Print this page

தொழில்நுட்பம் / அறிவியல்

செவ்வாய் கிரகத்தில் இந்தியர்கள் !

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல ஆர்வம் உள்ளவர்கள் பட்டியலில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தின் மேல் பகுதியை ஆராய அமெரிக்கா ராக்கெட்டை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த ராக்கெட் , 2018-ம் ஆண்டு மே 5 ம் தேதி கலிபோர்னியாவின் வாண்டன்பெர்க் விமானப்படை தளத்தில் இருந்து அனுப்பப்படுகிறது.

விண்வெளி ஆய்வு பற்றிய ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம் என்றும் அதற்காக ஆராய்ச்சி ராககெட்டில் வைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் 'சிப்' பில் பெயரை பதியலாம் என்றும் நாசா அறிவித்து இருந்தது.

இது குறித்து நாசா வெளியிட்டுள்ள செய்தியில், செவ்வாய் கிரகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பெயர்களில் உலக அளவில் மொத்தம் 24 லட்சத்து 29 ஆயிரத்து 807 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 6 லட்சத்து 76 ஆயிரத்து 773 பேர் அமெரிக்கர்கள், 2 லட்சத்து 62 ஆயிரத்து 752 பேர் சீனர்கள், 1 லட்சத்து 38 ஆயிரத்து 899 பேர் இந்தியர்கள். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர். 

Read 282 times
Share this article

About author

Super User
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…