JoomlaLock.com All4Share.net

Background Video

வாகன உலகம், எதிர்காலத்தில் சந்திக்க இருக்கும் எரிபொருள் சவால்களுக்கு ஏற்றபடி, பி.எம்.டபுள்யூ நிறுவனம் இந்த ஆண்டில் மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது. 

சூப்பர் சார்ஜிடு ஆர்5, கான்சப்ட் 90 போன்ற பெயர்களில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் கடந்த ஆண்டு, பைக்குகளை அறிமுகப்படுத்தியது. இதை பின்பற்றி, இந்த ஆண்டில்   பி.எம்.டபுள்யூ சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை வெளியிடுகிறது.

இத்தாலியில் பழங்கால கார்களுக்கான கண்காட்சி தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. அப்போது பி.எம்.டபுள்யூ நிறுவனம் மோட்டார்ராட் கான்செப்டில் அது உருவாக்கவுள்ள மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. நகர பயன்பாட்டை மனதில் வைத்து இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்பட உள்ளது.

இதில் சிராமிக் எல்.இ.சி விளக்கு முகப்பில் அமைக்கப்படுகிறது. ஆங்கில ''சி'' எழுத்து வடிவத்திலான விளக்குகள் பின்புறத்தில் அமைக்கப்படுகிறது. இதனுடைய இருக்கைகளில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாற்றக்கூடிய சிறப்பம்சம் உள்ளது.

தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் இதில் உள்ளது. டிஸ்பிளேவில் வண்டியின் வேகம், போகும் பாதை மற்றும் ஹேண்டில் பார்களை பயன்படுத்தும் முறை ஆகியவை உடனே திறையில் தோன்றும்.

அட்டகாசமான தோற்றம், தொழில்நுட்பத்தில் தயாராக உள்ள பி.எம்.டபுள்யூ மோட்டார் ரெட் கான்செப்ட் ஸ்கூட்டரின் விற்பனை குறித்த விவரங்களை பி.எம்.டபுள்யூ நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவுக் கழகம் சார்பில் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வரும் “ரயில் நீர்” விற்பனை மற்றும் தரத்தில் நம்பர் -1 பிராண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிகளுக்காக பல்வேறு வகை நிறுவனங்களை சேர்ந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Image result for 'rail neer' images

இந்நிலையில், Consumer Voice என்ற பத்திரிக்கை மேற்கொண்ட ஆய்வில் 12 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனங்களைவிட, இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவுக் கழகம் சார்பில் தயாரிக்கப்படும் “ரயில் நீர்“ என்ற சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அதிக அளவில் விற்பனை ஆவதாக தெரியவந்துள்ளது.

மற்ற நிறுவனங்களை விட ரயில் நீரின் விலை குறைவாக உள்ளதோடு, தரமும் நன்றாக உள்ளதால் மக்கள் இதற்கு அதிக வரவேற்பு அளித்துள்ளனர்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் கார் விற்பனையை முற்றிலுமாக நிறுத்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தொழில் போட்டியை சமாளிக்க, உலகின் முக்கிய சந்தைகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக போராடியும் இந்நிறுவனத்தால் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாடிக்கையாளர்களை பெற முடிந்தது. 

Image result for general motors images

இதனால் இந்தியாவில் கார் விற்பனையை நிறுத்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதே சமயம், இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை தொடர்ந்து நடத்தவும், ஏற்றுமதியை தொடரவும் ஜெனரல் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஷெவர்லெட் கார்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இதனால் விற்பனையை நிறுத்தி விட்டு, இந்தியாவில் உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்தப் போவதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விற்பனை இல்லாவிட்டாலும் இந்தியாவில் இருந்து மெக்சிகோ மற்றும் லத்தீன் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்கள் எண்ணிக்கை 70,969 என்ற அளவில் இருமடங்காக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வர்த்தகச் சந்தையைக் கொண்டுள்ள துறைகளில் முதன்மையானவை நுகர்வோர் விற்பனை சந்தை. இதில் மக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் அனைத்து முக்கியமான பொருட்களும் இதில் அடங்கும்.

அதில் டூத்பேஸ்ட் விற்பனையும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. 

பதஞ்சலி தன்ட் கான்டி டூத்பேஸ்ட் அறிமுகத்திற்குப் பின் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டூத்பேஸ்ட் பிராண்ட் பட்டியலில் மிகப்பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சொல்லப்போனால் இதன் அறிமுகத்திற்குப் பின் அனைத்து முன்னணி நிறுவனங்களின் விற்பனை குறைந்த நிலையில், ஒரே ஒரு நிறுவனம் மட்டும் சரிவில் இருந்து தப்பி விற்பனையில் வளர்ச்சியைக் கண்டுள்ளது. 

