JoomlaLock.com All4Share.net

Background Video

இலங்கை

இலங்கை (309)

இலங்கையில் கண்டி - திகன மற்றும் தெல்தெனிய பகுதியில் நேற்றைய தினம்  வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து அங்கு  ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே தற்போது நாடு முழுவதும் அவசர நிலை  அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி திஷ்ஷ நாயக்க தெரிவித்துள்ளார்.
 
நாட்டில் 10 நாட்களுக்கு அவசர கால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி திஷ்ஷநாயக்க  ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை, 13 பிப்ரவரி 2018 00:00

இலங்கையில் கோயில் சிலைகள் உடைப்பு

Written by

இலங்கையின் வடக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் இந்திய இராணுவத்தால் அமைக்கப்பட்ட ஒரு சிறு கோயில் உட்பட மூன்று சிறிய இந்து கோயில்களில் விக்கிரகங்கள் இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் மூன்று இடங்களில் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

இன்று இலங்கையில் வாழும் சைவர்கள் மகா சிவராத்திரியை அனுட்டிக்கும் நிலையில் கடந்த இரவு இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பது இங்குள்ள இந்துக்களின் மனதில் பெருத்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கையில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரர் ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் உபதலைவரான சுப்ரமணியன் பிருந்தாவனநாதன் பிபிசியிடம் கூறினார்.

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள லிங்கேஸ்வரர் ஆலயம் இந்திய இராணுவம் இங்கிருந்த காலத்தில் அவர்களால் சிறிய சிலை ஒன்று அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. பின்னர் அது பெரிதுபடுத்தப்பட்டு அப்பகுதி மக்களால் வழிபடப்பட்டு வருகின்றது. அங்கிருந்த மூன்று சிலைகள் கடந்த இரவு இனந்தெரியாதோரால் அகற்றப்பட்டுவிட்டன.

மன்னார் தாழ்வுப்பாடு கீரி சந்தி எனும் இடத்தில் இருந்த ஆலையடி பிள்ளையார் சிலையும் உடைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தள்ளாடியில் விமான ஓடுபாதைக்கு அருகாக திருக்கேதீஸ்வரம் வீதியில் இருந்த பிள்ளையார் சிலை ஒன்று நான்காவது தடவையாக இப்போது உடைக்கப்பட்டுள்ளதாகவும் பிருந்தாவனநாதன் கூறினார்.

இலங்கையை பொறுத்தவரை இங்குள்ள இந்துக்கள் சிவராத்திரி விரதத்தை அனுட்டிக்க நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மன்னார் மாவட்டத்தில் உள்ள திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் கூடுவது வழக்கம். அப்படியான நிலையில் அந்த ஆலயத்துக்கு செல்லும் ஒரு விக்கிரகம் உட்பட மூன்று இந்து வழிபாட்டிடங்கள் சேதமாக்கப்பட்டமை அங்கு வரும் பக்தர்களுக்கு பெரும் மனவலியை ஏற்படுத்தியுள்ளதாகவும் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பான சபையின் உபதலைவரான பிருந்தாவனநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக பல சந்தர்ப்பங்களில் ஆலய சிலைகள் தாக்கப்பட்ட போது தமது முறைபாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் தாம் போலிஸில் இந்தத்தடவை முறைப்பாடு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

வெளிநாட்டு மீன்பிடி படகுகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை, 100 மடங்குக்கு மேல், இலங்கை அரசு உயர்த்தியுள்ளது.

தமிழக மீனவர்கள், கடலில் எல்லை தெரியாமல், இலங்கை பகுதிக்கு சென்று மீன்பிடிப்பது அடிக்கடி நடக்கிறது. இவர்கள் மேல், இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், துப்பாக்கிச் சூடு நடத்துவதும், மீனவர்களை கைது செய்து, படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், தமிழக மீனவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்து பிடிபடும், வெளிநாட்டு படகுகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை, 100 மடங்குக்கு மேல் உயர்த்த, இலங்கை அரசு முடிவு செய்தது. இந்த மசோதாவுக்கு, இலங்கை அமைச்சரவை, சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.இந்நிலையில், இந்த மசோதா, இலங்கை பார்லி மென்டில்,நேற்று நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர், மகிந்தா அமரவீரா கூறுகையில், ''இலங்கை மீனவர்களின் நலனை காக்கவே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு, முன், அதிகபட்சம், 15 லட்சம் இலங்கை ரூபாய் மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டது.

''இதை வெளிநாட்டு கப்பல்கள் மிக எளிதாக செலுத்திவிட்டு, மீண்டும் மீண்டும் எல்லை தாண்டி, மீன் பிடிப்பதை தொடர்கின்றனர். அதனால் இப்போது, 60 லட்சம் முதல், 1.75 கோடி இலங்கை ரூபாய் அபராதம் விதிக்க, மசோதா வழிவகை செய்துள்ளது,'' என்றார்.

