JoomlaLock.com All4Share.net

Background Video

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2016 00:00

சென்செக்ஸ் 138 புள்ளிகள் உயர்வு !

Written by

இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 138 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு 478.85 புள்ளிகளாக குறைந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 138.46 புள்ளிகள் உயர்ந்து 28,432.74 புள்ளிகளாக உள்ளது. ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் சுகாதாரம் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 0.92% வரை அதிகரித்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 45.45 புள்ளிகள் அதிகரித்து 8,768.50 புள்ளிகளாக உள்ளது. :-மதன்குமார்.

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2016 00:00

சென்செக்ஸ் 149 புள்ளிகள் சரிவு !

Written by

இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 149 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 265.7 புள்ளிகளாக குறைந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 149.22 புள்ளிகள் சரிந்து 28,519 புள்ளிகளாக உள்ளது. வங்கி, ரியல் எஸ்டேட் மற்றும் ஆட்டோ போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 0.94% குறைந்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 42.10 புள்ளிகள் குறைந்து 8,789.45 புள்ளிகளாக உள்ளது. :-மதன்குமார்.

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2016 00:00

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு !

Written by

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, வர்த்தக நேர துவக்கத்தின் போது இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து காணப்படுகிறது. சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் சரிவடைந்து, 66.75 ஆக இருந்தது. முன்னதாக கடந்த வார வர்த்தக நேர இறுதியில் ரூபாயின் மதிப்பு 66.65 ஆக இருந்தது. :-மதன்குமார்.

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2016 00:00

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு !

Written by

சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்ததை அடுத்து இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து 66.73 ஆக இருந்தது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாயின் மதிப்பு 66.66 ஆக இருந்தது. இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளதும் ரூபாயின் மதிப்பு சரிவடைந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. :-மதன்குமார்.

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2016 00:00

சென்செக்ஸ் 58 புள்ளிகள் சரிவு !

Written by

இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 58 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 265.71 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 58.20 புள்ளிகள் சரிந்து 28,714.93 புள்ளிகளாக உள்ளது. வங்கி, தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், மின்சாரம் மற்றும் எப்எம்சிஜி போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 1.99% குறைந்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 14.70 புள்ளிகள் குறைந்து 8,852.75 புள்ளிகளாக உள்ளது. :-மதன்குமார்.

கூகுள் அலோ, கூகுளின் புது ஆண்ட்ராய்டு சேவை. கூகுளில் உள்ள எல்லா சேவைகளையும் இணைத்து, இந்த அலோ மெசெஞ்சரை உருவாக்கியுள்ளது கூகுள் நிறுவனம்.

கூகுள் அலோ: வாட்ஸ் அப் போலவே போன் நம்பர் கொடுத்துதான் 'அலோ' வைப் பயன்படுத்த முடியும். அத்துடன் கூகுள் அக்கவுன்ட் மற்றும் பெயரைக் கொடுத்து அலோவைப் பயன்படுத்தத் துவங்கலாம்.

இரு நம்பர்களை ஒரே அக்கவுன்ட்டில் பயன்படுத்த முடியாது. அதே போல், அக்கவுன்ட்டை வெவ்வேறு இரண்டு போன்களில் பயன்படுத்தவும் முடியாது. கூகுள் அலோ இதில் என்ன புதிது?? இது மெசேஜிங் ஆப் என்பதால், மற்றவைகளில் இருப்பது போன்ற வாய்ஸ் மெசேஜ், ஸ்டிக்கர்ஸ், இமேஜ், வீடியோ என எல்லா வசதிகளும்இருக்கின்றன.

Image result for what's app Vs  jio allo images

ஆனால் வாட்ஸ் அப் போன்ற வாய்ஸ் காலிங் வசதி இதில் இல்லை. டாக்குமென்ட்களையும் இதில் அனுப்ப முடியாது. இதில் வரும் மெசேஜ்களுக்கு ஆப்பைத் திறக்காமலேயே பதிலளிக்க முடியும். பதிலளிக்க விருப்பம் இல்லையென்றாலும், மெசேஜில் இருக்கும் கருத்தை வைத்து ஆராய்ந்து, ரிப்ளை செய்வதற்கான பரிந்துரைகளையும் அலோ வழங்குகிறது.

