JoomlaLock.com All4Share.net

Background Video

இலங்கை

இலங்கை (299)

போருக்குப் பின்னர் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்யப்பட்ட பலரும் இன்று நோயாளிகளாகவும் ஆரோக்கியம் அற்றவர்களாகவும் உள்ளனர் என்ற செய்தி இந்த நாட்டில் தமிழினத்துக்கு நடந்த மிகமோசமான கொடூரங்களில் ஒன்றாகியுள்ளது.

இதேவேளை புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 105 பேர் இதுவரை உயிரிழந்து விட்டனர் என்ற செய்தி பேரதிர்ச்சிக்குரியது.

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்குவதாகக் கூறி உலகை நம்ப வைத்து நாடகமாடி, புனர்வாழ்வு என்று மறு உலகிற்கு அனுப்புவது என்ற உண்மையை உலகம் உணராமல் விட்டது தான் மிகப்பெரும் அபத்தம்.

வன்னியில் நடந்த தமிழின அழிப்புக்குப் பின்னர் சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு கொடுத்து அவர்களை மீளவும் வழமையான வாழ்வுக்கு கொண்டு வருவதென்ற பேரில் எங்கள் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நடந்த அநியாயம் உலகில் எந்த நாட்டில் நடந்திருந்தாலும் அதனை வல்லரசுகளும் ஐ.நா சபை உள்ளிட்ட பொது அமைப்புகள் தட்டிக்கேட்டிருக்கும்.

ஆனால் இலங்கையில் நடந்தமையால், அது ஆட்சி மாற்றத்துடன் அடங்கிப்போயிற்று.

நல்லாட்சி வந்து விட்டது என்பதற்காக முன்னைய ஆட்சியில் நடந்த பேரழிவுகளை, அநியாயங்களை, கொடுமைகளை தட்டிக்கேட்காமல் விடுவதென்பது எந்த வகையில் நியாயமானது என்பதுதான் புரியாமல் உள்ளது.

முன்னைய ஆட்சியில் தமிழினத்துக்கு நடந்த மிகமோசமான கொடுமைத்தனங்களை தட்டிக் கேட்க வேண்டும் என்பதில் எங்கள் தமிழ் அரசியல் தலைமைகள் விட்ட மகா தவறுகள் தான் இன்று வரை தமிழினத்தின் இழப்பிற்கு எதுவும் கிடையாது என்ற நிலைமையைத் தோற்றுவித்தது.

நல்லாட்சிக்கு எங்கள் ஆதரவு உண்டு. அதற்காக முன்னைய ஆட்சியினர் எங்கள் தமிழினத்தை துவம்சம் செய்து இன அழிப்புக்கு உட்படுத்தியதை இந்த உலகம் விசாரித்தாகவேண்டும் என்று தமிழ் அரசியல் தலைமை கோச­ம் போட்டிருந்தால், நிச்சயம் எங்களின் இனப்பிரச்சினைக்கு ஒரு முடிவு கண்டிருக்கும்.

எனவே இலங்கை அரசால் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் உடல்நிலை, அவர்களின் ஆரோக்கியம் தொடர்பில் சர்வதேச மருத்துவர்களின் உதவியுடன் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.

இப்பரிசோதனையை நடத்துவதன் மூலம் எங்கள் பிள்ளைகளை காப்பாற்ற முடியும் என்பதுடன் புனர்வாழ்வு என்ற பெயரில் மறு உலகத்துக்கு அனுப்புவதற்காக நடந்த நாசங்களையும் கண்டறிய முடியும் என்பதால்,புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் மருத்துவப் பரிசோதனைக்காக பொது அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டும்.

