JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று கோவிலுக்குள் பிரவேசிக்க முயன்ற இரு பெண்களை சன்னிதானம் பகுதியில் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டது.
 
10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்வதை அனுமதிக்கமாட்டோம் என்று பக்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் இப்போராட்டத்திற்கு தந்திரி தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
தலைமை தந்திரி கண்டரரு ராஜீவரு பேசுகையில், ''கோயிலைப் பூட்டி, சாவியை ஒப்படைத்து விட்டுச் செல்ல முடிவு செய்துள்ளோம். அய்யப்ப பக்தர்களுக்கு ஆதரவாக இருப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை'' என்று தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018 00:00

தேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு

சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில்   உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில்  தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டார்.   

கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு  செய்யப்பட்டு உள்ளார். தேமுதிகவில் இதுவரை எந்த பொறுப்பும் வகிக்காத நிலையில் பொருளாளராக பிரேமலதா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 

 ரபேல் ஒப்பந்தம் விபரங்கள் தொடர்பாக அவதுாறு செய்திகளை ஒளிபரப்பியதாக ரூ.10,000 கோடி கேட்டு என்டி டிவி மீது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் சார்பில் ஆமதாபாத் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது.

என்டி டிவி.,யில் செப்.,29 அன்று வாராந்திர விவாத நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க வரும்படி ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் மறுத்து விட்டனர். இந்த நிகழ்ச்சியில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் அனில் அம்பானியில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதில் கையாளப்பட்ட விவகாரங்கள் குறித்தும், இந்தியா மட்டுமின்றி பிரான்ஸ் அரசு கோரிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதில் இடம்பெற்ற விவரங்கள் குறித்து அப்போதைய பிரான்ஸ் அதிபராக இருந்த பிரான்கோயிஸ் ஹோலண்டேவும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாகவும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது குறித்தும் அவதூறு கருத்துக்கள் இடம்பெற்றதாக கூறி என்டி டிவி மீது மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்களை என்டி டிவி நிர்வாகம் மறுத்துள்ளது. இந்த அவதூறு வழக்கு அக்.,26 அன்று விசாரணைக்கு வர உள்ளது.

 

 

 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற 2 பெண்கள் நேற்று நிலக்கல் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்து பெண் பத்திரிக்கையாளர்கள் 5 பேர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். இதனால் அவர்களை தடுக்க போலீசார் நடத்திய தடியடியை தொடர்ந்து தொடர்ந்து கல்வீச்சு சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் பம்பை, நிலக்கல், சன்னிதானம் உள்ளிட்ட 4 பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

அனைத்து வயது பெண்களை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து இன்றும் (அக்.,18) கேரளாவில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழக - கேரள பஸ்கள் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் சுஹாசினி ராஜ் இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்றார். அவர் பம்பையை கடந்த நிலையில், பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் பாதையில் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டார்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி நீர்திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 13,000 கனஅடியில் இருந்து 25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவும் 12,000 கனஅடியில் இருந்து 27,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 10,042 கனஅடியில் இருந்து 23,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 103.37 அடியாகவும், நீர்இருப்பு 69.27 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்த டெல்டா பாசனத்திற்காக 13,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

பக்கம் 1 / 2218
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…