் வங்கி 4.06 சதவீதமும், ஆக்ஸிஸ் வங்கி 3.98 சதவீதமும், ரிலையன்ஸ் 3.79 சதவீதமும், எல்&டி பங்கின் விலை 2.99 சதவீதமும் அதிகரித்தன. கோட்டக் வங்கி (2.97%), இன்டஸ்இண்ட் வங்கி (2.79%), ஐடிசி (2.56%), இன்ஃபோசிஸ் (2.41%) மற்றும் பஜாஜ் ஆட்டோ (2.47%) நிறுவனப் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின.

அதேசமயம், போதிய வரவேற்பில்லாத காரணத்தால் பார்தி ஏர்டெல் பங்கின் விலை 9.07 சதவீதமும், டாடா டிவிஆர் 6.56 சதவீதமும், விப்ரோ 5.02 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 4.48 சதவீதமும், ஏசியன் பெயிண்ட்ஸ் 3.71 சதவீதமும், மஹிந்திரா & மஹிந்திரா 1.11 சதவீதமும், பவர் கிரிட் 1.05 சதவீதமும் சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 538 புள்ளிகள் அதிகரித்து 36,050 புள்ளிகள் என்ற புதிய உயரத்தைத் தொட்டது. இதற்கு முந்தைய ஏழு வாரங்களில் மட்டும் சென்செக்ஸ் 3,039 புள்ளிகள் (9.26%) அதிகரித்தது குறிப்பிடத்தக்தது. 

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.22,625.37 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 174 புள்ளிகள் உயர்ந்து முதல்முறையாக 11,069 புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரத்தில் ரூ.1,66,288.96 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.

வரும் வியாழக்கிழமை (பிப்.1) மத்திய பட்ஜெட் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதில் சாதகமான அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக அடுத்த வாரத்தில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடனேயே காணப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

புதன்கிழமை, 24 ஜனவரி 2018 00:00

பங்கு சந்தைகள் தொடர்ந்து ஏற்றம்

Written by

இந்­திய பங்­குச் சந்­தை­கள், தொடர்ந்து, ஆறு வர்த்­தக தினங்­க­ளாக, புதிய உச்­சத்தை எட்டி வரு­கின்றன.நேற்று, மும்பை பங்­குச் சந்­தை­யின், ‘சென்­செக்ஸ்’ குறி­யீடு, வர்த்­த­கத்­தின் இடையே, 36,268.19 புள்ளிகள் என்ற புதிய உச்­சத்தை எட்­டி­யது. வர்த்­த­கத்­தின் இறு­தி­யில்,முன்­தி­னத்தை விட, 21.66 புள்­ளி­கள் அதி­க­ரித்து, 36,161.64 ஆக, புதிய நிலைக்கு உயர்ந்­தது.

தேசிய பங்­குச் சந்­தை­யின், ‘நிப்டி’ குறி­யீ­டும், வர்த்­த­கத்­தின் இடையே, 11,110.10 புள்­ளி­கள் என்ற புதிய உச்­சத்தை எட்­டி­யது. வர்த்­த­கத்­தின் இறு­தி­யில், முன்­தி­னத்தை விட, 2.30 புள்­ளி­கள் உயர்ந்து, 11,083.70 ஆக, புதிய நிலையை எட்­டி­யது.அன்­னிய நிதி நிறு­வ­னங்­கள், தொடர்ந்து சில நாட்­க­ளாக, பங்­கு­களை வாங்­கிக் குவித்து வரு­வ­தால், நாள்­தோ­றும் பங்­குச் சந்­தை­கள் புதிய உச்­சத்தை சந்­திக்­கின்றன.

வங்கி மறு பங்கு மூல­த­னம் குறித்து, மத்­திய அரசு புதிய அறி­விக்கை வெளி­யி­ட­லாம் என்ற எதிர்­பார்ப்பு கார­ண­மாக, நேற்று, வங்கி பங்­கு­கள் விலை­யேற்­றம் கண்­டன.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399 திட்டத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 70 நாட்கள் வேலிடிட்டியை 84 நாட்களாக மாற்றி கூடுதல் சலுகையை அறிவித்துள்ளது. 

இந்திய டெலிகாம் சந்தையில் நிலவி வரும் விலை போட்டி ஒவ்வொரு நாளும் சூடுபிடித்து வருகிறது. புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும் ஒவ்வொரு நிறுவனமும் புதிய திட்டங்களையும், பழைய திட்டங்களில் கூடுதல் சலுகைகளை அறிவித்து வருகின்றன.

ஜியோவின் ரூ.399 திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. சமீபத்தில் ஜியோவின் சலுகைகளும் மாற்றியமைக்கப்பட்டு தினசரி டேட்டா அளவு கூடுதலாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

அதன்படி ஏர்டெல் நிறுவனத்தில் ரூ. 399 திட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்ட வழங்கப்பட்டு வருகின்றது. இதன் வேலிடிட்டி 70 நாட்கள் வழங்கப்பட்டு வந்தது. 

