JoomlaLock.com All4Share.net

Background Video

தொழில்நுட்பம் / அறிவியல்

10ம் வகுப்பு தேர்வு முடிவு : மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை, சான்றிதழ்கள் எப்போது கிடைக்கும்

 

தமிழகத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாக உள்ளது.

இதில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதில்,

மார்ச் / ஏப்ரல் 2016 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு (Retotalling) விண்ணப்பிக்கலாம். மார்ச் / ஏப்ரல் 2016 பத்தாம் வகுப்பு தேர்வெழுதி விடைத்தாள்களின் மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர் 25.05.2016 (புதன்கிழமை ) முதல் 28.05.2016 (சனிக்கிழமை) மாலை 5.45 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

மறுகூட்டல் கட்டணம்

பகுதி - I மொழி - ரூ.305/-

பகுதி - II மொழி (ஆங்கிலம்) - ரூ.305/-

பகுதி - III - கணிதம், அறிவியல் மற்றும் - ரூ.205/-

சமூக அறிவியல்

பகுதி - IV விருப்ப மொழிப்பாடம் - ரூ.205/-

மறுகூட்டலுக்கான கட்டணம் செலுத்தும் முறை

மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணாக்கர் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும்.

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு, ஜூன் / ஜூலை 2016 மார்ச் / ஏப்ரல் 2016-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுத பதிவுசெய்து, தேர்ச்சி பெறாதோருக்கும் / வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

10ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் எப்போது கிடைக்கும்

 

தமிழகத்தில் கடந்த 15.03.2016 முதல் 13.04.2016 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 25.05.2016 அன்று காலை 09.31 மணிக்கு வெளியிடப்படுகிறது.

01.06.2016 முதல் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து என்ற http://www.dge.tn.nic.in/ இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், அன்றே பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

 

 

Read 278 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…