JoomlaLock.com All4Share.net

Background Video

இலங்கை

இலங்கை (309)

இலங்கை தலைநகர் கொழும்புக்கு வெளியே தெகிவளை பள்ளிவாசல் நிர்மாணப் பணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையில் காவல்துறையின் தலையீடு காணப்பட்டதா என முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளன.

காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல இரத்நாயக்காவுடன் இடம் பெற்ற சந்திப்பில் இந்த குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் ரிஷாத் பதியுதீன், கபீர் ஹாசீம், பைஸார் முஸ்தபா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரகுமான், எஸ்.எம் மரிக்கார் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

பள்ளிவாசல் நிர்மாண பணிகளுக்கு தெகிவளை - கல்கிசை மாநகர சபையினால் ஏற்கனவே சட்ட ரீதியான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த அனுமதியின்படி, ஆகஸ்ட் 24ஆம் தேதி வரையிலான கால எல்லைக்குள் நிர்மாணப் பணிகள் முடிவடைய வேண்டும் என பள்ளி வாசல் நிர்வாகம் கூறுகின்றது.

தற்போது, மாநகர மேயரால் எழுத்து மூலம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவொன்றின்படி நிர்மாணப் பணிகள் கடந்த சில நாட்களாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.

பௌத்த பிக்குமார்கள் உட்பட பௌத்த கடும் போக்காளர்களிடமிருந்து தெரிவிக்கப்பட்டு வந்த எதிர்ப்புகள் காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்காலிகமாக தடை விதிப்பதாக மாநகர முதல்வரால் வழங்கப்பட்ட கடிதமொன்றை பயன்படுத்திய காவல் துறை இதில் தலையிட்டு நிர்மாண வேலைகளுக்கு தடை விதித்ததாக முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் தெரிவிக்கப்படுகின்றன.

இந்த விவகாரத்தை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்த போது, இனிமேல் அவ்வாறு நடை பெறாது என்ற உத்தரவாதமும், உறுதி மொழியும் அவரால் தரப்பட்டதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறுகின்றார்.

மேலும், சட்ட ரீதியான அங்கீகாரம் அனைத்தும் இருப்பதால் நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதில் எவ்விதமான தடையும் இல்லை எனவும், மூன்று நாட்களுக்குள் சுமூகமான தீர்வொன்று பெற்றுத் தரப்படும் என்றும் அமைச்சர் பதில் தெரிவித்துள்ளதாக ரிஷாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிசாசல் நிர்மாணப் பணிகளை தொடர்வதற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் இருந்தும் எதிர்ப்புகளும் தடைகளும் தொடருமானால் நீதிமன்றத்தை நாடவும் பள்ளி வாசல் நிர்வாகமும், முஸ்லிம் அரசியல் தலைமைகளும் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இலங்கை ராணுவத்தினருக்குத் தேவையான பல்குழல் (மல்டிபெரல்) ரொக்கட்டுகளை விற்பனை செய்வதற்கு இரண்டு நாடுகள் மறுப்புத் தெரிவித்துள்ளன.

அண்மையில் அவிசாவளை அருகே சாலாவ இராணுவக் களஞ்சியம் வெடித்துச் சிதறியதில் அங்கிருந்து அனைத்து வகை ஆயுதங்களும் அழிந்து போயுள்ளன.

அதிலும் குறிப்பாக அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 20 ஆயிரம் கிராட் ரொக்கட்டுகள் முற்றாக அழிந்துள்ளன. இந்த வகை ரொக்கட் எறிகணைகள் மல்டிபெரல் கனரக பீரங்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் ரொக்கட் வகையாகும்.

விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரின் போது இராணுவத்தினரின் கை ஓங்கி நிற்பதற்கு மல்டி பெரல் தாக்குதல்களே காரணமாக இருந்திருந்தன.

இந்நிலையில் இறுதிப் போரின் போது இராணுவத்தினர் பொதுமக்கள் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்தியதாக ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் தனது அங்கத்துவ நாடுகள் இலங்கைக்கு கிராட் ரொக்கட்டுகளை விற்பனை செய்வதற்குத் தடை விதித்துள்ளது.

இலங்கை இராணுவத்தினர் இதுவரை காலமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளான செக் குடியரசு மற்றும் ஸ்லோவெக்கியா நாடுகளிலிருந்தே கிராட் ரொக்கட்டுகளைப் பெற்று வந்திருந்தனர்.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை காரணமாக குறித்த நாடுகள் இலங்கைக்கு கிராட் ரொக்கட்டுகளை விற்பனை செய்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக இலங்கை இராணுவத்தினரின் ஆயுத வலிமையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில், பல தசாப்தங்களாக நடந்த இனமோதல் காரணமாக ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பின் போது காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு சான்றிதழ்கள் வழங்கம் திட்டத்துக்கு இலங்கை அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஆயிரக்கணக்காண மக்கள் மார்க்சிஸிஸ்ட் எழுச்சியின் போதும் மற்றும் உள்நாட்டுப் போர் காலங்களிலும் காணாமல் போயுள்ளனர்.

