JoomlaLock.com All4Share.net

Background Video

22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ104 உயர்ந்து ரூ22,288க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ13 உயாந்து ரூ2,786க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு ரூ70 காசு உயர்ந்து ரூ44.90 விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில ஆட்களாகவே தங்கத்தின் விலையில் தொடந்து இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய மாலை நேர நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை பற்றி பார்க்கலாம்

தங்கம் விலை நிலவரம்

22 கேரட் ஆபரண தங்கம், கிராம் ஒன்று, 2 ஆயிரத்து 757 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 22

ஆயிரத்து 56 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் உயர்ந்து 43.60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

சென்ற வாரம் ஒரு சவரன் தங்கம் விலை 23 ஆயிரத்தை தொட்ட நிலையில், இந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடந்து சரிவு காணப்பட்டு, 22 ஆயிரத்தை நெருங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

சனிக்கிழமை, 11 மார்ச் 2017 00:00

22 ஆயிரத்தை தொட்டது ஒரு சவரன் தங்கம்

Written by

22 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை .......

கடந்த சில ஆட்களாகவே தங்கத்தின் விலையில் தொடந்து இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய மாலை நேர நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை பற்றி பார்க்கலாம்

தங்கம் விலை நிலவரம்

22 கேரட் ஆபரண தங்கம், கிராம் ஒன்று, 2 ஆயிரத்து 754 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 22

ஆயிரத்து 32 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

ஒரு கிராம் வெள்ளி ரூ. 43.40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

சென்ற வாரம் ஒரு சவரன் தங்கம் விலை 23 ஆயிரத்தை தொட்ட நிலையில், இந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடந்து சரிவு காணப்பட்டு, 22 ஆயிரத்தை தொட்டது .

 

 

தங்கத்தின் விலையை பொறுத்தவரையில் ,இன்னும் சில நாட்களுக்கு இறக்கம் காணப்படும் என தெரிகிறது .

தென்கொரியவைச் சேர்ந்த ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் அதன் பிரபல மாடலான ஐ10 உற்பத்தியை நிறுத்தியது. நவீனரகம் மற்றும் அதிக வசதிகளைக் கொண்ட கார்களின் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனம் திரும்பியதையடுத்து, ஹுண்டாய் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் உயரதிகாரி தெரிவித்ததாவது:

ஹுண்டாய் மோட்டார் இந்தியா முதன்முதலாக சிறிய ரக பிரிவில் ஐ10 மாடல் காரை கடந்த 2007-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. உள்நாடு மற்றும் வெளிநாடு என இப்போது வரை அந்த மாடலைச் சேர்ந்த 16.95 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. ஹுண்டாய் நிறுவனம் இந்தியாவில் வலுவாக காலூன்ற இந்த மாடலின் அறிமுகம் பேருதவி புரிந்தது.

தற்போதைய நிலையில், வாடிக்கையாளர்களின் கவனம் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட பிரீமியம் வகை கார்களின் பக்கம் திரும்பியுள்ளது. இதனை உணர்ந்து, ஏற்கெனவே ஐ10 கார்களுக்கு மாற்றாக கிராண்ட் ஐ10 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக, பழைய ஐ10 மாடல் கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர். இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக ஹுண்டாய் திகழ்கிறது. இந்த நிறுவனம் பிரிமியம் பிரிவில் அதிக தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

2017-20-ஆம் ஆண்டுக்குள் எட்டு புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்ய ஹுண்டாய் திட்டமிட்டுள்ளது. அதில் மூன்று தயாரிப்புகள் முற்றிலும் புதியவை. எஞ்சியுள்ள தயாரிப்புகள் தற்போதிருக்கும் மாடல்களின் புதிய பதிப்புகளாக வெளிவரவுள்ளவை.

ஹைபிரிட் வகை கார் தயாரிப்பில் அதிக பங்களிப்பை வழங்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டில் அப்பிரிவில் "ஐயோனிக்' மாடல் காரை அறிமுகம் செய்யவுள்ளது.

சுற்றுச்சுழல் மாசுபாடு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து வரும் நிலையில், மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தில் வாகனங்களை உற்பத்தி செய்யவும், அத்தகைய தயாரிப்புகளுக்கு அரசிடமிருந்து ஊக்குவிப்பு சலுகைப் பயன்களை பெறவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஹுண்டாயின் ஹைபிரிட் ரக கார்கள் இன்னும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கட்கிழமை, 27 பிப்ரவரி 2017 00:00

புதிய பொலிவுடன் நோக்கியா 3310

Written by

நோக்கியா 3310 போன் மீண்டும் மறுவடிவம் பெற்று வரப்போவதை அந்நிறுவனம் ஞாயிறன்று உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு வெளியிடப்பட்டு அதிக அளவில் விற்பனையான நோக்கியா 3310 தற்போது பிரகாசமான நிறங்களுடன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

புதிய வடிவம் பெற்று வரவுள்ள நோக்கியா 3310 குறித்து பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் கண்காட்சியில் நோக்கியா நிறுவனத்தின் தலைமை இயக்குனர் ராஜிவ் சூரி கூறும்போது, "நோக்கியா 3310 பிராண்ட் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் காதல் மகத்தானது. இதன்மூலம் பல லட்சக்கணக்கான மக்களின் அன்பு கிடைத்திருக்கிறது" என்றார்.