இலங்கை ரூபாயின் இந்திய மதிப்பு, 41 பைசா. இதனால், தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை, 24 லட்சத்திலிருந்து, 70 லட்ச ரூபாய் வரை, உயர்த்தப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் மழையுடன் கூடிய கால நிலை காரணமாக ஆறு மாவட்டங்களில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களில் சிக்கி 91 பேர் பலியாகியிருப்பதாகவும், 110 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 91 பேர் பலி (புகைப்படத் தொகுப்பு)

அரசு பேரிடர் முகாமம்துவ இன்று வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணக்கை - 25 காணாமல் போனவர்களின் எண்ணிக்கை - 42 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலே கூடுதலான மரணங்கள் பதிவாகியுள்ளதாக போலீஸ் மற்றும் பேரிடர் முகாமைத்துவ மையம் வௌியிட்டுள்ள தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது

குறிப்பாக களுத்துறை மாவட்டத்தில் 5 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு அனர்த்தத்தில் சிக்கி 10 பேர் பலியாகியுள்ளனர். 4 பேர் காணாமல் போயுள்ளனர். 

இரத்தினபுரி மாவட்டத்தில் 3 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் புதையுண்டு தாய், மகள் உள்ளிட்ட 10 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

கொழும்பு மாவட்டம் அவிசாவளை பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து பள்ளி மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

இம்மரணங்களை தவிர மரக் கிளை முறிந்து விழுந்த சம்பவம் போன்ற சம்பங்களிலும் ஓரிரு மரணங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது. 

மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பிரதான சாலைகள் மற்றும் வீதிகள் வழியாக போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை, காலி ஆகிய மாவட்டங்களிலுள்ள சில நகரங்களிலும், கிராமங்களிலும் வெள்ளம் நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 91 பேர் பலி (புகைப்படத் தொகுப்பு)

இந்த மீட்பு பணியில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினரின் உதவிகளும் பெறப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளினால் தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக பிரதான நீர் நிலைகளிலும் நீர்த் தேக்கங்களிலும் நீர் மட்ட உயர்ந்துள்ளதையடுத்து அதன் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக சில பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இரத்தினபுரி நகரம் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக உள்ளுர் வாசிகள் தெரிவிக்கின்றனர் .

அண்டை நாடுகளிடம் உதவிகோரும் இலங்கை

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் உள்ள அவசர சேவை பிரிவு இயக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் பேரழிவு மேலாண்மை அமைச்சகம் ஒருங்கிணைந்து ஐ.நா, சர்வதேச தேடுதல் மற்றும் மீட்பு ஆலோசனை குழு மற்றும் அண்டை நாடுகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வழங்குமாறு கோரியுள்ளது. குறிப்பாக தேடுதல் மற்றும் மீட்புப்பணி நடவடிக்கைகள் நடைபெறும் பகுதிகளில் உதவி வழங்குமாறு கோரியுள்ளது.

 

இடம்பெயர்ந்த மக்களுக்கென வவுனியா சின்னடம்பனில் லைக்கா நிறுவனத்தினால் புதிதாக அமைக்கபட்டுள்ள வீடுகளைப் பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தரவிருந்த நடிகர் ரஜினிகாந்தின் வருகை ரத்து செய்யப்பட்டமைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  இதற்கான அழைப்பை ஈழத்துக் கலைஞர்கள் என்ற அமைப்பு விடுத்திருந்தது.

யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த விடுதலைச் சிறுத்தைக் கட்சிகள் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோரைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தின் போது குரல் எழுப்பப்பட்டது.

'லட்சக்கணக்கான தமிழ் மக்கள் உங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றோம். வா தலைவா வா!' என்ற வாசகத்துடன் திருமாவளவன், வேல்முருகன் ஆகியோரைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் முன்னதாக யாழ் நகர வீதிகள் எங்கும் ஒட்டப்பட்டிருந்தது.

இதேவேளை, நடிகர் ரஜினிகாந்தின் விஜயம் குறித்து கருத்து வெளியிட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகளில் ஒன்றாகிய ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாணத்தில் பொதுமக்களின் காணிகளை ராணுவம் பிடித்து வைத்திருப்பது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் பல இடங்களிலும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்ற ஒரு சூழலில் புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளைக் கையளிப்பதற்காக வருகின்ற நடிகர் ரஜினிகாந்த், இந்திய அரசுடன் தனக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி,இந்திய அரசின் ஊடாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து, இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, வழி செய்வார் எனில், அது வரவேற்கத்தக்கதாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.

