JoomlaLock.com All4Share.net

Background Video

நாகை: கடந்த 25ம் தேதி மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் 93 பேர் கரை திரும்பவில்லை. நடுக்கடலில் தத்தளிப்பதாக தகவல் வந்ததை அடுத்து உள்ளூர் மீனவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் கிச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கோடியக்கரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 93 பேர் மீன் பிடிக்க கடந்த 25ம் தேதி கடலுக்குள் சென்றுள்ளனர். அவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி பலத்த மழை கடலோர மாவட்டங்களில் பெய்தது. நாடா புயல் காரைக்கால் அருகில் கரையைக் கடந்தது. புயல் உருவாகியதால் தமிழக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கைவிடுத்திருந்தது.

 

இந்த எச்சரிக்கைக்கு பிறகு மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லாமல் இருந்தனர்.

 

ஆனால் தற்போது கரை திரும்பாமல் உள்ள 93 மீனவர்களும் கடந்த 25ம் தேதி கடலுக்குள் சென்றவர்கள் என்பதால், கரை திரும்புவதில் அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 93 மீனவர்களும் கரை திரும்பவில்லை. நாடா புயலால் கடலுக்குள் சென்றவர்களுக்கு ஏதாவது ஆகி இருக்குமோ என்ற அச்சத்தில் இருந்த உறவினர்கள் 93 மீனவர்கள் கரை திரும்ப வில்லை என்பது குறித்து புகார் ஒன்றையும் அளித்துள்ளனர். ஆனால் அந்தப் புகார் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நாகை மாவட்ட மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனிடையே காணாமல் போன மீனவர்கள் கோடியக்கரைப் பகுதியில் நடுக்கடலில் தத்தளித்து வருவதாக தகவல் கிடைத்தது. இதனால் உள்ளூர் மீனவர்கள் தாங்களாகவே கரை திரும்பாத மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படையோ, கப்பல் படையே தேடும் முயற்சியில் ஈடுபடவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.:கோகுல் ராஜ்

Published in தமிழகம்

இலங்கையில் சிறையிலுள்ள தமிழக மீனவர்களையும் மற்றும் படகுகளையும் விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை இன்று காலை தொடங்கியுள்ளனர். :-மதன்குமார்.

Published in தமிழகம்

இலங்கையின் வடக்கில் நெடுந்தீவுக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் தத்தளித்த மூன்று இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று காப்பற்றியுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த இந்த மீனவர்கள் வந்த படகில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த இந்த மீனவர்களை இலங்கைக்கு அழைத்து வந்து, படகு பழுதுப்பார்க்கப்பட்ட பின்னர், மீனவர்கள் படகுடன் சர்வதேச எல்லையில் வைத்து இந்திய கடலோர காவற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published in இலங்கை
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…