JoomlaLock.com All4Share.net

Background Video

இலங்கை

இலங்கை (315)

இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று காலை மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 

இதில் 359 பேர் உயிரிழந்து உள்ளனர். 500 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இந்த சம்பவத்தை நிகழ்த்திய 9 பேரின் புகைப்படங்களை காவல்துறை இன்று வெளியிட்டது. இதில் 3 பெண்கள் உள்பட 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் பெற்றுள்ளன. 

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2019 00:00

இலங்கை குண்டுவெடிப்பு: 100 பேர் கைது

Written by

 இலங்கை குண்டுவெடிப்புகள் தொடர்பாக இதுவரை 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் 9 பேர் என்றும் அவர்களில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அமைச்சர் ருவான் விஜேரத்னே கூறினார்.

இலங்கையில் ஏப்.,21 ம் தேதியன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

இந்நிலையில் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட லாரி ஒன்று கொழும்பு நகருக்குள் நுழைந்துள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கொழும்பு நகர் முழுவதும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக இன்று (ஏப்.,24) கொழும்புவின் வெள்ளவத்தை பகுதியில் உள்ள சவாய் தியேட்டர் அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருந்து மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் வண்டியின் பெட்டியை திறக்க முடியாததால் சிறு குண்டு வைத்து வண்டியை தகர்த்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவான் விஜேவர்தனே செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்னும் 2 நாட்களில் இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் உறுதிப்படுத்தப்படும். இரண்டு குழுக்களாக பிரிந்து பயங்கரவாத அமைப்பினர் செயல்படுவது தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலில் பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவின் தலைவன், மனித வெடிகுண்டாக மாறி உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. 

தாக்குதலில் ஈடுபட்ட மொத்தம் 9 பயங்கரவாதிகளில் ஒரு பெண் உள்பட 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மொத்தம் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் அடையாளத்தை இப்போது வெளியிட முடியாது. விசாரணையை பாதிக்கும் என்பதால் பயங்கரவாதிகளின் பெயர் உள்ளிட்ட விபரங்களை வெளியிட முடியாது. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 39 பேர் வெளிநாட்டினர். இவர்களில் 17 வெளிநாட்டினரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் 3 தேவாலயங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 150 க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. 100 க்கும் மேற்பட்டோர் பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 156 பேர் பலியானதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Image result for 156 dead in bomb blasts in sri lanka images photos

கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு இலங்கையில் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்து வருகிறது. இந்நிலையில் கொச்சிக்கடை செயின்ட் அந்தோணியார் , நீர்க்கொழும்பு கத்துவாபட்டியா செபஸ்டியான் ஆலயம் , பட்டிகோலாவில் உள்ள சீயோன் ஆலயம் ஆகிய 3 ஆலயங்களில் பிரார்த்தனையின் போது பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது.

இதில் பலர் ரத்த காயங்களுடன் விழுந்தனர். சம்பவம் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் ஆலயங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

இந்த தாக்குதலில் எந்த பயங்கரவாத அமைப்பினர் என்பது குறித்து இதுவரை அறியப்படவில்லை. மேலும் பிரபல நட்சத்திர ஓட்டல்களான சங்ரிலா, சின்னமோன்கிராண்ட், கிங்ஸ்புரி போன்ற ஓட்டல்களிலும் குண்டு வெடித்துள்ளது. இந்த ஓட்டல்கள் இந்தியர்கள் அதிகம் தங்கும் நட்சத்திர ஒட்டல் ஆகும்.

சிறிது காலம் அமைதியாக இருந்த இலங்கையில் தற்போது வன்முறை தலைதூக்கியுள்ளது கவலை அளிப்பதாகும்.

 

 

ஞாயிற்றுக்கிழமை, 23 டிசம்பர் 2018 00:00

இலங்கையில் வெள்ளம்: 45 ஆயிரம் பேர் தவிப்பு

Written by

இலங்கையில் தொடர் கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கிறது. 45 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து வெளியேறியுள்ளனர்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள முல்லைத் தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, யாழ்பாணம் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அந்த ஐந்து மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாங்குளம், இரணைமடு உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.வெள்ளப்பெருக்கால், முல்லைத் தீவுக்குச் செல்லும் முக்கிய சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் 40 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

வெள்ளத்தில் சிக்கியவர்களில், 8 ஆயிரத்து 539 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் 52 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 212 ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள், படகுகள் மூலம் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இலங்கை பிரதமர் ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா முடிவு செய்துள்ளார். இலங்கையில் நாளை(டிச.,15) நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு பின்னர் ராஜபக்ச பதவி விலக உள்ளார். அரசின் நிலைத்தன்மையை உறுதிபடுத்த தனது பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக அவரது மகன் நமல் ரசஜபக்ச தெரிவித்தார்.இதற்கிடையே ரணில் விக்ரமசிங்கே நாளை (டிச.16) பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அமைச்சர்கள் நியமனம் குறி்த்து அதிபர் சிறிசேனாவுட்ன் ரணில் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.