புதிதாக மறுவடிவம் பெற்றுள்ள நோக்கியா 3310 உள்ள புதிய அம்சங்கள்

* மறுவடிவம் பெற்றுள்ள நோக்கியா 3310 பழைய வடிவத்தைக் காட்டிலும் பெரிய திரையை கொண்டுள்ளது.

* இதன் விலை 52 டாலர் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது (இந்திய விலைப்படி ரூபாய் 3,467 - மாற்றமிருக்கும்)

* புதிதாக வெளிவரவுள்ள நோக்கியா 3310 வெள்ளை, சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களில் வெளிவரவுள்ளது.

* பழைய நோக்கியா 3310 போனில் மிகவும் கவரப்பட்ட கைபேசிப் பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய பாம்பு விளையாட்டு நவீன காலத்துக்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

முன்னதாக கைபேசி உலகில் நோக்கியா முன்னணி நிறுவனமாகக் கொடிகட்டிப் பறந்தாலும், ஸ்மார்ட்ஃபோன்களின் வருகைக்குப் பிறகு நிலைமை மாறியது.

இதன் விளைவாக நோக்கியா முன்னணி இடத்தை இழந்து தடுமாறியதும், பின்னர் அதன் கைபேசி வர்த்தகத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியதும், ஒரு கட்டத்தில் அதன் தயாரிப்பை நிறுத்திக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

திங்கட்கிழமை, 27 பிப்ரவரி 2017 00:00

ஏர் டெல்லில் ரோமிங் கட்டணம் ரத்து !

Written by
மலிவான விலையில் சேவை வழங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் உள்ளிட்ட இந்தியா தொலை தொடர்பு நிறுவனங்கள் கால் கட்டணங்கள் மற்றும் இண்டர்நெட் டேட்டா கட்டணங்களை குறைத்து வருகின்றனர்.

இந்தியாவில் தொலை தொடர்பு சேவையில் முண்ணனி வகிக்கும் நிறுவனம் ஏர்டெல்.  ஜியோவின் போட்டியை சமாளிக்க தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு கால் மற்றும் டேட்டாவுக்கான உள்நாட்டு ரோமிங் கட்டணத்தை ரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் வெளிநாட்டுகளுக்கு செல்லும் ஏர்டெல் பயனாளர்களுக்கு சலுகை விலையில் சிறப்பு உலகளவிளான ரோமிங் திட்டங்களையும், பயனாளர்கள் எளிதாக கட்டணங்களை கட்டும் வசதியை விரைவில் கொண்டுவர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ரிலையன்ஸ் ஜியோவுடனான தனது போட்டியை அதிகரிக்கும் விதமாக, 100 ரூபாய்க்கு 10GB 3ஜி/4ஜி டேட்டா வழங்கும் திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் சில தினங்களுக்கு முன்பு ஜியோ பிரைம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி, ஜியோ பிரைம் வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்ஸ், வீடியோ கால்ஸ் உள்ளிட்ட சலுகைகள் பெரலாம்.
 
இதனால், ஏர்டெல் நிறுவனம் 3ஜி அல்லது 4 ஜி போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.100 கட்டணத்தில் கூடுதலாக 10 ஜிபி டேட்டாக்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
 
ஏற்கனவே இருக்கும் திட்டத்தில் கூடுதலாக ரூ.100 சேர்த்து ரீசார்ஜ் செய்வதன் மூலம் இச்சலுகையைப் பெறலாம் எனவும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. 
வெள்ளிக்கிழமை, 24 பிப்ரவரி 2017 00:00

ஜியோவின் இலவச சலுகை : போராடும் ஏர்டெல்

Written by
ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடியான இலவச அறிவிப்புகளால் இழந்துவரும் தனது சந்தை மதிப்பை மீட்டெடுக்க ஏர்டெல் நிறுவனம் போராடி வருகிறது. 
 
இதன் ஒரு கட்டமாக டெலினார் நெட்வொர்க் நிறுவனத்தைக் கைப்பற்ற முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. 
 
இந்திய தொலைதொடர்பு சந்தையில், சமீப காலமாக நிலவி வரும் போட்டிக்கு காரணம் இலவச அறிவிப்புகளுடன் சந்தையில் களமிறங்கிய ரிலையன்ஸ் ஜியோ.
 
அனைத்து சேவைகளும் இலவசம் என்பதால், ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, பிஎஸ்என்எல் உள்ளிட்ட நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் ஜியோ நெட்வொர்க்குக்கு மாறியுள்ளனர்.
 
இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோவின் போட்டியை சமாளிக்கும் விதமாக, பிற நெட்வொர்க் நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. 
 