ஆனால் தற்போது ஏர்டெல் நிறுவனம் ரூ. 399 க்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதாவது புதிய மாற்றத்தின் மூலம் ஏர்டெல் ரூ.399 திட்டத்தில் 84 ஜிபி டேட்டா, தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஏர்டெல் வழங்கும் 1 ஜிபி டேட்டா 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க்களில் பயன்படுத்த முடியும். 

இந்த திட்டம் ஜியோவின் திட்டத்திற்கு போட்டியாக களமிறக்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம். ஏர்டெல் ரூ.399 திட்டம் மட்டுமின்றி ஏர்டெல் ரூ.149 திட்டமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் ரூ.149 திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

எனினும் இந்த திட்டம் முதற்கட்டமாக ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிகிறது.

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017 00:00

பிளாக்பெர்ரி போன்களில் வாட்ஸ் ஆப் சேவை நிறுத்தம்

Written by

பிளாக்பெர்ரி ஓஎஸ், பிளாக்பெர்ரி 10, விண்டோஸ் 8.0 உள்ளிட்ட மொபைல் போன்களில் டிச.,31க்கு பிறகு வாட்ஸ் ஆப் செயல்படாது என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இந்த வகை போன்களில் கடந்த 2016 டிச.,31 முதல் வாட்ஸ் ஆப் செயல்படாது என கூறியிருந்தது. ஆனால், 2017 ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

தொடர்ந்து இது டிச.,31 2017 வரை நீட்டிக்கப்பட்டது. தங்களது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் விருப்பமானவர்களுடன் தொடர்பு கொள்ள சிறப்பான வசதியை வழங்குவதற்கு இந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாகவும், இதனால் பாதிக்கப்படுபவர்கள் நவீன வகை மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது.

வாட்ஸ் ஆப் சேவையை பயன்படுத்த முடியாத போன் வகைகள்

2017 டிச.,31க்கு பிறகு பிளாக்பெர்ரி ஓஎஸ், பிளாக்பெர்ரி 10
2017 டிச.,31க்கு பிறகு வின்டோஸ் போன் 8.0 மற்றும் அதற்கு முந்தைய மாடல்கள்
2020 பிப்.,1 க்கு பிறகு ஆன்ட்ராய்ட் 2.3.7 மற்றும் அதற்கு முந்தைய மாடல்கள் 

பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்கள் சச்சின் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்துடன் பெங்களூர் சேர்ந்த நவீன்குமாருக்கு சொந்தமான சி ஸ்டோர் நிறுவனம் ஓர் ஆண்டுக்கு லேப்டாப், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றை விநியோகம் செய்வதாக ஒப்பந்தம் செய்திருந்தது.

இதன் படி அந்நிறுவனம் கிட்டத்தட்ட 12,500 லேப்டாப்க்களை பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு விநியோகம் செய்துள்ளது. ஆனால், பிளிப்கார்ட் நிறுவனம் 1482 யூனிட்டுகளை மட்டும் சி ஸ்டோர் நிறுவனத்திற்கு திருப்பி கொடுத்துள்ளது.

மேலும், லேப்டாப் புக் செய்ததற்கான கட்டணம், வரி மூலம் கழிக்கப்பட்ட வரி போன்றவற்றையும் பிளிப்கார்ட் நிறுவனம் கொடுக்கவில்லையாம்.

ஆனால், பிளிப்கார்ட் நிறுவனம் நிறுவனம் 3,901 யூனிட்டுகளை திருப்பி கொடுத்துவிட்டதாக கூறியுள்ளது. இதனால், ரூ.9.96 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக அந்த சி ஸ்டோர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்கள் சச்சின் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மக்­கள், மின்­சா­ரத்தை சிக்­க­ன­மாக பயன்­ப­டுத்த வேண்­டும் என்­ப­தற்­காக, சாதா­ரண பல்­பு­க­ளுக்கு பதி­லாக, எல்.இ.டி., பல்­பு­க­ளுக்கு, மத்­திய அரசு ஆத­ரவு அளிக்­கிறது. இந்­நி­லை­யில், தர நிர்­ணய சட்­டங்­க­ளுக்கு புறம்­பாக, தர­மற்ற; பாது­காப்­பற்ற பல்­பு­கள், அதி­க­ள­வில் தயா­ரிக்­கப்­ப­டு­வ­தாக, ‘நீல்­சன்’ ஆய்வு நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

பல்­பு­கள் தயா­ரிக்­கும், 76 சத­வீத பிராண்­டு­கள், எல்.இ.டி., பல்­பு­களை தயா­ரித்து வரு­வ­தா­க­வும், அவற்­றில், 71 சத­வீத நிறு­வ­னங்­கள், பாது­காப்பு தரம் எதை­யும் பின்­பற்­ற­வில்லை என­வும், நீல்­சன் ஆய்­வ­றிக்கை தெரி­வித்­துள்­ளது.

இதற்­காக, நான்கு பெரிய நக­ரங்­களில், 200 சில்­லரை விற்­பனை கடை­களில், இந்த ஆய்வை, நீல்­சன் மேற்­கொண்­டது.இது குறித்து, பல்­பு­கள் மற்­றும் விளக்­கு­க­ளுக்­கான உற்­பத்­தி­யா­ளர்­கள் சங்­க­மான, ‘எல்­கோமா’ தலை­வர், ராகேஷ் ஜுட்ஷி, ‘‘இந்­திய, எல்.இ.டி., பல்­பு­கள் சந்தை, 10 ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்­ட­தாக இருக்­கிறது.