பலர் இன்னும் கணக்கில் வரவில்லை.இவர்களில் பலர் தமிழர்கள். இந்த சான்றிதழ்கள், காணமல் போனவர்களின் குடும்பத்தினர் அவர்களது சொத்தை மாற்றுவது,, முடக்கப்பட்ட வங்கி கணக்கை திறந்து பயன்படுத்துவது போன்ற யதார்த்தமான காரியங்களைச் செய்ய உதவும்.

இந்த வரைவு சட்டம் நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.

ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக, வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அநுர சேனாநாயக்கவை, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச நேற்று திங்கட்கிழமை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் மஹிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், தனது ஆட்சிக் காலத்தில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் கொழும்பு நகரத்தில் பல சேவைகளை செய்த ஒருவர் என்பதனால், அவரை பார்ப்பதற்குச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்களான நாமல் ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோர் தாஜுடீன் கொலையுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் அநுர சேனாநாயகவை மஹிந்த ராஜபக்ச சந்தித்துள்ளமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே தனது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகளை அம்பலப்படுத்த வேண்டாம் என சட்டத்தரணிகள் ஊடாக மஹிந்த கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் அதனை நிராகரித்த அநுர சேனாநாயக்க, அரசாங்கத்தின் சாட்சியாளராக மாறப் போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்க்கிழமை, 07 ஜூன் 2016 00:00

விடுதலையானார் பசில் ராஜபக்ஷ

Written by

கறுப்புப் பண குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப் பட்ட இலங்கையின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை பிணையின் கீழ் விடுதலை செய்ய பூகோடா மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி பசில் ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்வதாக நீதிபதி அறிவித்தார்.

கறுப்புப் பணத்தை பயன்படுத்தி காணியொன்றை வாங்கியதாக பசில் ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் நிதி மோசடி புகாரில் கைதான பசில் ராஜபக்சே பிணையில் வெளியே வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுத்த நடவடிக்கையின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட நல்லிணக்கம் தொடர்பான விசேட செயலணி தமது கடமைகளை இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்துஅரசினால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பில் வினவிய போதே மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளரும் நல்லிணக்கம் தொடர்பான விசேட செயலணியின் செயலாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.கடந்த செப்டம்பர் மாதம் இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தில் பல்வேறு விடயங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தன.

நல்லிணக்கம், காணாமல் போனோர் தொடர்பான சுயாதீன பணியகம், கலப்பு நீதிமன்றம் என்பன மிகவும் முக்கியமானதாக அமைந்தன.

அந்தவகையில் தேசிய அரசாங்கமானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் மாறுபட்ட திசையில் பயணிக்க முடியாது.

இவ்வாறான நிலையில் மனித உரிமை விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட நல்லிணக்கம் தொடர்பான விசேட செயலணி தமது கடமைகளை இன்னமும் இரண்டு வாரங்களில் ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றது.

விசேட செயலணியின் ஆலோசனை செயற்பாடானது பாதிக்கப்பட்டோரை மையப்படுத்தியதாகவும், மூன்று மாதங்களில் நிறைவடையக் கூடியதாகவும் அமையவுள்ளது.

நல்லிணக்கம் தொடர்பான விசேட செயலணியின் தலைவராக மனோகரி முத்தெட்டுவேகம நியமிக்கப்பட்டுள்ளதுடன், செயலாளராக நான் அங்கம் வகிக்கின்றேன்.

இந்தச் செயலணியில், காமினி விஜயங்கொட, பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு, விசாகா தர்மதாச, தர்மசிறி பண்டாரநாயக்க, டாக்டர் பர்ஸானா ஹனிபா, சாந்த அபிமானசிங்கம், விராக் ரஹீம், பேராசிரியர் தயா சோமசுந்தரம் மற்றும் கமீலா சமரசிங்க ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.

விசேட செயலணியின் வேலைத்திட்டங்கள் ஏற்கனவே வரைபுபடுத்தப்பட்டுள்ளதோடு மாவட்ட, மாகாண அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குப் பயிற்சிகளும் தற்போது வழங்கப்படுகின்றன என்றார்.

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள உணவகங்களில் இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு தலைமை சமையல் நிபுணராக பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகளை ஒருங்கிணைத்து அந்நாட்டு குடிமக்களுடன் சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தலைநகரான பாரீஸில் உள்ள 10 உணவகங்களில் தலைமை சமையல் நிபுணராக பணிபுரிய இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இதற்காக, இலங்கை, இந்தியா, சிரியா, ஈரான், ஐவரி கோஸ்ட் மற்றும் செச்னியா ஆகிய நாடுகளை சேர்ந்த அகதி அந்தஸ்த்து பெற்ற 7 நபர்களுக்கு தலைமை சமையல் நிபுணராக பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படும்.