Image result for patanjali toothpaste images

டாபர்

2017ஆம் நிதியாண்டில் டூத்பேஸ்ட் விற்பனை சந்தையில் கோல்கேட், க்லோஸ்-அப் ஆகிய முன்னணி பிராண்டுகளின் விற்பனை சரிந்துள்ளது. இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணமாகப் பதஞ்சலி விளங்குகிறது. Image result for dabur paste images

ஆயினும் இதே காலகட்டத்தில் டாப்ர் இந்தியா நிறுவனத்தின் டாபர் ரெட் பேஸ்ட்-இன் விற்பனை அதிகரித்து எப்போதும் எட்டாத 3வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த உயர்விற்கு முன்னணி நிறுவனங்களின் சரிவும், தன்ட் கான்டி டூத்பேஸ்ட் போன்றே சுவை மற்றும் நற்பயன்கள் கொண்டதே இதற்குக் காரணம். 

தற்போதைய நிலையில் டாபர் ரெட் பேஸ்ட் இந்திய சந்தையில் மட்டும் சுமார் 8.5 சதவீத வர்த்தகச் சந்தையைக் கொண்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் 7.5 சதவீதம் வர்த்தகச் சந்தையைக் கொண்ட சிபாக்கா பிராண்டை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஒரு வருடத்தில் பதஞ்சலி-யின் தன்ட் கான்டி டூத்பேஸ்ட்-இன் விற்பனை 1.5 சதவீதம் வரை உயர்ந்து சுமார் 3 சதவீத வர்த்தகச் சந்தையைக் கைப்பிடித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் வேகமாக விற்பனையாகும் டூத்பேஸ்ட் பிராண்டுகளில் இது முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

2017ஆம் நிதியாண்டில் பதஞ்சலி சுமார் 10,000 கோடி ரூபாய் வர்த்தகத்தைச் செய்துள்ளதாகவும், இதில் 940 கோடி ரூபாய் தன்ட் கான்டி டூத்பேஸ்ட் கிடைத்துள்ளது.

கோல்கேட்

தன்ட் கான்டி டூத்பேஸ்ட் அறிமுகத்திற்குப் பின் இந்திய சந்தையில் கோல்கேட் நிறுவனத்தின் சந்தை பங்கீடு சுமார் 55.5 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது.

 

ஜான்சன்&ஜான்சன் மருந்து நிறுவனத்தின் முகப்பவுடரை பயன்படுத்திய பின்னர்தான், தனக்கு கருப்பை புற்றுநோய் வந்தது என்று வழக்கு தொடர்ந்த பெண்ணொருவருக்கு, அந்த நிறுவனம் 110 மில்லியன் டாலருக்கு மேலா அபராத தொகை வழங்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 

4 தசாப்தங்களாக முகப்பவுடரை பயன்படுத்தி வந்த பின்னர், தனக்கு அதனால் புற்றுநோய் உருவானதாக மிசௌரி மாகாணத்தின் வர்ஜினியாவை சேர்ந்த 62 வயதான லோயிஸ் ஸ்லெம்ப் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தங்களுடைய பொருட்களோடு தொடர்படைய புற்றுநோய் ஆபத்து பற்றி போதியளவு வாடிக்கையாளா்களை எச்சரிப்பதற்கு இந்த நிறுவனம் தவறிவிட்டது என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.

ஆனால், கருப்பை புற்றுநோய்க்கும் முகப்பவுடருக்கும் உள்ள தொடர்பு நிரூபிக்கப்படவில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஜான்சன் & ஜான்சன் மருந்து நிறுவனத்திற்கு எதிராக அதனுடைய பவுடர் பொருட்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள சுமார் 2,400 வழக்குகளில் புனித லூயிஸ் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்புத்தான் மிகவும் நீளமானதாகும் என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஸ்லெம்பின் கருப்பையில் புற்றுநோய் வந்திருப்பது முதலில் 2012 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. அது மீண்டும் வந்து, நுரையீரலுக்கும் பரவிய பிறகு, ஸ்லெம்ப் கீமோதெரப்பி எனப்படும் ரசாயன சிகிச்சை எடுத்து வருகிறார்.

 

வியாழக்கிழமை, 04 மே 2017 00:00

ஆப்பிள் ‘ஐ’ போன் விற்பனையில் சரிவு

Written by

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களில் குறைவான ஃபோன்களை யே ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக அதன் சமீபத்திய முடிவுகளில் தெரிவித்துள்ளது.

கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் இந்த ஆண்டில் புதிய ஐஃபோன் மாடல் ஒன்றை வெளியிட உள்ளது.

மூன்று மாதத்தில் 50.8 மில்லியன் ஐஃபோன்களை விற்பனை செய்தததாகவும், அது கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது 1% குறைவானது என்றும் ஆப்பிள் தெரிவித்துள்ளது.

அடுத்த ஐ ஃபோனுக்காக வாடிக்கையாளர்கள் காத்திருப்பதால் அந்த காத்திருப்பு நேரத்தை காரணமாக சுட்டிக்காட்டினார் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக்.

