JoomlaLock.com All4Share.net

Background Video

தொழில்நுட்பம் / அறிவியல்

சனி கிரகத்துக்கு மேலே 20 புதிய நிலவுகள்

சூரிய குடும்பத்தில் சனி கிரகத்தில் 20 புதிய நிலவுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றிற்கு மக்கள் பெயர் சூட்ட ஆராய்ச்சியாளர்கள் வாய்ப்பளித்துள்ளனர்.

சூரிய குடும்பத்தில் அதிக துணை கோள்களை (நிலவுகளை) கொண்ட கோளாக வியாழன் இருந்து வந்தது. வியாழன் கோளில் 79 நிலவுகள் இருக்கின்றன. இந்நிலையில் ஸ்காட் ஷெப்பர்ட் தலைமையிலான விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ததில் சனி கிரகத்தில் புதிதாக 20 நிலவுகளை கண்டறிந்துள்ளனர். இதனை அமெரிக்காவில் உள்ள சர்வதேச வானியல் ஒன்றியத்தின் சிறு கிரக மையத்தில் ஷெப்பர்ட் தெரிவித்துள்ளார். இன்னும் 100 சின்னஞ்சிறிய நிலவுகள் இருப்பதாகவும் ஷெப்பர்ட் கூறினார்.

இதனால், சனி கிரகத்தில் உள்ள நிலவுகளின் எண்ணிக்கை 82 ஆனது. இதன்மூலம் சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகளை கொண்ட கோள் என்னும் சிறப்பை சனி பெற்றது. கண்டுபிடிக்கப்பட்ட 20 நிலவுகளுக்கும் பொதுமக்கள் பெயர் சூட்டலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதற்காக #NameSaturnMoons என்னும் ஹேஸ்டேக் உடன், தாங்கள் விரும்பும் பெயரும் அதற்கான விளக்கத்தையும் @SaturnLunacy என்னும் டுவிட்டர் பக்கத்தில் பொதுமக்கள் பதிவிடலாம். வரும் அக்., 14 முதல் டிசம்பர் 6 வரை பொதுமக்கள் விரும்பும் பெயரை பதிவிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

 

 

Read 16 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…