JoomlaLock.com All4Share.net

Background Video

தொழில்நுட்பம் / அறிவியல்

எம்பிபிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு இன்று தொடக்கம் : அண்ணாமலைப் பல்கலைகழகம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் இன்று (ஜூலை 6) புதன்கிழமை காலை தொடங்கி நடைபெறுகிறது. கலந்தாய்விற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகம் செய்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம் (ஙஆஆந), பல்மருத்துவம் (ஆஈந) ஆகிய படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 20-ம் தேதி வரை பெறப்பட்டது. மருத்துவ படிப்பில் சேர 4906 விண்ணப்பங்களும், பல் மருத்துவம் படிப்பில் சேர 1079 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. அவற்றில் 276 மருத்துவ விண்ணப்பங்களும், 52 பல் மருத்துவ விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன. மருத்துவப்படிப்புக்கு 150 இடங்களும், பல மருத்துவ படிப்பிற்கு 80 இடங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட படிப்புகளுக்கான சமவாய்ப்பு எண்கள் (தஹய்க்ர்ய் சன்ம்க்ஷங்ழ்) கடந்த ஜூன் 27-ம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் தரவரிசை பட்டியல் (தஹய்ந் கண்ள்ற்) ஜூலை 1-ம் தேதி வெளியிடப்பட்டது. கலந்தாய்வுக்கான அனுமதி கடிதத்தை தகுதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளம் ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹம்ஹப்ஹண்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ஹஸ்ரீ.ண்ய்- என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கலந்தாய்வில் பங்கேற்கலாம். மாணவர்களுக்கு தனியாக கலந்தாய்வு கடிதம் அனுப்பப்படமாட்டாது. பல்மருத்துவப் படிப்பிற்கான (ஆஈந) கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதி நடைபெறுகிறது.

Read 292 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…