JoomlaLock.com All4Share.net

Background Video

தொழில்நுட்பம் / அறிவியல்

அரசு தொடக்கப் பள்ளியில் மாணவருக்கு 2 ஆசிரியர்கள்

திருவாடானை அருகே அரசு தொடக்க பள்ளியில் ஒரே ஒரு மாணவர் படித்து வருகிறார். 2 ஆசிரியர்கள் அவருக்கு பாடம் நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியத்தில் அரசு தொடக்க, ஆரம்ப பள்ளிகள் ஒவ்வொரு ஆண்டும் போதிய மாணவர்கள் இல்லாமல் மூடப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு கீழக்கோட்டை, அறிவித்தி, டி.கிளியூர், அணிக்கி ஆகிய பகுதிகளில் இருந்த 4 பள்ளிகள், மாணவர்கள் சேர்க்கை இன்றி மூடப்பட்டன. பல பள்ளிகள் தற்போதும் 10க்கும் குறைவான மாணவர்களுடன் இயங்கி வருகின்றன. திருவாடானை அருகே நெய்வயல் ஊராட்சி நாச்சியேந்தல் கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே 5ம் வகுப்பில் படித்து வருகிறார்.

இந்த மாணவரை தவிர வேறு மாணவர்கள் இல்லாத நிலையில், பள்ளியில் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் என 2 ேபர் பணியில் உள்ளனர். இது குறித்து நாச்சியேந்தல் கிராம மக்கள் கூறுகையில், 'இப்பகுதியை சேர்ந்தவர்கள் பலர், பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு சென்று விட்டனர். அதனால் இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது. மேலும் பலர் ஆங்கில வழிக் கல்விக்காக, தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து விட்டனர். தற்போது படித்து வரும் ஒரே ஒரு மாணவரும், அடுத்த ஆண்டு 6ம் வகுப்பிற்காக வேறு பள்ளிக்கு சென்று விடுவார். அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, சிறந்த கல்வி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். உதவி தொடக்கல்வி அலுவலர் வாசுகி கூறுகையில், 'ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களும் பொதுத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வருகின்றனர். அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு நிறைய சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு இப்பள்ளியில் போதிய மாணவர் சேர்க்கை இருக்கும் என எதிர்பார்க்கிறோம்' என்றார்.

Read 436 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…