JoomlaLock.com All4Share.net

Background Video

தொழில்நுட்பம் / அறிவியல்

இந்தியா விஞ்ஞானிகளின் புதிய சாதனை

மீண்டும் பயன்படுத்தக் கூடியவகையில், விண்ணுக்கு சென்று விட்டு பூமிக்கு திரும்பும் ராக்கெட் நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகளின் இந்த புதிய சாதனைக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். புதிய ராக்கெட் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைக்கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. இந்த ராக்கெட்டுகளில் செயற்கைக்கோள்களை பொருத்தி விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தி வருகின்றனர்.

பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும், இந்த வகை ராக்கெட்டுகளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும். அவை செயற்கைக்கோள்களை அதன் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தி விட்டு, விண்ணிலேயே வெடித்துச் சிதறிவிடும். இதை தவிர்ப்பதற்காக மீண்டும், மீண்டும் பயன்படுத்தும் (மறுபயன்பாடு விண்வெளி செலுத்து வாகனம்) வகையில் ‘ரீயூசபிள் லாஞ்சிங் வெகிகிள்- டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டர்’ (ஆர்.எல்.வி-டிடி) என்ற பெயரில் புதிய ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

அமெரிக்கா, பிரான்சு, ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்கனவே இதுபோன்ற ராக்கெட்டுகளை பயன்படுத்தி உள்ளன. விண்ணில் ஏவப்பட்டது முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட்டை சோதித்து பார்ப்பதற்கான ‘கவுண்ட்டவுன்’ நிறைவடைந்த நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று காலை 7 மணியளவில் இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. செங்குத்தாக விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்த ராக்கெட், ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் சென்றது. 45 கிலோ மீட்டர் தூரத்தை எட்டியதும் ராக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த பூஸ்டர்கள் தனித்தனியாகப் பிரிந்து வங்க கடலில் விழுந்தன. அதன் பிறகும் ராக்கெட் 65 கிலோ மீட்டர் உயரத்துக்கு மேல் பறந்தது.

பின்னர், திட்டமிட்டப்படி ராக்கெட் விண்ணில் இருந்து பூமியை நோக்கி திரும்பி வங்க கடலில் 450 கிலோ மீட்டர் தூரத்தில் வந்து விழுந்தது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வேயப்பட்டுள்ளதால் மிக பாதுகாப்பாக தரை இறங்கியது. இது இஸ்ரோவின் அடுத்த சாதனையாகும்.

Read 261 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…