இது குறித்து Food Sweet Food என்ற உணவகத்தை சேர்ந்த இணை நிறுவனரான லூயிஸ் மார்ட்டின் பேசிய போது, பல்வேறு நாடுகளிலிருந்து பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் அடைய வரும் அகதிகளின் அபாரமான திறமைகளை நாம் எளிதில் மறந்து விடுகிறோம்.

ஒவ்வொரு அகதிக்கும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. அதனை வெளியே கொண்டு வந்து குடிமக்களின் மத்தியில் பெருமையை ஏற்படுத்தும் முயற்சி தான் இந்த நடவடிக்கை என்றார்.

அதாவது எதிர்வரும் யூன் 20ம் திகதி ’சர்வதேச அகதிகள் தினம்’ கொண்டாடப்படுவதால், அதே நாளில் ‘அகதிகள் உணவு திருவிழா’ என்ற இந்த நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

இதன் மூலம் வாய்ப்பு பெற்ற அகதிகள் எதிர்வரும் யூன் 17ம் திகதி முதல் யூன் 21ம் திகதி வரை தலைமை சமையல் நிபுணர்களாக பணிபுரிவார்கள்.

இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகளை ஒருங்கிணைக்க பாரீஸ் உணவகங்கள் எடுத்துள்ள இந்த முயற்சி அந்நாட்டு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவின் ஹோட்டல் கட்டணத்தை செலுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற வெசாக் விழாவினை பார்வையிடுவதற்காக சிராந்தி ராஜபக்ச சென்றிருந்தார் எனவும், அங்கு சில நாட்கள் பிரதான ஹோட்டலில் தங்கயிருந்தார் எனவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

முன்னளாள் ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ராஜபக்ச பிரான்ஸில் நடைபெற்ற வெசாக் நிகழ்வு ஒன்றை பார்வையிடுவதற்காக 2014ம் ஆண்டு சென்றிருந்தார்.

பிரான்ஸின் பாரிசில் ஒரு இரவிற்கு 25,73,746 ரூபா என்ற அடிப்படையில் அறை ஒதுக்கப்பட்டு தங்கியுள்ளார்.

இது தொடர்பான கொடுப்பனவுகளை மேற்கொள்ளுமாறு கோரி ஹோட்டல் பில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சிராந்தியுடன் இந்த விஜயத்தில் இணைந்து கொண்ட ஏனையவர்களும் ஜனாதிபதிகள் பயன்படுத்தும் அளவிலான அறைகளை ஒதுக்கீடு செய்து கொண்டுள்ளனர்.

அறைகளை ஒழுங்கு படுத்துவதற்காக தலா 700 யூரோக்களும், மினி பார்களுக்காக தலா 371 யூரோக்களும் செலவிடப்பட்டுள்ளது.

மக்களின் பணத்தைக் கொண்டு இவ்வாறு செய்யும் விரயங்களுக்கான செலவுகளை அரசாங்கமே செலுத்த நேரிட்டுள்ளது.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இவ்வாறு பணம் விரயமாக்கப்பட்டுள்ள போதிலும் தற்போதைய ஜனாதிபதி ஜீ7 மாநாட்டின் போது கூட, பிரத்தியேக விமானத்தில் பயணம் செய்யவில்லை. வர்த்தக விமானமொன்றிலேயே பயணம் செய்திருந்தார்.

தனியான விமானமொன்றில் செல்லாத காரணத்தினால் ஜப்பானிய அரசாங்கம் வழங்கிய சிகப்பு கம்பள வரவேற்பு ஜனாதிபதிக்கு வழங்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இது தொடர்பில் ஜப்பான் அரசாங்கம் வருத்தம் தெரிவித்திருந்தது, அது ஒரு பெரிய விடயமல்ல எனவும் அதனை தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் ஜனாதிபதி பதிலளிதிருந்தார்.

சாதாரண வர்த்தக விமானமொன்றில் சிங்கப்பூர் சென்று அங்கு நான்கு மணித்தியாலங்கள் காத்திருந்து அதன் பின்னர் ஜப்பானுக்கு ஜனாதிபதி சென்றிருந்தார் எனவும் இதனால் பாரியளவு பண விரயம் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிராந்தி ராஜபக்ச பிரான்ஸ் பயணம் மேற்கொண்டு நீண்ட காலத்தின் பின்னர் ஹோட்டல் பில் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்க்கிழமை, 31 மே 2016 00:00

1885 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமைகள்

Written by

வெளிநாட்டில் வாழும் இலங்கைப் பிரஜைகள் 1885 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்துறை, அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான எஸ்.பீ.நாவின்னவின் தலைமையிலேயே இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த பிரஜாவுரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக வெளிநாட்டில் வசிக்கும் 1885 இலங்கைப் பிரஜைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…