JoomlaLock.com All4Share.net

Background Video

டவ் சோப் பயன்படுத்தும் கருப்புப் பெண் ஒருவர் வெள்ளையாக மாறுவதைப் போல் ஒரு வீடியோவை நேற்று டவ் நிறுவனம் பேஸ்புக்கில் வெளியிட்டது. கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது இந்த வீடியோ. பல மக்கள் இந்த வீடியோவிற்கு எதிராக கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.

கொஞ்ச நேரத்தில் இந்தப் பிரச்சனை பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வைரல் ஆனது. இதையடுத்து அந்த வீடியோவை நீக்கியது டவ் நிறுவனம்.

மேலும் வீடியோவை நீக்கியதோடு, அந்த விளம்பரத்திற்காக நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டது.

நேற்று பேஸ்புக்கில் டவ் நிறுவனம் நிற ரீதியான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது . அந்த வீடியோவில் ஒரு கருப்பினப் பெண் தன் ஆடையை கழட்டியவுடன் வெள்ளை இனப் பெண்ணாக மாறுவதைப் போல் சித்தரித்திருந்தது. டவ் சோப்பின் விளைபரத்திற்காக இந்த வீடியோவை அந்த நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இதைத் தனது டிவிட்டர் பக்கத்திலும் ஷேர் செய்திருந்தது.

இதையடுத்து இந்த வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டது. நிறைய பேர் வரிசையாக இந்த விடியோவிற்கு கண்டனம் தெரிவிக்கத் தொடங்கினர். டவ் நிறுவனத்திற்கு பலரும் வெவ்வேறு வகையில் கண்டனம் தெரிவித்து போஸ்ட் செய்யத் தொடங்கினர்.

சிலர் இனி டவ் நிறுவனத்தின் பொருட்களை வாங்கப் போவது இல்லை என்றும் கூறினார். இது போல் நிற ரீதியான விளம்பரம் ஒன்றை டவ் நிறுவனம் இதற்கு முன்பே ஒருமுறை வெளியிட்டுள்ளது.

டவ் சோப் பயனபடுத்திய கறுப்பினப் பெண் , வெள்ளையாக மாறுவதை போல் இந்த போட்டோ விளம்பரத்தில் அது குறிப்பிட்டிருந்தது . இந்தப் பிரச்சனை சமூக வலை தளங்களில் பெரும் அளவில் பரவியதை அடுத்து டவ் நிறுவனம் அந்த வீடியோவை நீக்கியது.

மேலும் அது தனது டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டுள்ளது. இனி இது போன்ற தவறுகள் நடக்காது என்றும் அது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது .


வியாழக்கிழமை, 31 ஆகஸ்ட் 2017 00:00

விலை உயர்கின்றன சொகுசு கார்கள்

Written by
சொகுசு கார்கள் மற்றும் எஸ்யுவி ரக கார்களுக்கள் விலை உயரயுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.  
புதிதாக அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பால் கார்களுக்கான வரி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் கார்கள் விலை கட்டாயம் உயரும் என தெரிந்தது.
 
இதோடு தற்போது சொகுசு கார்கள் மீதான செஸ் வரி 15 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 
முக்கியமாக 1500 சிசி-க்கும் அதிகமான திறனுடைய என்ஜின் கொண்ட கார்களுக்கும், 4 மீட்டருக்கு அதிக நீளமுடைய எஸ்யுவி ரக கார்களும் விலை உயர அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.

உலக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் மூன்றாம் இடத்தை இந்தியா பெற்றுள்ளது என ஐக்கியநாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயக் கழகம் அறிக்கையில் கூறியுள்ளது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, பசு பாதுகாப்பு என்ற பெயரில் மாட்டிறைச்சி உண்பவர்களும் மாடுகளை விற்பனை செய்பவர்களும் குறிவைத்துத் தாக்கப்படுவது தொடருகிறது. குஜராத்தில் உள்ள உனாவில் தொடங்கிய இந்த தாக்குதல் உலக அளவில் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பெற்றாலும் கூட இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அதுவும் மாடுகளை இறைச்சிக்காக விற்கவோ வாங்கவோ கூடாது என பசுவதை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த போது, பசு பாதுகாவலர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் மாட்டிறைச்சி உண்பவர்களை தாக்கினர். சென்னை ஐஐடியில் கூட இந்த சட்டத்தை எதிர்த்துப் போராடிய ஆராய்ச்சி மாணவர் சுராஜ் மீது கடுமையாகத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இப்படி தாக்குதல்கள் நடந்துகொண்டு இருந்த காலகட்டத்தில்தான் இந்தியா மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்துகொண்டிருந்தது. அதாவது 2016ஆம் ஆண்டில் மட்டும் 1.56 மில்லியன் டன் மாட்டிறைச்சியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இதன்மூலம், ஏற்றுமதியில் பிரேசில், ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