நல்ல சிறந்த முடிவுகளை எதிர்ப்பார்த்து காத்திருந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் முன்னர் ஓர் உச்சத்தை தொட்ட நிலையில், வர்த்தகம் தொடங்கிய சிலமணி நேரங்கள் கழித்து பங்குகளின் விலை சுமார் 2 சதவீதம் சரிந்தன.

வல்லுநர்கள் கணித்திருந்த வருவாயைக் காட்டிலும் சற்று குறைவாக 4.6 சதவீத உயர்வுடன் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 52.9 பில்லியன் டாலர்களை வருவாயாக காட்டியது.

ஆப்பிள் பே, ஐகிளவுட் மற்றும் ஐஃபோன் ஆப் ஸ்டோர் உள்ளிட்ட சேவைகளால் ஐஃபோன் விற்பனையில் சரிவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

ஐஃபோன் ஆப் ஸ்டோர் விற்பனை 18 சதவிதம் அதிகரித்து 7 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஆப்பிள் வாட்ச், ஏர் பாட்ஸ் மற்றும் பீட்ஸ் இயர்ஃபோன்கள் விற்பனை உயர்ந்திருப்பதை டிம் குக் சுட்டிக்காட்டினார்.

ஐ ஃபோன்களின் விற்பனை குறைந்தாலும், ஐ ஃபோன்கள் மூலம் ஈட்டிய வருவாய் 1 சதவீதம் அதிகரித்து 33.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

கோகுலம் சிட்ஸ் நிறுவனத்தில் நடந்த வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக, 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, அபராத வரி வசூலிக்க, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: கோகுலம் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்த போது, ஏதோ தவறு நடப்பது தெரிய வந்தது.

அதனால், எட்டு மாதங்களாக, அதன் உரிமையாளர்களின் நடவடிக்கை மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகளை கண்காணித்தோம். அதன் உரிமையாளர் கோபாலன், 72 வயதிலும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று மாநிலங்களில் உள்ள, 400 கிளைகளை நேரடியாக சென்று ஆய்வு செய்வதை பார்த்து, ஆச்சரியம் அடைந்தோம்.

எனினும், தீவிர விசாரணைக்குப் பின், மாதாந்திர சீட்டுப் பணம் பற்றிய உண்மையான தொகையை, பல ஆண்டுகளாக, கணக்கில் காட்டாதது தெரிய வந்தது. மேலும், பல திரைப்படங்களை எடுத்துள்ளனர். தற்போதும், ஒரு திரைப்படத்தை தயாரிக்கின்றனர். ஆனால், திரைத்துறை கணக்கு வழக்குகளை முறையாக பராமரித்து வருகின்றனர்.

அவர்களது மருத்துவக் கல்லுாரியில், நன்கொடை பெற்றது தொடர்பான கோப்புகளை, கேரள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். அதன்பின், விசாரணை துவங்கும். இதுவரை, 1,107 கோடி ரூபாய், வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதில், அவர்கள் செலுத்த வேண்டிய வரியை, கணக்கிட்டு வருகிறோம். அது, 500 கோடி ரூபாயை உறுதியாக தாண்டும். அதை செலுத்த, அவர்கள் ஒப்புக்கொண்டு உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத அளவிற்கு அதிரடியாக உயர்ந்துள்ளதன.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் முதல் முறையாக 30,000 புள்ளிகளை கடந்த புதிய சாதனை படைத்துள்ளது. சென்செக்ஸ் 30,030.80 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 9328.75 புள்ளிகளாகவும் உள்ளன.

இதற்கு முன் 2015 ம் ஆண்டு மார்ச் 4 ம் தேதி 30,024 புள்ளிகளை தொட்டதே சென்செக்சின் அதிகபட்ச சாதனையாக கருதப்பட்டது. தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இருப்பினும் பிரான்ஸ் தேர்தலின் முதல் சுற்றில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளதன் காரணமாக வால் ஸ்ட்ரீட் 3வது நாளாக தொடர்ந்து உச்சத்தை எட்டி உள்ளது.

சர்வதேச பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள அதிரடி உயர்வு மற்றும் டில்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ. அதிரடி முன்னிலையில் இருந்து வருவதாலும் இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை எட்டி உள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கோகுலம் சிட் பைனான்ஸ் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம், பெங்களூரு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் கோகுலம் சிட் பைனாஸ் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 78 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

சோதனையில் 500 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் கோடம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட 36 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. கோகுலம் நிறுவன உரிமையாளர் கோபாலன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகாரை தொடர்ந்து இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கேரளா, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடப்பதாக தகவல்கள் தெரவிக்கின்றன.

கடந்த சில காலங்களாக தங்கத்தின் விலை ஏறுவதும் இறந்குவதும்மாகத்தான் இருந்துகொண்டு வருகிறது. இன்று

22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.232 உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.22,352க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.29 உயர்ந்து ரூ.2,794க்கு விற்பனை செய்யப்படுகிறது. வௌளி கிராமுக்கு 50 காசு உயர்ந்து ரூ45.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பக்கம் 7 / 22
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…