JoomlaLock.com All4Share.net

Background Video

தொழில்நுட்பம் / அறிவியல்

தேர்ச்சியில் மட்டும் அல்ல பிட் அடிப்பதிலும் மாணவிகள்தான் 'டாப்'

பெங்களூரு :  ஆண்டு தோறும் பள்ளித் தேர்வுகளில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைப்பது வழக்கம். அதே சமயம் பிட் அடிப்பதிலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பிடிபடுவதாகவும் கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வெளியான செய்தி இவ்வாறு கூறுகிறது.

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தற்போது தேர்வுகள் நடந்து வருகின்றது. அதில், மாணவர்களை விட அதிக அளவில் மாணவிகளே காப்பி அடித்து, பிட் அடித்து பிடிபட்டுள்ளனர்.

காப்பி அடித்ததாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதில் 33 வழக்குகள் மாணவிகள் மீதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வறைக்கு வரும் பரிசோதகர்கள் பெரும்பாலும் ஆண்களாக இருப்பதால், அவர்கள் தங்களை சோதனை செய்ய முடியாது என்ற எண்ணத்தில் நிறைய மாணவிகள் பிட் எடுத்து வந்து மாட்டிக் கொள்வதாகவும், இனி ஒவ்வொரு பரிசோதகர் குழுவுடனும் ஒரு பெண் அதிகாரியை அனுப்ப திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சில பெண்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பிட் பேப்பர்கள் துண்டுகளாக இல்லாமல் மிக நீண்ட ஒன்றன் பின் ஒன்று மடிக்கப்பட்ட பிட்டுகளாக இருப்பதும், அவற்றை அவர்கள் தங்களது உடைகளுக்குள் மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது.

நிச்சயமாக ஒரு ஆண் பரிசோதகரால், இந்த பிட் பேப்பர்களை கண்டுபிடித்திருக்கவே முடியாது என்று கூறுகிறார் தேர்வு பறக்கும் படையின் ஒருங்கிணைப்பாளர் சங்கீதா.

தேர்வில் காப்பி அடித்தது தொடர்பாக பதியப்படும் வழக்குகள் அனைத்தும் அரசு மகளிர் கல்லூரிகளாகவே உள்ளதாகவும் உயர் அதிகாரி நிங்கே கௌடா கூறியுள்ளார்.

இதுபோன்று பிடிபடும் மாணவிகளின் பெற்றோரை அழைத்து அவர்களிடம் இது குறித்து கூறிவிடுவதாகவும், சில மாணவிகள் பிடிபட்டதும் என்ன விதமான செயலில் ஈடுபடுவார்கள் என்றும், மனநிலை பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் உயர் அதிகாரிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

Read 293 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…