
Super User
இங்கிலாந்து :100 பந்து கிரிக்கெட் தொடர் விரைவில் அறிமுகம்
டி20 கிரிக்கெட் பிரபலம் அடைந்து வரும் நிலையில் 100 பந்து கிரிக்கெடெ் தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 2020-ல் நடத்த திட்டமிட்டுள்ளது.
கிரிக்கெட் ஐந்து நாட்கள் டெஸ்ட் போட்டியில் இருந்து ஒருநாள் கிரிக்கெட்டான 50 ஓவர் கிரிக்கெட்டாக மாறியது. பின்னர் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் டி20 ஓவராக மாறியது. தற்போது சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. சுமார் நான்கு மணி நேரத்திற்குள் போட்டி முடிந்துவிடும் என்பதால் ரசிகர்களும் அதிக அளவில் மைதானத்திற்கு படையெடுக்கிறார்கள்.
டெஸ்ட் போட்டி 20 ஓவராக சுருங்கியதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகம் படுத்த திட்டமிட்டுள்ளது. 2020-ம் ஆணடில் இருந்து 8 அணிகள் பங்கேற்கும் 100 பந்து போட்டி தொடரை தொடங்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. 15 ஓவர்கள் 6 பந்து வீதம் வீசப்படும். கடைசி ஓவரில் 10 பந்துகள் வீசப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, டி20 போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து வருகின்றது என்று முன்னாள் வீரர்கள் கவலையடைந்து வரும் நிலையில், 100 பந்து போட்டி முடிவிற்கு முன்னாள் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
தாவூத் இப்ராஹிம் சொத்துகளை பறிமுதல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு
இந்தியாவில் வங்கி கணக்கு இல்லாதோர் 19 கோடி பேர்
பிரதமர் நரேந்திர மோடியின் 'ஜன்தன் யோஜனா' வெற்றியடைந்த போதும், இந்தியாவில் வங்கி கணக்கு இல்லாமல் 19 கோடி பேர் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. 2வது இடம்: இதுகுறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: உலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் சீனாவுக்கு(225 மில்லியன்) அடுத்து இந்தியா இரண்டாவது இடம்(190 மில்லியன்) வகிக்கிறது. உலகில் வங்கி கணக்கு இல்லாத 11 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர்.
இந்தியாவில் 2011ம் ஆண்டு முதல் வயது வந்தவர்களின் வங்கி கணக்கு எண்ணிக்கை 80 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆதாரே காரணம்: மோடி அரசால் துவங்கப்பட்ட 'ஜன்தன் யோஜனா' திட்டம் மூலம் 2018 மார்ச் 31ம் தேதி வரை ரூ.31 கோடி கூடுதல் நிதி வங்கிகளுக்கு கிடைத்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களை விட ஆண்கள் 20 சதவீத வங்கி கணக்குகளை அதிகம் கொண்டிருந்தனர். இந்த பாலின பாகுபாடு தற்போது 6 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த முன்னேற்றத்துக்கு ஆதார் நடவடிக்கை தான் காரணம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில், பா.ஜனதாவை சேர்ந்த 9 மந்திரிகளும் பதவி விலகல்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் மெஹ்பூபா முப்தி தலைமையிலான கூட்டணி மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வை சேர்ந்த இரு மந்திரிகள் கலந்துகொண்டனர்.
சிறுமியை கற்பழித்து கொன்ற குற்றவாளிகளுக்கு ஆதரவான பேரணியில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மந்திரிகள் பங்கேற்ற சம்பவம் பா.ஜ.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த பேரணியில் கலந்துகொண்ட பா.ஜ.க. மந்திரிகளான சந்திரபிரகாஷ் கங்கா, லால் சிங் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து பா.ஜ.க. மந்திரிகளையும் உடனடியாக ராஜினாமா செய்யுமாறு பா.ஜ.க. மேலிடம் உத்தரவிட்டது. கட்சி அறிவுறுத்தலின் பேரில், 9 மந்திரிகள் நேற்று ராஜினாமா செய்தனர். அவர்கள் மாநில பாரதிய ஜனதா தலைவர் சத் சர்மாவிடம் தங்கள் பதவி விலகல் கடிதங்களை கொடுத்தனர்.
தமிழகத்தில் லோக் ஆயுக்தா : கமல் வரவேற்பு
பாராளுமன்றத்தில் லோக்பால் சட்டம் 2013-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் லோக் ஆயுக்தா நீதிமன்றங்கள் அமைக்கவில்லை. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் ‘லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும். லோக் ஆயுக்தா அமைக்கும் நடவடிக்கை குறித்து ஜூலை 10-ம் தேதிக்குள் தமிழக தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’ என்றும் சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது.
தமிழகத்தில் லோக் ஆயுக்தா கோர்ட் அமைக்க உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, உச்ச நீதிமன்றத்திற்குத் தமிழ்நாட்டில் உள்ள நேர்மையாளர்களின் மனமார்ந்த நன்றி. இந்த அரசு, உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்று செயல்பட மக்கள் வலியுறுத்த வேண்டும். லோக் ஆயுக்தா, ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து என தெரிவித்துள்ளார்.