எனவே, இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமான ஏர்டெல், டெலினார் நெட்வொர்க்கை கையகப்படுத்த முடிவுசெய்துள்ளது. 
 
இதே போல் ஐடியா மற்றும் வோடஃபோன் நெட்வொர்க்குகள் இணைய முடிவுசெய்துள்ளன. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஏர்செல் நிறுவனங்களும் இணைவதற்கான ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
புதன்கிழமை, 22 பிப்ரவரி 2017 00:00

பெப்சி கோக் விற்பனையில் கடும் வீழ்ச்சி

Written by

தமிழகத்தில் பெப்சி, கோக் விற்பனை 75 சதவீதம் சரிந்துள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். Image result for pepsi coke images in paintings

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வெளிநாட்டு குளிர்பானங்களை குடிக்கமாட்டோம் என மாணவர்கள், இளைஞர்கள் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மார்ச் 1 -ஆம் தேதி முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் ஆகிய குளிர்பானங்களை விற்கமாட்டோம் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்தது.

இதையடுத்து, கடந்த 4 வாரங்களில் 75 சதவீதம் அளவுக்கு பெப்சி, கோக் விற்பனை குறைந்துள்ளது. இந்த குளிர்பானங்களின் முகவர்கள், விற்பனையாளர்கள் கொண்டு வரும் சரக்குகளை தமிழக வணிகர்கள் புறக்கணித்து வருகின்றனர்.

வரும் மார்ச் 1 -ஆம் தேதிக்குள் தமிழகத்தில் எந்தக் கடைகளிலும் பெப்சி, கோக் விற்கப்படாது என நம்புகிறோம். விரைவில் அனைத்து கடைகளிலும் பதநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

தொழில்நுட்பங்கள் ஒன்று மற்றொன்றாக தினந்தோறும் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கின்றன. மிக முக்கியமான தொழில்நுட்பம் என்று ஒரு காலத்தில் சிலாகிக்கப்பட்ட ஒன்று, காலமாற்றத்தில் வழக்கொழிந்து விடுகிறது. அந்த இடத்தில் வேறொரு கண்டுபிடிப்பு முக்கியமாக அமர்ந்து விடுகிறது.

தகவல் களை அனுப்புவதில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்திய தந்தி முறை இன்று வழக் கொழிந்து விட்டது. கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்த பிறகு டைப்ரைட்டிங் இயந்திரங் கள் காணாமல் போயின. அந்த வகையில் டிஜிட்டல் கேமிராக்கள் வந்த பிறகு ஃபிலிம் சுருள் காணாமல் போனது.

ஆனால் மக்களிடம் உணர்வுபூர்வமாக இணைந்த சில அடிப்படையான விஷயங்கள் மட்டும் என்றும் மாறுவதேயில்லை. அந்த வகையில் ஃபிலிம் சுருள் தொழில்நுட்பத் துக்கான தேவை இப்போதும் இருப்பதாகவும், இதனால்ஃபிலிம் சுருள் உற்பத்தியை மீண்டும் தொடங்க உள்ளதாகவும் கோடக் அறிவித்துள்ளது. Image result for still camera images

குறிப்பாக தங்களது எக்டாகுரோம் ஃபிலிமை திரும்ப தயாரிக்க உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதியில் அதை விற்பனைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இதில் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த ஃபிலிம் உற்பத்தியை 2012-ம் ஆண்டிலேயே கோடக் நிறுத்திவிட்டது.

இந்த ஃபிலிம் பயன்படுத்தும்போது கிடைக்கும் படக்காட்சிகள் சிறப்பாகவும், ஃபிலிம் நீண்ட நாள் வீணாகாமல் இருக்கும் என்பதாலும் இதைப் பயன்படுத்தி படம் எடுத்த புகைப்பட கலைஞர்கள் இதைத் திரும்ப தயாரிக்க வேண்டும் என கோரியதாக கோடக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதனால் புதிய தொழில்நுட்பத்தில் தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. ஏனென்றால் சர்வதேச அளவில் சுற்றுச் சூழல் விதிமுறைகளுக்கு ஏற்ப சூழலை பாதிக்காத வகையிலும் ஃபிலிமை கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பம் வந்த பிறகும், பழைய தொழில்நுட்பத்துக்கான தேவை உருவாகியுள்ளதற்கு முக்கிய காரணம் வாடிக்கையாளர் தேவைதான் என்பது முக்கியமானது. இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒரு புகைப்படத்தை வாடிக்கையாளர்கள் தங்கள் கையிலுள்ள செல்போனிலிருந்துகூட எடுத்து விட முடியும்.

ஆனால் இன்னமும் ஃபிலிம் பயன்படுத்தி எடுக்கும் ஆர்வலர்களும் இருக்கவே செய்கின்றனர். ஏனென்றால் ஃபிலிம் கொடுத்த தரம்தான் காரணம் என்கிறார் கோடக் நிறுவனத்தின் தலைமை சந்தையிடல் அதிகாரி ஸ்டீவன் ஓவர்மேன்.

பக்கம் 5 / 19
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…