அதனை செலெக்ட் செய்தால் போதும். அதுவே ரிப்ளை செய்துவிடும். இதனால் மெசேஜை படித்து ரிப்ளை செய்ய டைப் செய்ய தேவையில்லை.

இதன் ஹைலைட்: அலோவின் ஹைலைட் கூகுள் அசிஸ்டன்ட்தான். ஹைக்கில் இருக்கும் நடாஷா போலவே, விர்ச்சுவல் அசிஸ்டன்ட் வாயிலாக இயங்கும் இந்த கூகுள் அசிஸ்டன்ட்தான் அலோவை, மற்ற மெசேஜிங் ஆப்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

இந்த விர்ச்சுவல் அசிஸ்டன்ட் மூலம், அலோ ஆப்பிற்குள்ளேயே, பிரவுசரை திறக்காமல் விக்கிபீடியா பயன்படுத்த முடியும். காலண்டர், மெயில், அலாரம் என பல விஷயங்களை இந்த அசிஸ்டன்ட் மூலமாகவே செயல்படுத்திக் கொள்ள முடியும். வாட்ஸ்அப் போல, இது முழு என்கிரிப்ட் செய்யப்பட்டது கிடையாது.

ஆனால், அதே சமயம் Incognito mode-ல் சாட் செய்வதன் மூலமாக, மெசேஜ்களை என்கிரிப்ட் செய்துகொள்ள முடியும். சாட் செய்யும் மெசேஜ்களை குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பு டெலிட் செய்துவிடலாம். 5 விநாடிகள் முதல் ஒருவாரம் வரை இதற்கு டைம் செட் செய்து கொள்ளலாம்.

அதன்பின்பு நமது உரையாடல்கள் அழிந்துவிடும். அதே போல, அலோ ஆப் பயன்படுத்துபவர்களிடம் மட்டுமே நாம் சாட் செய்ய முடியும். ஒருவேளை அலோ இன்ஸ்டால் செய்யாத நபருக்கு, நீங்கள் அலோ மூலம் மெசேஜ் அனுப்பினால், அது போனுக்கு எஸ்எம்எஸ் ஆக சென்று விடும்.

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2016 00:00

தங்கம் விலை உயர்வு !!

Written by

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது. அதே போன்று பார்வெள்ளி விலையும் ரூ.740 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2983 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31,900 ஆகவும் உள்ளன. ஒரு சவரன் தங்கம் ரூ.23,864 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 80 காசுகள் உயர்ந்து ரூ.50.90 ஆகவும், பார்வெள்ளி விலை ரூ.740 உயர்ந்து ரூ.47,590 ஆகவும் உள்ளது.

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2016 00:00

சென்செக்ஸ் 365 புள்ளிகள் உயர்வு !

Written by

இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 365 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு 111.30 புள்ளிகளாக குறைந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 364.80 புள்ளிகள் உயர்ந்து 28,871.92 புள்ளிகளாக உள்ளது.தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 108.65 புள்ளிகள் அதிகரித்து 8,885.80 புள்ளிகளாக உள்ளது. :-மதன்குமார்.

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2016 00:00

இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு !!

Written by

சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் வெளிநாட்டு நிதிகளின் வருகை அதிகரித்ததை தொடர்ந்து வங்கிகளும், ஏற்றுமதியாளர்களும் அமெரிக்க கரன்சியை அதிகம் விற்றனர். இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு அதிரடியாக ஒரே நாளில் 18 காசுகள் உயர்ந்தது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.84 ஆக இருந்தது. இந்திய பங்குச்சந்தைகளும் அதிரடி உயர்வுடன் துவங்கி உள்ளன. சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதற்கு இதுவும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

திங்கட்கிழமை, 19 செப்டம்பர் 2016 00:00

தங்கம் விலை உயர்வு !

Written by

22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.23640-க்கு விற்கப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.2955-க்கு விற்கப்படுகிறது.24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.3160-க்கு விற்கப்படுகிறது.மேலும் வெள்ளி கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூ.49.30க்கு விற்கப்படுகிறது.வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.740 உயர்ந்து ரூ.46110-க்கு விற்கப்படுகிறது.

பக்கம் 8 / 19
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…