JoomlaLock.com All4Share.net

Background Video

வியாழக்கிழமை, 04 மே 2017 00:00

ஆப்பிள் ‘ஐ’ போன் விற்பனையில் சரிவு

Written by

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களில் குறைவான ஃபோன்களை யே ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக அதன் சமீபத்திய முடிவுகளில் தெரிவித்துள்ளது.

கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் இந்த ஆண்டில் புதிய ஐஃபோன் மாடல் ஒன்றை வெளியிட உள்ளது.

மூன்று மாதத்தில் 50.8 மில்லியன் ஐஃபோன்களை விற்பனை செய்தததாகவும், அது கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது 1% குறைவானது என்றும் ஆப்பிள் தெரிவித்துள்ளது.

அடுத்த ஐ ஃபோனுக்காக வாடிக்கையாளர்கள் காத்திருப்பதால் அந்த காத்திருப்பு நேரத்தை காரணமாக சுட்டிக்காட்டினார் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக்.

நல்ல சிறந்த முடிவுகளை எதிர்ப்பார்த்து காத்திருந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் முன்னர் ஓர் உச்சத்தை தொட்ட நிலையில், வர்த்தகம் தொடங்கிய சிலமணி நேரங்கள் கழித்து பங்குகளின் விலை சுமார் 2 சதவீதம் சரிந்தன.

வல்லுநர்கள் கணித்திருந்த வருவாயைக் காட்டிலும் சற்று குறைவாக 4.6 சதவீத உயர்வுடன் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 52.9 பில்லியன் டாலர்களை வருவாயாக காட்டியது.

ஆப்பிள் பே, ஐகிளவுட் மற்றும் ஐஃபோன் ஆப் ஸ்டோர் உள்ளிட்ட சேவைகளால் ஐஃபோன் விற்பனையில் சரிவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

ஐஃபோன் ஆப் ஸ்டோர் விற்பனை 18 சதவிதம் அதிகரித்து 7 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஆப்பிள் வாட்ச், ஏர் பாட்ஸ் மற்றும் பீட்ஸ் இயர்ஃபோன்கள் விற்பனை உயர்ந்திருப்பதை டிம் குக் சுட்டிக்காட்டினார்.

ஐ ஃபோன்களின் விற்பனை குறைந்தாலும், ஐ ஃபோன்கள் மூலம் ஈட்டிய வருவாய் 1 சதவீதம் அதிகரித்து 33.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

கோகுலம் சிட்ஸ் நிறுவனத்தில் நடந்த வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக, 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, அபராத வரி வசூலிக்க, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: கோகுலம் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்த போது, ஏதோ தவறு நடப்பது தெரிய வந்தது.

அதனால், எட்டு மாதங்களாக, அதன் உரிமையாளர்களின் நடவடிக்கை மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகளை கண்காணித்தோம். அதன் உரிமையாளர் கோபாலன், 72 வயதிலும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று மாநிலங்களில் உள்ள, 400 கிளைகளை நேரடியாக சென்று ஆய்வு செய்வதை பார்த்து, ஆச்சரியம் அடைந்தோம்.

எனினும், தீவிர விசாரணைக்குப் பின், மாதாந்திர சீட்டுப் பணம் பற்றிய உண்மையான தொகையை, பல ஆண்டுகளாக, கணக்கில் காட்டாதது தெரிய வந்தது. மேலும், பல திரைப்படங்களை எடுத்துள்ளனர். தற்போதும், ஒரு திரைப்படத்தை தயாரிக்கின்றனர். ஆனால், திரைத்துறை கணக்கு வழக்குகளை முறையாக பராமரித்து வருகின்றனர்.

அவர்களது மருத்துவக் கல்லுாரியில், நன்கொடை பெற்றது தொடர்பான கோப்புகளை, கேரள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். அதன்பின், விசாரணை துவங்கும். இதுவரை, 1,107 கோடி ரூபாய், வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதில், அவர்கள் செலுத்த வேண்டிய வரியை, கணக்கிட்டு வருகிறோம். அது, 500 கோடி ரூபாயை உறுதியாக தாண்டும். அதை செலுத்த, அவர்கள் ஒப்புக்கொண்டு உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத அளவிற்கு அதிரடியாக உயர்ந்துள்ளதன.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் முதல் முறையாக 30,000 புள்ளிகளை கடந்த புதிய சாதனை படைத்துள்ளது. சென்செக்ஸ் 30,030.80 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 9328.75 புள்ளிகளாகவும் உள்ளன.