அதுமட்டுமில்லாது, 2026 வரை 1.93 மில்லியன் டன் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது என ஐக்கியநாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயக் கழகம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஜியோ ஃபோன்கள் 100 கோடி பேருக்கு  இலவசமாக வழங்கப்படும் என முகேஷ் அம்பானி அதிரடியாக அறிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 40-வது ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் ஸ்மார்ட்ஃபோனான ஜியோ ஃபீச்சர் ஃபோனை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் பேசிய அவர், “ஜியோவில் தற்போது சுமார் 125 வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஜியோ ஃபோன் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.1,500 டெபாசிட் செய்ய வேண்டும். டெபாசிட் செய்யப்படும் இந்தத் தொகையை 3 வருடத்திற்கு பின் திரும்பப் பெற்று கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

மேலும், இந்த மொபைல் ஃபோனுக்கு வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்கும் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

ஆயுர்வேதா, பார்மா மற்றும் எப்எம்சிஜி ஆகிய துறைகளில் கொடி கட்டி பறக்கும் பாபா ராம் தேவ் இந்தியவின் அடுத்த அம்பானி ஆவதற்கான செயல்களை தொடங்கியுள்ளார்.

யோகா குரு என்றழைக்கப்படும் பாபா ராம் தேவ் பதஞ்சலி நிறுவனத்தை குறுகிய காலத்தில் வெகு விரைவாக வளர்ச்சியடைய செய்துள்ளார். இந்நிறுவனத்தின் வளர்ச்சியை கண்டு பண்ணாட்டு நிறுவனங்கள் பயத்தில் உள்ளனர்.
 
இந்நிலையில் பாபா ராம் தேவ் தற்போது பிரைவேட் செக்கியூரிட்டி துறையில் புதிதாக தனது வர்த்தகத்தை துவங்கியுள்ளார். 
 
இதனால் இனி கார்ப்பரேட் நிறுவனங்களும் போட்டியாக களமிறங்கியுள்ளார் பாபா ராம் தேவ். கூடிய விரைவில் டெலிகாம் துறையில் கால் பதித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மேலும் இவர்தான் இந்தியாவின் அடுத்த அம்பானி என பலரும் கூறி வருகின்றனர். 
நோக்கியா மீண்டும் மார்க்கெட்டில் முதலிடம் பிடிக்க முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. தற்போது தனது அடுத்த புதிய மொபைல் வெளியீடு குறித்து அறிவித்துள்ளது. 
நோக்கியா 3310 மாடலை மீண்டும் அறிமுகம் செய்து, பின்னர் நோக்கியா 3, 5, 6 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களையும் அறிமுகம் செய்தது.
 
ஸ்மார்ட்போன்களில் கவனம் செலுத்தினாலும், அதன் அடையாளமாக விளங்கும் பேசிக் மாடல் மொபைல்களிலும் கவனம் செலுத்துகிறது. தற்போது நோக்கியா 105 மற்றும் நோக்கியா 130 ஆகிய பேசிக் மொபைல்களை புதுப்பொலிவுடன் வெளியிட்டுள்ளது.
 
நோக்கியா 105: 
 
# திரையின் அளவு 1.8 இன்ச். பேட்டரி பேக் அப் 15 மணிநேரம். 
 
# 500 மெசேஜ்கள் மற்றும் 2000 மொபைல் காண்டாக்ட் ஸ்டோர் செய்து வைக்கும் திறன்.
 
# எஃப்.எம். ரேடியோ வசதி, ஸ்னேக் கேம், டூடுல் ஜம்ப், க்ராஸி ரோடு போன்ற கேம்களும் உள்ளன.
 
# ஒரு சிம் மட்டும் போடும் வசதி கொண்ட நோக்கியா 105 மொபைல் ரூ.999-க்கும், இரண்டு சிம் வசதி கொண்டது ரூ.1149-க்கும் கிடைக்கும்.
 
# நீலம், வெள்ளை, கருப்பு ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கும்.

பொதுமக்கள் போராட்டம் காரணமாக கேரளாவின் பாலக்காடு பகுதியில் மீண்டும் ஆலையை தொடங்க மாட்டோம் என கோககோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக நடந்து வரும் வழக்கில் கோககோலா தாக்கல் செய்த பதில் மனுவில் இத்தகவலை தெரிவித்துள்ளது. பாலக்காடு மாவட்டம் பிளாசிமாடா பகுதியில் கோககோலா ஆலை இயங்கி வந்தது. தண்ணீரை அதிகம் உறிஞ்சி ஆலை அட்டகாசம் செய்வதாக உள்ளூர் மக்கள் எதிர்த்தனர்.

12 வருடமாக வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஆலை இயங்காமல் இருந்து வருகிறது.

கோககோலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன், நீதிபதி ரோகின்டன் நாரிமன் தலைமையிலான அமர்வு முன்னிலையில் ஆஜராகி, தங்கள் மனு தாரருக்கு எதிரான மனு இனிமேல் செல்லாது என அறிவிக்க கோரினார்.

