JoomlaLock.com All4Share.net

Background Video

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2018 00:00

புலிகளின் கப்பல் இலங்கையில் அழிப்பு Featured

Written by 
Rate this item
(0 votes)

அண்டை நாடான இலங்கையில், விடுதலைப் புலிகள் பயன்படுத்திய கப்பலை, அந்நாட்டு கடற்படையினர் நேற்று கடலில் மூழ்கடித்து அழித்தனர்.

இதுகுறித்து இலங்கை கடற்படை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:இலங்கையின் முன்னாள் அதிபர்களான, ஜெயவர்த்தனே, பிரேமதாசா, சந்திரிகா குமாரதுங்கா மற்றும் ராஜபக்சே ஆகியோர், குண்டு துளைக்காத வாகனங்களை பயன்படுத்தினர்.இந்நிலையில், இந்த வாகனங்களில் இருந்த, தகவல் தொடர்பு சாதனங்களை அகற்றிய பின், ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டு, அந்த வாகனங்களை, கடற்படையினர் அழித்தனர்.

அதேபோல், 30 ஆண்டுகள் நடந்த, உள்நாட்டு போரின்போது, இந்தோனேஷியாவில் இருந்து ஆயுதங்களை எடுத்து வருவதற்கு, விடுதலைப் புலிகள் பயன்படுத்திய கப்பலும், கடற்படையினரால் அழிக்கப்பட்டது.

குண்டு துளைக்காத கார்கள் மற்றும் கப்பலை பொது ஏலத்தில் விற்பனை செய்யும்போது, தவறான நபர்களிடம் செல்வதைத் தடுப்பதற்காக, அவை கடலில் மூழ்கடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read 148 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…