இதற்கு முன் 2015 ம் ஆண்டு மார்ச் 4 ம் தேதி 30,024 புள்ளிகளை தொட்டதே சென்செக்சின் அதிகபட்ச சாதனையாக கருதப்பட்டது. தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இருப்பினும் பிரான்ஸ் தேர்தலின் முதல் சுற்றில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளதன் காரணமாக வால் ஸ்ட்ரீட் 3வது நாளாக தொடர்ந்து உச்சத்தை எட்டி உள்ளது.

சர்வதேச பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள அதிரடி உயர்வு மற்றும் டில்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ. அதிரடி முன்னிலையில் இருந்து வருவதாலும் இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை எட்டி உள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கோகுலம் சிட் பைனான்ஸ் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம், பெங்களூரு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் கோகுலம் சிட் பைனாஸ் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 78 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

சோதனையில் 500 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் கோடம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட 36 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. கோகுலம் நிறுவன உரிமையாளர் கோபாலன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகாரை தொடர்ந்து இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கேரளா, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடப்பதாக தகவல்கள் தெரவிக்கின்றன.

கடந்த சில காலங்களாக தங்கத்தின் விலை ஏறுவதும் இறந்குவதும்மாகத்தான் இருந்துகொண்டு வருகிறது. இன்று

22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.232 உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.22,352க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.29 உயர்ந்து ரூ.2,794க்கு விற்பனை செய்யப்படுகிறது. வௌளி கிராமுக்கு 50 காசு உயர்ந்து ரூ45.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமீபத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்தது. இதன் மூலம் பெருநகரங்களில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு, ஐந்து ரூபாய் வரை குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு அவ்வப்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் , பெட்ரோல் விலையில் லிட்டருக்கு, 3.77 ரூபாய்; டீசல் விலையில் லிட்டருக்கு, 2.91 ரூபாய் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மாநில அரசுகளின் வரி விதிப்பையும் கணக்கில் எடுத்து கொண்டால், பெட்ரோலுக்கு, லிட்டருக்கு, ஐந்து ரூபாயும், டீசலுக்கு லிட்டருக்கு, 3.5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

 

இதற்கு முன் எப்போது? இதற்கு முன் மிக அதிகபட்சமாக, 2009 ஆண்டு ஜன., 29ம் தேதி தான், பெட்ரோல் விலையில், லிட்டருக்கு ஐந்து முதல், 5.50 ரூபாய் வரை குறைக்கப்பட்டது. 2015 ஆண்டு ஆக., 1ம் தேதி, டீசல் விலையில், லிட்டருக்கு, 3.60 முதல், 3.90 ரூபாய் வரை குறைக்கப்பட்டது. இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' சர்வதேச அளவில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது.

ரூபாய் மதிப்பும் அதிகரித்துள்ளது. எனவே, அதற்கு உரிய பலன், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பாக நுகர்வோருக்கு அளிக்கப்பட்டுள்ளது' என, குறிப்பிடப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை (ஒரு லிட்டருக்கு ரூபாயில்)பெரு நகரங்கள் - பழைய விலை - புதிய விலை - குறைப்பு எவ்வளவுடில்லி - 71.14 - 66.29 - 4.85கோல்கட்டா - 73.66 - 68.97 - 4.69மும்பை - 77.46 - 72.66 - 4.80சென்னை - 74.43 - 69.28 - 5.15டீசல் விலை( ஒரு லிட்டருக்கு ரூபாயில்)பெருநகரங்கள் - பழைய விலை - புதிய விலை - குறைப்பு எவ்வளவுடில்லி - 59.02 - 55.61 - 3.41கோல்கட்டா - 61.27 - 57.86 - 3.41 மும்பை - 64.89 - 61.27 - 3.62சென்னை - 62.48 - 58.82 - 3.66

பாரத் ஸ்டேஜ்' எனப்படும், 'பி.எஸ்., - 3' தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங் களை விற்பதற்கு கடைசி நாளான நேற்று, தமிழகத்தில் வாகன விற்பனை மூன்று மடங்கு அதிகரித்தது. பல, 'ஷோ ரூம்'களில், 'நோ ஸ்டாக்' அறிவிப்பு ஒட்டப்பட்டது.

