JoomlaLock.com All4Share.net

Background Video

சனிக்கிரகத்தை ஆராய நாசா அனுப்பிய கேஸினி விண்கலம் தனது பணியை நிறைவு செய்து தன்னைதானே அழித்துக்கொண்டது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், இத்தாலி விண்வெளி ஆயு்வு மையம் ஆகியன கூட்டாக இணைந்து கடந்த 1997ம் ஆண்டு செப். 5-ம் தேதி கேஸினி விண்கலத்தை புளோரிடாவின் கேப் கெனவரல் ஆய்வு மையத்திலிருந்து சனி கிரகத்திற்கு இந்த விண்கலத்தை செலுத்தியது.

கடந்த 2005-ம் ஆண்டு முதல் வெற்றிகரமாக செயல்பட்டு பல்வேறு புகைப்படங்கள், சனி கோள் பற்றி தகவல்களை அனுப்பி வந்தது.
தற்போது தனது 13 ஆண்டு பணியை நிறைவு செய்து ஆயுளை முடித்துக்கொண்டதாக நாசா இன்று டுவிட்டரில் தெரிவித்தது. 

இது தொடர்பாக நாசா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் , கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வந்த கேஸினி விண்கலம், இதுவரை 4.9 பில்லியன் மைல்கள் பயணித்து, 4 லட்சத்து 53 ஆயிரம் புகைப்படங்களை அனுப்பியுள்ளது.

தனது ஆயுளை இன்று மாலை இந்திய நேரப்படி 5.25 மணியளவில் நிறைவு செய்தது. அப்போது மணிக்கு 1 லட்சத்து 22 ஆயிரம் கி.மீ. வேகத்தில் சனி கோள் வளி மண்டலத்தில் மோதி வெடித்து தனது ஆயுளை முடித்துக்கொண்டது. இவ்வாறு அந்த அறிவிப்பில் நாசா தெரிவித்துள்ளது.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…