மத்தள மஹிந்த ராஜபக்ஸ விமான நிலைய சேவை நடவடிக்கைகளுக்காக பங்குதாரர்கள் தேவைப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த விமான நிலையத்தின் சேவைகளானது அரச மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இதற்கமைய பங்குதாரர்கள் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று ஆசிய பசுபிக் பிராந்திய விமான சேவை பணிப்பாளர்களின் 53வது மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாடானது இன்று முதல் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் எந்தவொரு விமான நிறுவனமும் வரையறை இல்லாமல் இதனை பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவ சிப்பாய் ஒருவரை தொடர்ந்து மூன்று நாட்களாக பாலியல்வல்லுறவுக்குட்படுத்திய மதகுருவை மாதம்ப பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாதம்பை சத்சிரிகம விகாரையை சேர்ந்த 25 வயதுடைய மதகுருவையே பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய் ஹிக்கடுவையை சேர்ந்தவர் எனவும், வவுனியாவில்உள்ள கனகராயன்குளம் இராணுவ முகாமில் உள்ளவர் எனவர் பொலிஸார்குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த மதகுரு இராணுவ சிப்பாயுடன் முகப்புத்தகம் மூலம் நட்பு கொண்டிருந்தார்என சமூக ஊடக வலைத்தளம் மூலம் தெரியவந்துள்ளது.

இராணுவ சிப்பாய் கொத்மலையில் உள்ள பயிற்சி நிலையம் ஒன்றிற்கு வருகைதந்திருந்தார். அந்த நிலையில் மதகுருவின் விகாரையிலேயே தங்கியுள்ளார்.

அதன் பின்னர் குறித்த சிப்பாய் சுகயீனம் காரணமாகவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன் போதே சிப்பாய்வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் பின்னர் மதகுருவை கைது செய்ததாகவும், சிலாபம் நீதிமன்றில்முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும் சம்பவம் தொடர்பில் மாதம்ப பொலிஸார் மேலதிக விசாரணைகள்முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகில் நிர்மாணிக்கப்படும் கொழும்பு துறைமுக நகரை ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் நிதி நகரமாக மாற்றும் அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் நடைபெறும் 12ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக இன்று அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இதனால், குறித்த அமைச்சரவை பத்திரத்தை நாளைய தினம் அமைச்சரவையில் தாக்கல் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், இந்தியாவின் சென்னை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான நிதி நகரமாக கொழும்பு துறைமுக நகரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், முதல் முறையாக இவ்வாறான நிதி நகரம் அறிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதிக மதுபோதையில் சுயநினைவின்றி இருந்த பாடசாலை மாணவி ஒருவர், அநுராதபுரம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய இவரை அநுராதபுரம் வித்தியாலய மாவத்தையில் இருந்து மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் குறித்த மாணவி நேற்றைய தினம் தனக்கு பிரத்தியேக வகுப்பு இருப்பதாக கூறி தனது காதலருடன் இணைந்து சென்றுள்ளதாகவும்,

இதன்போது அவரது காதலன் மதுவுடன் போதை மாத்திரை ஏதாவது கலந்து பருகக் கொடுத்த பின்னர் மாணவியை துஸ்பிரயோக படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் குறித்த இடத்திலிருந்து மாணவியின் காதலன் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த மாணவி இன்று காலை வரை சுயநினைவுக்கு வராததால் இவரிடம் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 எதிர் கட்சிக்கு ஆதரவு வழங்கி வரும் ஊடகங்களுக்கு எதிரான விமர்சனம் தொடர்பாக பிரதமர் ரணில் விகிரமசிங்கவின் கருத்து சம்பந்தமாக  இலங்கை சட்ட தரணிகள் தமது  சபை கருத்து வெளியிட்டுள்ளது.

சபையின் சட்ட அமுலாக்கம் குழு இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.

ஒரு நாட்டின் ஐந்தாவது நெறிமுறையாக கருதப்படும், ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் முயற்சி எவையும் மேற்கொள்ளப்படக்கூடாது என்று அந்தக்குழு கோரியுள்ளது.

இந்தநிலையில், எதிர்க்கட்சியினரும் பொறுப்புக் கூறக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றும் அந்தக்குழு அரசாங்கத்திடம் கேட்டுள்ளது.

