JoomlaLock.com All4Share.net

Background Video

கடந்த 76 ஆண்டுகளாக ஒலிபரப்பாகி வந்த பிபிசி தமிழோசை சிற்றலையின் கடைசி ஒலிபரப்பு இந்திய , இலங்கை நேரப்படி சரியாக இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.15 மணிக்கு துவங்கும். இன்றைய ஒலிபரப்பு சிறப்பு ஒலிபரப்பாக அரைமணிநேரம் ஒலிக்கும்.

பிபிசி தமிழோசையின் சிற்றலை வானொலி ஒலிபரப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்படுகிறது.

கடந்த 76 ஆண்டுகளாக ஒலிபரப்பாகி வந்த பிபிசி தமிழோசையின் சிற்றலையின் கடைசி ஒலிபரப்பு இந்திய, இலங்கை நேரப்படி சரியாக இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.15 மணிக்கு துவங்கும். இன்றைய ஒலிபரப்பு சிறப்பு ஒலிபரப்பாக அரைமணிநேரம் ஒலிக்கும்.

கடந்த 1941-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிபிசி தமிழோசை வானொலிச் சேவையின் சிற்றலை ஒலிபரப்பு, இந்த ஆண்டுடன் 76 ஆண்டுகளை தொடுகிறது.

சிற்றலை என்ற தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்படும் வானொலிச் சேவைகள், இந்தியா மற்றும் இலங்கையில் தொலைக்காட்சி, இணையம் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கத்தால் ஆதரவை இழந்து வருவதே தமிழோசையின் ஒலிபரப்பு நிறுத்தப்படுவதற்கான காரணமாகும்.

ஆனால், தற்போது இலங்கையின் சக்தி எஃப் எம் மூலம் நடத்தப்பட்டு வரும் பிபிசி தமிழின் ஐந்து நிமிட பண்பலை ஒலிபரப்பு தொடரும்; அதில் எந்த மாற்றங்களும் இல்லை.

பிபிசி தமிழோசையின் கடந்த கால வரலாற்றைத் திரும்பப் பார்க்கும் சிறப்புப் பெட்டகம் மற்றும் தமிழோசையின் முன்னாள் ஒலிபரப்பாளர்களின் கருத்துகளடங்கிய இந்த ஒலிபரப்பைக் கேட்கத் தவறாதீர்கள்

இலங்கையில் சிவசேனை அமைப்பு தொடங்கி இருப்பதை, முள்ளிவாய்க்கால் பிரச்சினைக்கு பிறகு அங்கு வாழ்கின்ற மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், இந்தியாவில் உள்ள பி.ஜே.பியினரின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சியாக தான் பார்ப்பதாகவும், ஆனால் தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் சிவசேனை என்ற அமைப்பு தொடங்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு கூறினார். ''விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கூட தமிழ் அடையாளத்தை முன்வைத்து போராட்டம் நடத்தினாரே தவிர இந்து மதத்தை முன்வைத்து அல்ல '' என்று அவர் கூறினார்.

 

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனக் கோரி காணாமல் போனோரின் உறவினர்கள் உள்ளிட்ட பெருமளவிலான மக்கள் வீதிகளில் திரண்டு நின்று குரல் எழுப்பினார்கள்.

கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்தவுடன் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. செயலாளர் நாயகம் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் செய்து கொண்ட உடன்பாட்டின்படி போர்க்குற்றச் செயல்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டி, புதிய ஆட்சியிலாவது தங்களுக்கு விமோசனம் கிடைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.

ஐ.நா. செயலாளருடைய யாழ் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. வீதியில் திரண்டிருந்த தங்களை பான் கி மூன் அவர்கள் சந்திப்பார் என்று எதிர்பார்த்திருந்த போதிலும் அது நிறைவேறவில்லை.

Image result for ban ki moon visits sri lankan tamil area photos

 

எனினும் அவருடைய சார்பிலான அதிகாரி ஒருவர் மக்களிடமிருந்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களைப் பெற்றுக் கொண்டார்.

இலங்கை அரசாங்கம் அனுசரணை வழங்கிய ஐ.நா பிரேரணையின்படி சர்வதேச நீதிபதிகள் விசாரணையாளர்களை உள்ளடக்கிய ஒரு பொறிமுறையை உருவாக்கி விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தை ஐ.நா சம்மதிக்க வைக்க வேண்டும்.

