JoomlaLock.com All4Share.net

Background Video

கேந்திரிய வித்யாலயாக்களில் 10ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்கியதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க ஆட்சியில் எல்லா துறைகளிலும் இந்தி திணிப்பு கண்மூடித்தனமாக நடந்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியை கட்டாயமாக்கும் முயற்சிகளை திராவிட இயக்கம் முறியடிக்கும் என்று வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Published in அரசியல்

நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக ஐ.ஐ.டி மெட்ராஸ் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

அதேபோல் தலைசிறந்த பல்கலைக்கழகமாக இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் பெங்களூரு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீரில் ஆசியாவின் மிகநீளான குகை நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்த குகை நெடுஞ்சாலை ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

சுமார் 9.2 கிலோ மீட்டர் தூரமுடைய இந்த நெடுஞ்சாலை, செனானி - நஷ்ரி இடையே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 300 மீட்டர் தூரத்துக்கு ஒரு இடைவெளி பொதுமக்கள் பாதையை கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

ஐந்தரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த அதன் கட்டுமானப் பணி நிறைவடைந்ததை அடுத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நேற்று பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தியுடன் சேர்ந்து அந்த புதிய சுரங்கப்பாதை வழியாக பிரதமர் காரில் பயணித்தார்.

இந்த சுரங்க நெடுஞ்சாலை சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் மூலம் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் செல்வோரின் பயணம் 2 மணி நேரம் குறையும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், நாளொன்றுக்கு 27 லட்சம் ரூபா யும் ஆண்டுக்கு 99 கோடி ரூபாய் வரையும் எரிபொருள் செலவு மிச்சமாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு, உதம்பூர் பகுதியில் இருந்து ரம்பன், பனிஹல், ஸ்ரீநகர் செல்பவர்களுக்கு இந்த சுரங்கப்பாதை வரப்பிரசாதமாக அமையும் என்றும், இந்த சுரங்க நெடுஞ்சாலையில் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை, சிசிடிவி, தீ தடுப்பு சாதனங்கள் உள்பட உலக தரத்திலான நவீன பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக காஷ்மீரில் சுற்றுலா வளர்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக மாநில அரசு கூறி உள்ளது.

 

Published in இந்தியா
புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2016 00:00

மோடி அதிரடி நடவடிக்கை

பா.ஜ., எம்.பி.,க்கள் தங்களின் தொகுதியில் இதுவரை மேற்கொண்ட பணிகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டிருந்தார். ஆனால் பலர் இதுவரை தங்களின் பணிகள் குறித்து அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் அறிக்கை சமர்ப்பிக்காத எம்.பி.,க்களின் பெயர் பட்டியலை தயாரித்து, அவர்கள் உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என மோடி கேட்டுள்ளதாகவும், இது குறித்து சமீபத்தில் நடந்த கட்சி கூட்டத்தின் போது மோடி மிக கடுமையாக கடிந்து கொண்டதாகவும் பா.ஜ., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிக்கை தாக்கல் செய்யாத எம்.பி.,க்கள் உடனடியாக தங்களின் பணி தொடர்பான அறிக்கையை ஆன்லைனில் வெளியிட வேண்டும் என கேட்டுள்ளார்.பா.ஜ., மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றதன் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டத்தின் போது, எம்.பி,க்கள் தாங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்த விபரங்களை மக்களுக்கு அளிப்பது ஒவ்வொரு எம்.பி.,யின் கடமை என பிரதமர் மோடி கூறி இருந்தார். அறிக்கை வெளியிடாத எம்.பி.,க்கள் அடுத்த 3 மாதங்களுக்குள் அறிக்கையை வெளியிட வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Published in அரசியல்

ஆந்திராவில் 2 தலித்துகளை பசு பாதுகாவலர்கள் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் அமலாபுரத்தில் இறந்த மாட்டின் தோலை உரிக்கும் பணியில் தலித்துகள் 2 பேர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் மாட்டை கொன்று தோலை உரிப்பதாக கூறி பசு பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த 8 பேர் சேர்ந்து தலித்துகள் 2 பேரையும் மரத்தில் கட்டி வைத்துள்ளனர். பின்னர் அவர்களது ஆடைகளை களைந்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சனிக்கிழமை ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் இறங்குவோருக்கு எச்சரிக்கை விடுத்தார்.தலித்துகளை தாக்க விரும்புவோர் தன்னை தாக்கலாம் என்றும் கூறியிருந்தார். ஆனால் இரண்டே நாட்களில் பிரதமர் பேசிய ஐதராபாத் அருகில் உள்ள மாவட்டத்திலேயே தலித்துகள் மீது பசு பாதுகாவலர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனிடையே பசு பாதுகாப்பு என்ற பெயரில் தனி நபர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது சகிப்பின்மை இன்றி நடவடிக்கை எடுக்கும் படி அனைத்து மாநில, மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றரிக்கை அனுப்பியுள்ளது.

Published in இந்தியா
பக்கம் 1 / 6
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…