 

 

 

இலங்கை உச்சநீதிமன்றம் ராஜபட்சே பிரதமராக செயல்பட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் தேஎதி ரணில் விக்கிரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினார். அத்துடன் பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபட்சேவை நியமித்தார். ஆயினும் ராஜபட்சேவால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் சிறிசேனா இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து புதியதாக தேர்தல் நடத்த உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு தரப்பினர் இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனால் சிறிசேனாவின் உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. மீண்டும் கூடிய பாராளுமன்றத்தில் இருமுறை ராஜபட்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனல் ராஜபட்சே இதுவரை பதவி விலகாமல் இருக்கிறார்.

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் 127 பேர் கொண்ட குழு ராஜபட்சே பிரதமராக தொடரக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த மனுவை விசாரித்த இலங்கை உச்சநீதிமன்றம் ராஜபட்சே பிரதமராக செயல்படக் கூடாது எனவும் அமைச்சரவை கூட்டங்கள் நடத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. வரும் 12 ஆம் தேதி ராஜபட்சே தனது அமைச்சர்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

புதன்கிழமை, 14 நவம்பர் 2018 00:00

ராஜபக்சேவுக்கு எதிரான தீர்மானம் வெற்றி

Written by

இலங்கை பார்லியில் இருந்து ராஜபக்சே வெளிநடப்பு செய்ததை அடுத்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்

கடும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே இலங்கை பார்லிமென்ட் இன்று கூடியது. அப்போது அதிபர் சிறிசேனாவால் புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபக்சே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனையடுத்து கூச்சல், குழப்பம் நிலவியது. ரணில் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து அவையில் பங்கேற்றனர். 

எதிர்க்கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவாக அணி மாறினர்.இதனால் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிராக கூச்சல், குழப்பம் எழுப்பினர். இதனையடுத்து இலங்கை பார்லியை நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்க சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.

ஜனாதிபதி விசேட வர்த்தமானி மூலம் நாடாளுமன்றத்தைக் கலைத்த உத்தரவிற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு விதித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 07ஆம் திகதி வரை இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 13 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஜனாதிபதியின் தீர்மானம் அரசியலமைப்பிற்கு உட்பட்டதெனக் கூறி, 10க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரிக்காது தள்ளுபடி செய்யுமாறு, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இன்று செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றில் கோரினார்.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகிய மூவர் கொண்ட உயர் நீதிமன்ற, நீதியரசர்கள் குழு முன்னிலையில் இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், விசாரணைகள் இன்று செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தன.

அரசியலமைப்பின் பிரகாரமே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தைக் கலைக்க அறிவித்தல் விடுத்ததாக சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் 33ஆவது சரத்தின்படியே, நாடாளுமன்றத்தைக் கலைத்ததாகவும், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இந்த சரத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவித்தார்.

எனவே, அரசியலமைப்பிற்கு உட்பட்ட வகையிலேயே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக சட்டமா அதிபர் தெரிவித்தார்.

இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டபோது நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

அடிப்படை உரிமை மனுக்களை டிசம்பர் 4, 5, 6 ஆம் தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நவம்பர் 9ஆம் தேதி நாடாளுமன்றத்தைக் கலைக்க வர்த்தமானி மூலம் உத்தரவிட்டார்.

இதனையத்து ஜனவரி 05ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றம் ஜனாதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சனிக்கிழமை, 10 நவம்பர் 2018 00:00

இலங்கை பாராளுமன்றம் கலைப்பு

Written by

இலங்கை பார்லிமென்ட் கலைக்கப்பட்டுள்ளதாக அதிபர் சிறிசேன அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதையடுத்து 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி பார்லி. தேர்தல் நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே நீக்கப்பட்டு, மகிந்தா ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றார். இவர் 14ம் தேதி, பார்லிமென்ட்டில் பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் பார்லிமென்ட் கலைக்கப்பட்டுள்ளது.

இலங்கை பார்லிமென்டில், அதிபர் சிறிசேன கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தினாலேயே, பார்லிமென்ட்டை கலைத்துள்ளதாகவும், அங்கு ஜனவரி மாதத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பிருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் பதவி என்ற கனவு, ராஜபக்சேவிற்கு தகர்ந்துள்ளது. சிறிது நாட்களுக்கு முன்னர், தமிழ் செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த மகிந்தா ராஜபக்சே, தான் மீண்டும் அதிபர் ஆவதை காட்டிலும், பிரதமர் ஆவதையே விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார். சொல்லிவைத்தாற்போல, சில நாட்களுக்கு முன், பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே நீக்கப்பட்டு, ராஜபக்சே பிரதமர் பதவியேற்றார். இந்நிலையில், பார்லிமென்ட் கலைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை பார்லி.க்கு 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி தேர்தல் நடக்கும் எனவும் புதிய பார்லி. ஜனவரி 17-ம் தேதி பதவியேற்கும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பக்கம் 1 / 23
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…