அதன் ஊடாகத்தான் நல்லிணக்கம் உருவாக முடியும் என்பதை ஐ.நா செயலாருக்கு உணர்த்துவதற்காகவே மக்கள் வீதிகளில் திரண்டிருந்தார்கள் என்றார் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம்.

பல வருடங்களாக இடம்பெயர்ந்துள்ள வலிகாமம் வடக்கு பிரதேச மக்கள் வசிக்கும் முகாமிற்கும் பான் கி மூன் விஜயம் செய்து அவர்களின் நிலைமைகளை நேரில் கண்டறிந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளரும், அக்கட்சியின் M.P ஆன சுமந்திரனுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் மந்திரி விஜயகலா  மகேஸ்வரியும் இணைந்து செய்த சதிசெயலால் பாதிக்க பட்டது தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகான உறுப்பினர் அனந்தி சசிதரன்,ஈழ போரில் பதிக்க பட்ட பெண்களுக்காக தொடர்ந்து போராடி வரும் அனந்தி சசிதரனுக்கு நேர்ந்த கொடுமை இது, மேலும் 2 ஆண்டுகள் பதவிகாலம் இருந்தும் அவரை பொறுப்பில் இருந்து நீக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விடுதலை புலிகள் இயக்கத்தின் துணைத்தலைவராக பணியாற்றி வந்த மாத்தையா இந்திய உளவு அமைப்பான ரா உளவாளி என புத்தகம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

ராஜிவ் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் அவரிடம் பேட்டியெடுத்த நீனா கோபால் என்பவர் எழுதியுள்ள புத்தகத்தில், கோபால்சுவாமி மகேந்திரராஜா என்ற மத்தையா என்பவர் ரா உளவாளியாக செயல்பட்டு வந்தார். பிரபாகரனுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்த அவரை நன்கு பயிற்றுவித்தது ரா அமைப்பு தான்.

அவர் விடுதலை புலிகளின் மிகவும் அசைக்க முடியாதவராக மாறி, கலகம் மூலம், விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து பிரபாகரன் நீக்கப்பட்டு, அந்த பதவியை ஏற்க மாத்தையாவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதனை அறிந்த விடுதலை புலிகள் அமைப்பு, மாத்தையாவை கொன்று விட்டதாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் குழந்தை பருவ நண்பரான கிட்டு பயணித்த கப்பல் விபத்தில் சாக மாத்தையா தான் காரணம் எனவும், அவர் ரா அமைப்புக்கு ரகசிய தகவல் அளித்ததாகவும் அந்த அமைப்பு சந்தேகப்பட்டது.

மேலும் அந்த புத்தகத்தில், ரா உளவாளி என கண்டுபிடிக்கப்பட்ட மாத்தையா தனி சிறையில் அடைக்கப்பட்டு, பல வாரங்கள் சித்ரவதை செய்யப்பட்டு, கடைசியில் 1994ம் வருடம் டிசம்பர் மாதம் கொல்லப்பட்டார். அவரது ஆதரவாளர்களாக இருந்த 257 பேரும் கொல்லப்பட்டு தீயில் போடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ராஜிவை விடுதலை புலிகள் கொன்ற பிறகு, தாம் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த ரா அமைப்பு, வி டுதலை புலிகள் அமைப்பின் தலைமையை மாற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டது.

ஈழப்போரின் கடைசி கட்டத்தில் பிரபாகரன் சரணடைவார் என ரா வட்டாரங்கள் எதிர்பார்த்தன. அப்போது தான் இலங்கை அரசின் விருப்பப்படி இல்லாமல் சர்வதேச அமைப்பிடம் ஒப்படைக்கப்படுவோம் என பிரபாகரன் எதிர்பார்த்தார் என ரா கருதியதாகவும் அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்திய ராணுவம் செயல்படுவது, விடுதலை புலிகள் ராஜிவுக்கு எதிராக திரும்பும் என்பதை ரா அமைப்பு கணிக்க தவறி விட்டது என கூறியுள்ள நீனா கோபால், இந்த விவகாரத்தில் நம்மீதுதவறு உள்ளது.

கணிப்பதில் நாம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டோம். பிரபாகரனை தவறாக கணித்து விட்டோம்,. நமக்கு எதிராக இவ்வாறு அவர் திரும்புவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. நாம் ராஜிவை பாதுகாக்க தவறிவிட்டோம் என ரா அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறைகள் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனை செயலணி இன்று ஆரம்பமானது.