கோககோலா நிறுவனம், சர்ச்சைக்குரிய இடத்தில் மீண்டும் ஆலை திறக்கப்போவதில்லை என்பதால் இக்கோரிக்கையை வைப்பதாக அவர் தெரிவித்தார்.


இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக சென்செக்ஸ் 32,000 புள்ளிகளை எட்டிப்பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டியும் 9,900 புள்ளிகளை எட்டி உள்ளது.1999ம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக ஜூன் மாதத்தில் பணவீக்கம் வெகுவாக குறைந்துள்ளது.

இதன் எதிரொலியாக ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக தொடர்ந்து 4வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின.இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஜூலை 13, காலை 9 மணி நிலவரம்) 189.99 புள்ளிகள் உயர்ந்து 31,994.81 புள்ளிகளாகவும், நிப்டி 56.50 புள்ளிகள் உயர்ந்து 9872 புள்ளிகளாகவும் இருந்தது.

டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, இன்போசிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பங்கு மதிப்பு வெகுவாக உயர்ந்ததன் காரணமாக காலை 9.30 மணியளவில் பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டின.

சென்செக்ஸ் 215.60 புள்ளிகள் உயர்ந்து 32,020.42 புள்ளிகள், நிப்டி 62.40 புள்ளிகள் உயர்ந்து 9878.50 புள்ளிகள் என்ற அளவையும் எட்டி உள்ளன. மின்துறை, உலோகம், வங்கி துறை, ஆட்டோ துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் பங்குகள் தொடர்ந்து ஏற்றத்துடனேயே காணப்படுவதால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

 

டாடா மோட்டார்‌‌ஸ் நிறுவனம் நானோ கார் உற்பத்தியை நிறுத்திக்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நானோ கார்கள் விற்பனை திருப்தி தரும் வகையில் இல்லாததால் இம்முடிவுக்கு டாடா மோட்டார்ஸ் வந்துள்ளதாக தெரிகிறது. கடந்த மே மாதம் மொத்தம் 355 நானோ கார்கள் மட்டுமே விற்பனையானதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் வெளிநாட்டு சந்தைகளுக்கு மட்டும் நானோ கார்களை தொடர்ந்து ஏற்றுமதி செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மிகக் குறைந்த கட்டணத்தில் டேட்டா வழங்கி மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களை அதிர்ச்சி அடைய வைத்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அடுத்த அதிரடிக்கு தயாராகி உள்ளது.

ஜியோ அறிவித்த குறைந்த விலையில் 4ஜி டேட்டா திட்டத்தால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 112.55 மில்லியனை எட்டி உள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக ரூ.500 க்கு 4ஜி மொபைல்போன்களை விற்பனை செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டம் ஜூலை 21 ம் தேதி நடக்க உள்ளது.

அன்றைய தினம் அல்லது ஆகஸ்ட் துவக்கத்தில் இத்திட்டத்தை ஜியோ முறைப்படி அறிமுகம் செய்ய உள்ளது. ரூ.1000 க்கு மொபைல் போன்களை விற்பனை செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், எதிர்ப்பார்ப்புக்களை விட மேலும் விலையை குறைத்து, ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு கொண்டு வர உள்ளது ஜியோ.

ஆகஸ்ட் 15 அன்று தங்களின் புதிய திட்டத்தை துவக்கவும், ஜியோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களை கவருவதற்காக 2ஜி வாடிக்கையாளர்கள் இந்த புதிய போன் மூலம் நேரடியாக 4ஜி க்கு தங்களை மாற்றிக் கொள்ளலாம். இதன் விலை ரூ.500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே இந்த குறைந்த விலை ஸ்மார்ட்போனை விற்பனை செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளது. இருந்தாலும் 2ஜி வாடிக்கையாளர்கள் தங்களை 4ஜி க்கு மாற்றி கொள்வதற்காக இந்த போனை அதிகம் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் ஜியோ, தனது ‛டன் டனா டன்' சலுகையின் புதிய திட்டத்தின் ஆரம்ப விலையை மாதத்திற்கு ரூ.150 ஆக நிர்ணயித்துள்ளது. மேலும் ரூ.80 முதல் 90 என்ற சலுகை கட்டண திட்டத்தையும் ஜியோ அறிமுகம் செய்ய உள்ளது.

தற்போது டன் டனா டன் திட்டத்தில் ரூ.309 அல்லது ரூ.509 க்கு இலவச வாய்ஸ், அளவில்லா எஸ்.எம்.எஸ், ஜியோ ஆப்ஸ், தினமும் 1 முதல் 2 ஜிபி டேட்டா சேவையை வழங்கி வருகிறது. பிரைம் உறுப்பினர்களுக்கு இந்த சேவை ரூ.99 க்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பக்கம் 4 / 20
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…