‘‘அர­சின் ஆத­ர­வால், அடுத்த சில ஆண்­டு­களில், மொத்த விளக்­கு­கள் சந்­தை­யின் பெரும்­ப­கு­தியை, எல்.இ.டி., பல்­பு­கள் பிடித்­து­வி­டும். எனவே, தர­மற்ற தயா­ரிப்­பா­ளர்­கள் மீது, அரசு விரைந்து நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்,’’ என, கோரிக்கை வைத்­துள்­ளார்.

‘பிலிப்ஸ் லைட்­டிங் இந்­தியா’ நிறு­வ­னத்­தின் துணைத் தலை­வர், சுமிச் ஜோஷி, ‘‘தர­மற்ற தயா­ரிப்­பு­க­ளால், நுகர்­வோ­ருக்கு ஆபத்து ஏற்­பட வாய்ப்பு இருப்­ப­தோடு, உரிய, ஜி.எஸ்.டி., கட்­டா­மல், அர­சுக்கு வரி வரு­வாய் இழப்­பை­யும், இத்­த­கைய நிறு­வ­னங்­கள் ஏற்­ப­டுத்­து­கின்றன.‘

‘எனவே, அரசு, இதில் உடனே தலை­யிட்டு, தர­மற்ற மற்­றும் பிராண்­டு­கள் அல்­லாத தயா­ரிப்­பு­கள் மீது, நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்,’’ என, கேட்­டுக் கொண்­டு உள்­ளார்.

 

டவ் சோப் பயன்படுத்தும் கருப்புப் பெண் ஒருவர் வெள்ளையாக மாறுவதைப் போல் ஒரு வீடியோவை நேற்று டவ் நிறுவனம் பேஸ்புக்கில் வெளியிட்டது. கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது இந்த வீடியோ. பல மக்கள் இந்த வீடியோவிற்கு எதிராக கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.

கொஞ்ச நேரத்தில் இந்தப் பிரச்சனை பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வைரல் ஆனது. இதையடுத்து அந்த வீடியோவை நீக்கியது டவ் நிறுவனம்.

மேலும் வீடியோவை நீக்கியதோடு, அந்த விளம்பரத்திற்காக நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டது.

நேற்று பேஸ்புக்கில் டவ் நிறுவனம் நிற ரீதியான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது . அந்த வீடியோவில் ஒரு கருப்பினப் பெண் தன் ஆடையை கழட்டியவுடன் வெள்ளை இனப் பெண்ணாக மாறுவதைப் போல் சித்தரித்திருந்தது. டவ் சோப்பின் விளைபரத்திற்காக இந்த வீடியோவை அந்த நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இதைத் தனது டிவிட்டர் பக்கத்திலும் ஷேர் செய்திருந்தது.

இதையடுத்து இந்த வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டது. நிறைய பேர் வரிசையாக இந்த விடியோவிற்கு கண்டனம் தெரிவிக்கத் தொடங்கினர். டவ் நிறுவனத்திற்கு பலரும் வெவ்வேறு வகையில் கண்டனம் தெரிவித்து போஸ்ட் செய்யத் தொடங்கினர்.

சிலர் இனி டவ் நிறுவனத்தின் பொருட்களை வாங்கப் போவது இல்லை என்றும் கூறினார். இது போல் நிற ரீதியான விளம்பரம் ஒன்றை டவ் நிறுவனம் இதற்கு முன்பே ஒருமுறை வெளியிட்டுள்ளது.

டவ் சோப் பயனபடுத்திய கறுப்பினப் பெண் , வெள்ளையாக மாறுவதை போல் இந்த போட்டோ விளம்பரத்தில் அது குறிப்பிட்டிருந்தது . இந்தப் பிரச்சனை சமூக வலை தளங்களில் பெரும் அளவில் பரவியதை அடுத்து டவ் நிறுவனம் அந்த வீடியோவை நீக்கியது.

மேலும் அது தனது டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டுள்ளது. இனி இது போன்ற தவறுகள் நடக்காது என்றும் அது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது .


வியாழக்கிழமை, 31 ஆகஸ்ட் 2017 00:00

விலை உயர்கின்றன சொகுசு கார்கள்

Written by
சொகுசு கார்கள் மற்றும் எஸ்யுவி ரக கார்களுக்கள் விலை உயரயுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.  
புதிதாக அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பால் கார்களுக்கான வரி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் கார்கள் விலை கட்டாயம் உயரும் என தெரிந்தது.
 
இதோடு தற்போது சொகுசு கார்கள் மீதான செஸ் வரி 15 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 
முக்கியமாக 1500 சிசி-க்கும் அதிகமான திறனுடைய என்ஜின் கொண்ட கார்களுக்கும், 4 மீட்டருக்கு அதிக நீளமுடைய எஸ்யுவி ரக கார்களும் விலை உயர அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.
பக்கம் 3 / 20
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…