வாகனப் புகையால் ஏற்படும் மாசு அளவை தடுப்பதற்காக, அதிக புகையை கக்கும், பி.எஸ்., - 3 தொழில்நுட்பத்தை கைவிட்டு, ஏப்ரல் முதல், பி.எஸ்., - 4 தொழில்நுட்பத்தில் மட்டுமே வாகனங்களை தயாரிக்க வேண்டும் என, மத்திய அரசு, 2015ல் உத்தரவிட்டது.அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தை அணுகினர். ஆனால், மார்ச், 31க்குப் பின், பி.எஸ்., 3 வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது என, உச்ச நீதிமன்றம் அறிவித்தது. Image result for bharath stage vehicles images

இதனால், அதிர்ச்சி அடைந்த வாகன நிறுவனங்கள், குறிப்பாக, இரு சக்கர வாகன நிறுவனங் கள், நேற்று முன்தினம், அதிரடி விலை குறைப்பை அறிவித்தன. இதையடுத்து, நேற்று முன்தினம் மதியத்தில் இருந்து, வாகன விற்பனை அதிகரிக்க துவங்கியது.

இந்நிலையில், நேற்று கடைசி நாள் என்பதால், வழக்கத்திற்கு மாறாக, பல விற்பனை நிலையங்கள் முன்கூட்டியே திறக்கப்பட்டன. சில மணி நேரங்க ளில், அனைத்து வாகனங் களும் விற்று தீர்ந்தன. பகல், 12:00 மணி அளவில், இருப்பு இல்லை என்ற அறிவிப்புகள் ஒட்டப்பட்டன.

இரு சக்கர வாகனங் களைபொறுத்தவரை, சாதாரண மற்றும் நடுத்தர மாடல்களுக்கு, 10 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை, தள்ளுபடி தரப்பட்டது. 'சூப்பர் பைக்' எனப்படும், அதிக சக்தி வாய்ந்த இரு சக்கர வாகனங் களில், 'டிரையம்ப்' வகைகளுக்கு, மூன்று லட்சம் ரூபாய் வரை, தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், சில குறிப்பிட்ட மாடல் பைக்குகள் மட்டும், விற்பனை ஆகாமல் உள்ளன. அவற்றை, உற்பத்தி நிறுவனங்களே, திரும்ப எடுத்துக் கொள்ளுமா என்பது தெரியாமல், விற்பனையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். '

பி.எஸ்., - 4' தொழில்நுட்பத்திற்கு, அந்த வாகனத்தின் இன்ஜின் பாகங்களில் மாற்றங் களை செய்வதற்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என, தெரிகிறது.

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2017 00:00

ஜியோ இலவச சேவை மேலும் நீட்டிப்பு

Written by
ஜியோ இலவச சேவை இன்றுடன் முடியவடையும், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டண சேவை என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்த இலவச சேவை ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுவரை சுமார் 7 கோடி வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தி ப்ரைம் உறுப்பினர்களாக மாறியுத்தாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் மற்ற வாடிக்கையாளர்கள் ஜியோவின் ப்ரைம் உறுப்பினர்களாக சேர ஏப்ரல் 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் ரூ.303 ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதத்திற்கு இலவசமாக டேட்டா பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017 00:00

ஜியோவின் புதிய சலுகை அறிவிப்பு

Written by

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

ஜியோ சிம் கார்டு வைத்துள்ளவர்கள், பிரைம் திட்டத்தில் சேர்ந்து வருகின்றனர். இவர்களுக்கான இலவச சேவை சலுகை, வரும், 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த சூழ்நிலையில் புதிய சலுகையை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ரூ.149 பிரீபெய்டு திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு,2ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படும். ரூ.303க்கு ரீசார்ஜ் செய்யபவர்களுக்கு, 5 ஜிபி கூடுதல் டேட்டாவும், ரூ.499க்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு, 10 ஜிபி கூடுதல் டேட்டா அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ104 உயர்ந்து ரூ22,288க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ13 உயாந்து ரூ2,786க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு ரூ70 காசு உயர்ந்து ரூ44.90 விற்பனை செய்யப்படுகிறது.

பக்கம் 6 / 21
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…