JoomlaLock.com All4Share.net

Background Video

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சன் தன்னை சீண்டிய இலங்கை ரசிகரை கலாய்த்துள்ளார்.

அவுஸ்திரேலியா- இலங்கை கிரிக்கெட் அணிகள் தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றன.

இதில் பல்லேகலவில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை 106 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய குசால் மெண்டிஸ் 176 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு பங்களிப்பு அளித்தார்.

இதனையடுத்து அவுஸ்திரேலிய அணியின் தோல்வியை இலங்கை ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி தீர்த்தனர்.

இந்த நிலையில் இலங்கை ரசிகர் ஒருவர் முன்னாள் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சனுக்கு ஒரு டுவிட் செய்தார்.

அதில், ’நீங்கள் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர், குஷால் மெண்டிஸ் அறிமுகம் ஆவதற்குள் ஓய்வு பெற்றுவிட்டீர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு மிட்செல் ஜான்சன், ’ஆமாம்.. அந்த குசால் மெண்டிஸ் யார்? ’என்று பதிலளித்து அந்த ரசிகரை கிண்டலடித்தார்.

காலே மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலியா மண்ணை கவ்வ, இலங்கை தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

இலங்கையின் வடக்கில் நெடுந்தீவுக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் தத்தளித்த மூன்று இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று காப்பற்றியுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த இந்த மீனவர்கள் வந்த படகில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த இந்த மீனவர்களை இலங்கைக்கு அழைத்து வந்து, படகு பழுதுப்பார்க்கப்பட்ட பின்னர், மீனவர்கள் படகுடன் சர்வதேச எல்லையில் வைத்து இந்திய கடலோர காவற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published in இலங்கை
வெள்ளிக்கிழமை, 05 ஆகஸ்ட் 2016 00:00

முடிவுக்கு வந்த நானுஓயா அவோகா படுகொலை!

நானுஓயா அவோகா தோட்டத்தில் 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட 08 சந்தேகநபர்களில் எழுவரை, நுவரெலியா மேல் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்ததுடன், ஒருவருக்கு 10 வருடச் சிறைத்தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் தெரியவருவதாவது,

கிளரன்டன் அவோகா தோட்டத்தில் 12.10.2000 அன்று, மரக்குற்றிகளை திருட்டில் 8 பேர் அடங்கிய குழு ஒன்று ஈடுபட்டுள்ளது. இதனைத் தடுக்க முயன்ற காவலாளி பன்னீர்ச்செல்வம் என்பவரை அந்தக் குழு தாக்கியுள்ளது. தாக்குதலில் பலத்த காயமடைந்த பன்னீர்ச்செல்வம் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களான 8 பேர் நானுஓயாப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர்.

3 மாதகால விளக்கமறியலின் பின்னர் இவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். தொடர்ந்து 16 வருட காலம் இடம்பெற்றுவந்த வழக்கில் பிரதான குற்றவாளியாக இனங்காணப்பட்ட ராமன் பாஸ்கரன் (48) என்பவருக்கு 10 வருடகாலச் சிறைத்தண்டனை வழங்கி நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்கவினால் தீர்ப்பளிக்கப்பட்டது.

குற்றவாளி தலவாக்கலை பொலிஸ் நிலையத்தின் சிவில் கிராமப் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்ததக்கது.

Published in இலங்கை
வெள்ளிக்கிழமை, 05 ஆகஸ்ட் 2016 00:00

ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ஹேரத்!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 281 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.

இதையடுத்து முதல் இன்னிங்சை துவங்கிய அவுஸ்திரேலிய அணி 106 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

இலங்கை விரர் ஹேரத் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவுஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக தொடக்கவீரர் டேவிட் வார்னர் 42 ஓட்டங்கள் எடுத்தார்.

இதையடுத்து 175 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இலங்கை அணி 23 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 98 ஓட்டங்கள் சேர்த்து 273 ஓட்டங்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.

இதன் மூலம் இந்த டெஸ்டில் இலங்கையின் கை ஓங்கியுள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நினைவுக்கூரத்தக்கது.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை முதல் இன்னிங்சில் 281 ஓட்டங்கள் குவித்துள்ளது.

இலங்கை- அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்கியது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

தொடக்க வீரர்கள் தடுமாற்றம்

இதன்படி இலங்கை அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய கருணாரத்னே (0), கெளஷால் சில்வா (5) ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிந்தனர். இதனால் இலங்கை அணி 9 ஓட்டங்களுக்கே 2 விக்கெட்டை இழந்து மோசமான நிலையில் இருந்தது.

மீண்டும் அசத்திய குசால் மெண்டிஸ்

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த குசால் பெரேரா, குசால் மெண்டிஸ் நிதான ஆட்டத்தை தொடந்தனர். குசால் பெரேரா (49) நாதன் லயன் சுழலில் வீழ்ந்து அரைசதத்தை தவறவிட்டார்.

இதன் பின்னர் குசால் மெண்டிஸ் உடன் அணித்தலைவர் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். இவர்களும் பொறுமையாக ஆட இருவரும் அரைசதம் கடந்தனர்.

முதல் போட்டியில் சதம் விளாசிய குசால் மெண்டிஸ் இந்தப் போட்டியிலும் சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டார்க் வேகத்தில் வெளியேறினார். அவர் 177 பந்தில் 10 பவுண்டரி 2 சிக்சர் என மொத்தம் 86 ஓட்டங்கள் எடுத்தார்.

சரிந்தது இலங்கை

இதைத் தொடர்ந்து அணித்தலைவர் மேத்யூஸ் 54 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, சந்திமால் 5 ஓட்டங்களில் வெளியேறி ஏமாற்றினார்.

தனஜெய டி சில்வா தன் பங்கிற்கு 37 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் வந்த தில்ருவன் பெரேரா (16), ஹேரத் (14), சந்தகன் (1) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இலங்கை 281 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

ஸ்டார்க் அசத்தல்

இலங்கை அணியை தனது வேகத்தால் மிரட்டிய மிட்செல் ஸ்டார்க் 44 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். நாதன் லயன் 2, ஹாசில்வுட், மார்ஷ், ஹொலாண்ட் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர்.

தொடக்கமே மிரட்டல்

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களை மிரட்ட ஆரம்பித்தனர் இலங்கை பந்துவீச்சாளர்கள்.

தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் டக்-அவுட் ஆக வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் வார்னர் 42 ஓட்டங்களில் ஆட்டமிழ்ந்தார். காவஜா ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 54 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இலங்கை அணி சார்பில், விஷ்வ பெர்ணாடோ, தில்ருவான் பெரேரா தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பக்கம் 1 / 2
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…