செயலணி, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

இந்த நிகழ்வில் பொதுமக்கள் தமது ஆழமான கருத்துக்களை மிக ஆர்வமாக முன்வைக்கின்றனர். காணாமல் போனோர் தொடர்பாக, ஊனமுற்றோர்களுக்கு உதவித்திட்டம், பெண்களுக்கு பாதுகாப்பு, பொலிஸ்பிரிவை மாற்றி அமைத்தல், காணி பிணக்குகளை இலகுவாக தீர்த்தல், தண்டனை சட்டங்களை மாற்றி கூடுதலான தண்டனையை விரைவாக வழங்குதல், மனிதஉரிமைகள் மீறுதல், உண்மை நீதியை கண்டறிய விசேட நீதிமன்றம் அமைத்தல், தமிழ் மக்களின் உரிமைகளை வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் யுத்தம் ஏற்படாமல் தடுத்தல், சீரான கல்வி வழங்குதல், இளைய சமுகத்தை சீராக்குதல், போன்ற பல்வேறு விடயங்களை இதுவரை பொதுமக்கள் தமது கருத்துக்களாக முன்வைத்துள்ளனர்.

குறித்த பொறிமுறை மனோரி முத்தெட்டுகம தலைமையிலான விசேட செயலணி நடத்துகின்றது.

கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் சிரேஷ்ட சட்டத்தரணி மனோரி முத்தெட்டுகம தலைமையில் 11 பேரைக் கொண்ட செயலணி பொதுமக்களிடம் கருத்துக்களை அறிந்து வருகின்றது.

இதற்கமைய கடந்த வாரம் முதல் இந்த கருத்தறியும் செயற்றிட்டம் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண பாடசாலைகளில் நிரந்தர நியமனம் வழங்கப்படாத தொண்டர் ஆசிரியர்கள் தமது நிரந்தர நியமனத்தைகோரி இன்று இரண்டாவது நாளாக தமது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆளுநர் அலுவலகம் முன்பாக முன்னெடுத்துள்ளனர்.

இதில் கலந்து கொண்டுள்ள ஆசிரியர்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதோடு, வாய் திறந்து பேசுவதற்குக் கூட இயலாமல் உள்ளனர்.

நேற்றிலிருந்து இவர்கள் முற்றுமுழுதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண் ஆசிரியர்கள் தமது குழந்தைகளுடன் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் குறித்த ஆசிரியர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

இதில், “நீங்கள் இரண்டு நாட்களாக முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வடமாகாண முதலமைச்சரோ, வடமாகாண சபை உறுப்பினர்களோ, மற்றும் வடமாகாண கல்வியமைச்சரோ யாரும் வந்து பார்வையிடவும் இல்லை, உங்களுக்கான ஒரு தீர்வையும் தரவில்லை, ஆனால் நாம் உங்களுடைய நிலை பற்றி ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்” எனக் கூறினார்.

மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் பெயர் விபரங்களை ஆளுநர் கோரியுள்ளதாகவும், இன்று மாலை வாமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரேவை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிய இளங்கோவன், இந்த வாய்ப்பை தவற விட்டால் உங்களுடைய பிரச்சினையை நாமும் கைவிட்டு விடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஆசிரியர்கள்,

“எங்களுடைய வாக்குகளைப் பெற்று அமைச்சர்களானவர்களும், வடமாகாண சபை உறுப்பினர்களும் மற்றும் வடமாகாண முதலமைச்சரும் வருகைத் தந்து எம்மை பார்வையிடாதது பெரும் கவலையளிக்கின்றது, நாம் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கின்றோம்.

இந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்துள்ள எமக்கு ஒரு தீர்வைப் பெற்றுத் தராதது வெந்த புன்னில் வேலைப் பாய்ச்சுவதைப் போன்றது” எனவும் தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்தார்கள்.

கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லொறி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

நாவிதன் வெளி 15ம் கொலனியில் தயாபரன் கெமிக்கல் ஸ்ரோர் உரிமையாளரின் லொறிஇன்று அதிகாலை 3.30 மணியளவில் எரியூட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெரியவருவதாவது.

வழமைபோன்று தொழிலை முடித்துவிட்டு அவரது கடைக்கு முன்னால் லொறியைநிறுத்திவிட்டு நித்திரைக்கு சென்றதாகவும் பின்னர் 3.30 மணியளவில் லொறிஎரிந்து கொண்டிருந்ததாகவும் பின்னர் அயலவர்களின் உதவியுடன் தீயை ஓரளவுகட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடிந்ததாகவும் வாகனத்தின் முன்பகுதி முற்றுமுழுதாக எரிந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

எரியூட்டப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் கிழக்கு மாகாணசபை உறுப்பினரின்சகோதரனுடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைசவளக்கடை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் ஒன்ராரியோ மாநிலத்தில் பிராம்டன் நகரில் வருடாந்தம் நடைபெறும் கரபிறாம் பல்காலச்சார விழாவில் 4வது தொடர் வருடமாக கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்தவப்படுத்தி பிரமாண்டமாய் இவ்வருடமும் அமைந்த ஈழம் சாவடி பல சிறப்புக்களை கொண்டதாக இவ்வாண்டு அமைந்தது.