மத்தள மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களுக்கான நிதித்திட்டங்கள் தொடர்பான  கோரிக்கையை சீனா ஏற்க மறுத்துள்ளது.

இவ்வாறான மாற்றங்களுக்கு சீன சட்டத்தில் இடமில்லை. இந்தநிலையில் சீன முதலீட்டாளர்களுடன் பேசியே இது தொடர்பில் முடிவெடுக்க முடியும் என்றுசீன தூதுவர் யி ஸியான்லிங் தெரிவித்துள்ளார்.

எனினும் மத்தள விமானநிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றின்இயக்கங்களுக்காக ஏற்கனவே சீனா, பல நிறுவனங்களின் தொடர்புகளைஏற்படுத்திக்கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிலங்கையின் அபிவிருத்திகளை ஒருங்கிணைக்கும் முகமாக அம்பாந்தோட்டை அபிவிருத்திகூட்டுத்தாபனம் ஒன்றை அமைக்க அரசாங்கம் முயற்சித்து வரும் நிலையிலேயே பிரதமரின்இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீனாவின் பிரதான நிர்மாணத்திட்டமான “போட்சிட்டி”எதிர்வரும் ஒக்டோபரில்மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இறக்குமதி செய்யப்படும் சீனி கொள்கலன்களில் கொக்கேய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட சீனிக் கொள்கலன்களையும் பெற்றுக் கொள்வதற்கு வர்த்தகர்கள் ஆர்வம் காட்டாத நிலைமை காணப்படுகின்து.

இதனால் சுங்கத் திணைக்களத்தில்  கொள்கலன்கள் தேங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு இறக்குமதி செய்பய்பட்ட 800  கொள்கலன்கள் தேங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சீனி கொள்கலன்கள் கடுமையாக சோதனைக்கு உட்படுத்தப்படுவதனால் இறக்குமதியாளர்கள் அவற்றை சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவித்துக் கொள்ள முன்வாரத நிலைமை காணப்படுகின்றது.

இந்த சீனி கொள்கலன்கள் விடுவிக்கப்படாவிட்டால் அதில் உள்ள சீனி நுகர முடியாத வகையில் பழுதடைந்துவிடும் என சுங்கத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2016 00:00

இலங்கைப் பிரதமரின் இந்தோனேசியா பயணம்!

Written by

உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில்  இந்தோனேசியாவிற்கு நாளை விஜயம் செய்யவுள்ளார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் பிரதமர் பங்கேற்க உள்ளார்.

மாநாட்டில் பிரதமர் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

இந்த விஜயத்தில் அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி, கபீர் ஹாசீம், சுஜீவ சேனசிங்க மற்றும் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் இணைந்து கொள்ள உள்ளனர்.

எதிர்வரும் 3ம் திகதி இரவு பிரதமர் மீளவும் நாடு திரும்ப உள்ளதாக பிரதமர் அலுவலம் தெரிவித்துள்ளது.

 

இலங்கைக்கு வியஜம் மேற்கொண்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற இந்த சந்திப்பில் கூட்டமைப்பின், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.

இந்தச் சந்திப்பின் போது, நல்லிணக்கம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம், பொறுப்புக்கூறல், தமிழ் மக்களின் உடனடித் தேவைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்எம்.ஏ.சுமந்திரன், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கினால், அது தேசிய இனப்பிரச்சனைக்கு ஓர் தீர்வாக அமையும். அதற்கான சந்தர்ப்பம் தற்போது அமைந்துள்ளது.

அந்த செயற்றிட்டத்தில், நாங்கள் பொறுப்பாக ஈடுபட்டிருக்கிறோம் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் கனேடிய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தியுள்ள கனடாவின் புதிய வெளிவிவகார அமைச்சர், நல்லிணக்கம், புதிய அரசியலமைப்பு, பொறுப்புக்கூறல், தமிழ் மக்களின் உடனடித் தேவைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு உதவிகளை வழங்கவிருப்பதாக அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார். அதை நாங்கள் வரவேற்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பக்கம் 3 / 22
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…