இடம்பெயர்ந்துள்ள வீடுகளற்ற மக்களுக்கு வெறுமனே 150 வீடுகளைத் திறந்து வைப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் வருகை தருவதாக இருந்தது, அவருக்கு உள்ள அரசியல் செல்வாக்கின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுடைய பிரச்சினைகள் தீர்வதற்கு வழி கிடைக்குமானால் அதுவே சிறப்பானதாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும், நடிகர் ரஜினிகாந்த் போன்ற கலைஞர்கள் வருவதன் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புக்கள் கிட்டும். அதேநேரம் இலங்கைக்கு வருகை தருகின்ற நடிகர் ரஜினிகாந்த் போன்றவர்களை இலங்கைக்கு வரக் கூடாது என்று கூறுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தமிழர் இனப் பிரச்னைக்கு கூட்டாட்சி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் விடுத்த கோரிக்கையை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நிராகரித்து விட்டார்.

இதுதொடர்பாக யாழ்ப்பாணத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது விக்னேஷ்வரன் பேசியபோது, சிறுபான்மையினரான தமிழர்களின் அரசியல் விருப்பங்களுக்கு கூட்டாட்சி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பின. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, விக்னேஷ்வரனின் கோரிக்கை குறித்து பதிலளிக்க வேண்டும் என்று அக்கட்சிகள் வலியுறுத்தின.

இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே பதிலளித்துப் பேசுகையில், "விக்னேஷ்வரனின் கோரிக்கை பொருத்தமற்றது. ஒவ்வொருவருக்கும் தங்களது கருத்தை தெரிவிப்பதற்கு சுதந்திரம் உள்ளது. ஆனால், சட்டமியற்றுவது என்பது நாடாளுமன்றத்தின் பணியாகும்' என்றார்.

முன்னதாக, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் விக்னேஷ்வரன் பேசியபோது, கூட்டாட்சி அடிப்படையில் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு சிங்களர்கள் அச்சப்படுவதாகவும், கூட்டாட்சி அடிப்படையில் தீர்வு என்பது இனவாத அடிப்படையில் இலங்கையிலுள்ள மாகாணங்களை பிளவுபடுத்தும் நடவடிக்கை அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை மத்துகம பகுதியில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். பந்தாக வீசியதில் 14 வயது பேட்டிங் செய்த 14 வயது சிறுவருக்கும் 15 வயது பந்துவீச்சாளருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது அந்த பேட்டிங் செய்த சிறுவர் 15 வயது பந்துவீச்சாளரை மட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டார். உயிரிழந்த சிறுவனுக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவனை கைது செய்துள்ள போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2016 00:00

உலகையே திரும்ப வைத்த எழுக தமிழ் பேரணி !

Written by

தமிழர் பகுதிகளில் சிங்கள, புத்த மயமாக்கல் நடவடிக்கைகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, ‘எழுக தமிழ்’ என்ற பெயரில், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே காலை பேரணி தொடங்கியது. வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பேரணிக்கு தலைமை தாங்கினார்.
‘தமிழர் பகுதிகளில் சிங்கள குடியிருப்புகளை அமைப்பது, புத்த கோயில்கள் கட்டுவது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்; ராணுவ தேவைகளுக்காக ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்; தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும்; மாயமானவர்களை கண்டுபிடிப்பதில் அரசு உதவி வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
‘(விடுதலைப் புலிகளுக்கு எதிரான) போர் முடிந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலைமையை பிரதிபலிக்கவே இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படுகிறது’ என, சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.தமிழ் மக்கள் தேசிய முன்னணி பேரணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. பல்கலை மாணவர்கள் உட்பட வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து பேரணியில் கலந்துகொண்டனர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. மைத்ரிபால சிறிசேன கடந்தாண்டு இலங்கை அதிபராக பதவியேற்ற பிறகு, வடக்கு பகுதியில் பெரிய அளவில் பொதுமக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறை.

வெள்ளிக்கிழமை, 09 செப்டம்பர் 2016 00:00

இலங்கை : ராஜபக்சேவின் அமைச்சருக்கு மரண தண்டனை

Written by

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்சேவின் ஆலோசகராக இருந்தவரும், முன்னாள் அமைச்சருமான டுமின்ந்தா சில்வாவுக்கு, கொலை வழக்கு ஒன்றில் அந்நாட்டு ஐகோர்ட் மரண தண்டனை அளித்துள்ளது.

இலங்கையில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாரத லட்சுமன் பிரேமச்சந்திரா என்பவர் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக முன்னாள் அமைச்சரும், ராஜபட்சேவின் ஆலோசகராகவும் இருந்தவருமான டுமின்ந்தா சில்வா உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடைபெற்றது.

அரசியல் பிரச்சனையாக உருவெடுத்த இவ்வழக்கில், ராஜபட்சேவின் ஆலோசகர் உள்பட 5 பேருக்கு கொழும்பு ஐகோர்ட் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பக்கம் 2 / 23
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…