ஈழம்சாவடி பெற்ற வருமானத்தில் ஒருபெரும் பகுதியை தாயக உறவுகளின் புனர்நிர்மாணப் பணிக்காக வழங்கவுள்ளதாக ஈழம்சாவடியின் அமைப்பாளர்களான பிராம்டன் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளமை கனடியத் தமிழ் மக்களுக்கு பெருமகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது.

இவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி கனடாவில் நிகழ்ச்சிகளை நடாத்தும் ஏனைய தமிழர்களும் தாய கஉறவுகளுக்கு கரம் கொடுக்க முன்வர வேண்டும் என்ற வேண்டுதலை மக்கள் பலரும் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை அதிஸ்ட லாபச்சீட்டு ஒன்றை நடாத்தி அதில் பெறப்பட்ட பணத்தை பிராம்டனில் உள்ள ஒரே ஒரு வைத்தியசாலையின் அபிவிருத்திப்பணிக்கு வழங்கி ஒரு முன்மாதிரியான சமூகமாக தமிழர் சமூகத்தை தமது பிராம்டன் நகரில் மிளிர வைத்துள்ளனர்.

கலைநிகழ்வுகளினூடாக இளையவர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தது மட்டுமன்றி அவர்களை கௌரவிக்கவும் தவறவில்லை. வளரும் கலைஞர் சுப்பர் சிங்கர் புகழ் நிருஞன் அம்பிகா நகைமாடத்தினால் தங்கப்பதக்கம் வழங்கி ஈழம்சாவடி நிகழ்வில் கௌரவிக்கப்பட்டமை இங்கு நினைவில் கொள்ளத்தக்கது. 

 

தமிழர் தாயக வரலாற்றை சித்தரிக்கும் பல நிகழ்வுகள் இம்முறை ஏனைய சமூகங்களுக்கு வரலாற்றுபாடமாக நிகழ்த்தப்பட்டன. தமிழர் இனவழிப்பு விடயங்கள் முதன்மைப்படுத்தப்பட்டன. அவ்வாறான ஒரு நிகழ்வைப் பார்த்துவிட்டு முக்கிய பெண்மணி ஒருவர் தனது ருவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு செய்தி பரிமாறியிருந்தார்.

@Carabram: Eelam tells the story of the tamil genocide through dance at #carabram2016

உணவுச்சாவடிகள், மலிவுவிலை வர்த்தகச் சாவடிகள், தமிழர் பாரம்பரிய கண்காட்சி, தமிழர் கலைநிகழ்வுகள் என ஈழம்சாவடி ஒவ்வொரு நாளும் அனைத்து இன மக்களுக்கும் பெருவிருந்தாக அமைந்தது.

வெள்ளி மற்றும் சனி மாலை இறுதி நிகழ்வாக அரவிந்தனின் மெகாரியூனர்ஸ் இன்னிசை நிகழ்வும் ஞாயிறு மாலை இறுதி நிகழ்வாக பாரதி கலைக்கூடத்தின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறறன.

பிராம்டனில் Sandalwood Pkwy / Dixie Road சந்திப்புக்கு அருகாமையில் 1495 Sandalwood Pkwy East இல் உள்ள Brampton Soccer Centre இல் பிரமாண்ட அரங்கில் ஈழம் சாவடி அமைந்தது.

ஈழம்சாவடிக்கு அமைச்சர்கள், மத்திய, மாநில மற்றும் நகரப் பிரதிநிதிகள் பலரும் வருகைதந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வுக்கு லங்காசிறி ஊடக அனுசரனை வழங்கியது. உங்களுடைய படைப்புகளுக்கும் ஊடக அனுசரணை வேண்டும் என்றால் இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.

அரநாயக்க பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் ஒருவர் சட்டவிரோதமான மதுபான போத்தல்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அரநாயக்க பொல்அம்பேகொட பிரதேசத்தில் உள்ள வீட்டில் வைத்து முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலக்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

பக்கம் 1 / 6
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…